வாழும் நாட்டில் நாட்டைக்காக்க கொடுக்கும் விமானப் பயிற்சிகளில் கலக்கும் நம்மவர்!
தாயகத்தில் விடுதலைப் போரின் போது,எவ்வளவு கடினமான பயிற்சிகள் தாய்மண்ணிலேயே பெற்று இலங்கை இராணுவம் மட்டுமல்ல,இந்திய இராணுவத்தையும் திணறடித்த மறவர்கள் வாழ்ந்த பூமி எமது. இன்று புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் மண்ணில், அந்த, அந்த,நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக, ஆண்கள் கட்டாயமாக இராணுப்பயிற்சி,அல்லது சமூகத்திற்கு தேவையான முதலுதவி,வலுகுறைந்தவர்களை பராமரிக்கும் பணி, என ஏதோ ஒன்றில் பயிற்சி பெற்று இருக்கவேண்டும் என்பது சட்டம்.
இந்தச் சட்டத்திற்கமைய நாட்டைக்காக்கும்,கடற்படை,விமானப்படை,தரைப்படை என பலவற்றில் எமது இளம் சந்ததியினர் பயிற்சி பெற்று, வருகின்றனர்.இந்த வகையில் டென்மார்க்கில் வாழும் செல்வன் ஜே.ஐ.புலேந்திரன் அவர்கள் விமானப்படை வீரராக அட்டகாசமான பயிற்சிகளில் ஈடுபட்டுவருவதை இங்கே காணலாம். எம்மண்ணில் பிறந்த மறவர்களின் வீரம் தன்னம்பிக்கை, எங்கு வாழ்ந்தாலும் அவை நம்வர்களில் இருப்பது ஒன்று வியப்பல்லவே.
758 total views, 3 views today