கடுகுமணி.07 தமிழி பற்றிய ஒரு குறுஞ்செய்தி
பொருந்தல் என்னுமிடத்தே நடைபெற்ற தொல்லியலாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட தொடுகுழிகளுள் மாதிரி ஒன்றில் உள்ள நெல் கி.மு. 490 ஆம் ஆண்டைச் சேரந்தது எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அதனுடன் காணப்பட்ட எழுத்து தமிழ்-பிராமி என அடையாளம் காணப்பட்டது. ,ரண்டாவது மாதிரியிலும் ,தே நிலை காணப்படுவதால் கி.மு. 5ஆம் நூற்றாண்டிலேயே தமிழ்-பிராமி எழுத்து காணப்பட்டது என ,ந்த ஆய்விலே ஈடுபட்ட பேராசிரியர் ,ராஜன் முதலியோர் கூறுகின்றனர். ,துவரை காலமும் கி.மு. 3ஆம் நூற்றாண்டிலேயே தமிழ்-பிராமி பயன்பட்டது என நம்பிவந்தோம். ,த்தொல்லியல் கண்டுபிடிப்பால் தமிழ் மொழி கி.மு. 5ஆம் நூற்றாண்டிலேயே எழுத்து வடிவத்தினைப் பெற்றுள்ளது என நம்பக்கூடியதாயுள்ளது.
சங்க காலத்துடன் தொடர்புடைய பொருந்தலில் பேராசிரியர் கா. ,ராஜன் மேற்கொண்ட ,ரண்டு கட்டமான அகழ்வாய்வுகளில் தமிழரின் தொன்மையை வெளிப்படுத்தக் கூடிய அரிய தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. அரிய மணி வகைகளும் “வயிர” என்னும் தமிழ் பிராமி ( “தமிழி” என்று தற்போது சுட்டப்படுகிறது) எழுத்துப் பொறிப்புக் கொண்ட பழந்தமிழ்ச் சொல்லோடு கூடிய மட்கலங்களும், உணவுக்காகப் பயன்படுத்தப்பட்ட நெல் மணிகளும் கிடைத்துள்ளன.
தமிழ் எழுத்து வடிவு என்பது மௌரியர்களிடமிருந்து பெறப்பட்டது. மௌரிய அரசனான அசோகனின் காலமான கி.மு. மூன்றாம் நூற்றாண்டே “தமிழ் பிராமி” எழுத்து வடிவின் காலம் என்று ,துகாறும் சொல்லப்பட்டு வந்த கருத்துக்களை உடைப்பதாக உள்ளது. பொருந்தலில் கிடைத்திருக்கும் எழுத்துப் பொறிப்பு. பொருந்தல் அகழ்வாய்வில் கிடைத்த, ,ன்று “தமிழி” என்றும் தொல்பழந்தமிழ் என்றும் குறிப்பிடப்படும் தமிழ் பிராமி எழுத்துகளாலான “வயிர” என்னும் சொல் சங்க கால வரலாற்றைக் கி.மு. 500 அளவுக்கு முன்னோக்கி நகர்த்துகிறது.
பேராசிரியர் அ. சண்முகதாஸ்
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்.
767 total views, 3 views today