வாடகைத் தாய் இது நயன்;தார கதையல்ல!
பிரியா.இராமநாதன்.இலங்கை.
ஒரு பெண் தன் கர்ப்பப்பையை இன்னொருவரின் கர்ப்பத்தைத் தாங்குவதற்காக பயன் படுத்தும் முறைமையே சரோகசி எனப்படுகின்றது.சரோகசி என்கிற இந்த சொல் ”surrogatus” என்கிற இலத்தீன் மொழி வார்த்தையிலிருந்து உருவானது. இதன் அர்த்தம் ‘ஒருவருக்கு பதிலாக’ அல்லது ‘ஒருவரின் இடத்தில்’ என்பதே. இப்படி இன்னொருவரது கர்ப்பத்தைத் தாங்கும் பெண்ணை “சரோகேட் மதர்” அல்லது வாடகைத் தாய் என்கிறார்கள். மரபியல் மூலமாக வாடகைத் தாய்க்கும் அவர் பெற்றெடுக்கும் குழந்தைக்கும் எந்தவிதத் தொடர்பும் இருப்பதில்லை .
அண்மைக்காலங்களில் இந்திய சினி உலகில் சில நடிகைகள் வாடகை தாய் மூலம் தங்களது குழந்தைகளை பெற்றெடுத்துக்கொண்டபோது,மாறுபட்ட கண்ணோட்டத்தில் இந்த முறைமை பற்றிய விமர்சனங்கள் முன்வைக்கப் பட்டாலும், உண்மையில் குழந்தையின்மை என்கிற அவஸ்தையில் வாடும் பல தம்பதியினருக்கு இந்த சரகோஷி முறையானது மிகப்பெரிய வரப்பிரசாதமே .ஐ.வி.எஃப் முறை செய்தும் கர்ப்பம் தரிக்கவியலாத பெண்கள், கர்ப்பப்பை பலகீனமான பெண்கள்,அல்லது கர்ப்பப்பை தொற்றுநோய் தாக்குதலுக்கு ஆளாகி கர்ப்பம் தரிக்க முடியாமல் போகும் பெண்கள் போன்ற பலரும் இன்னொரு பெண்ணின் உதவியுடன் தன் குழந்தையை பெற்றெடுக்க விரும்பலாம் அப்படிப்பட்ட பெண்களுக்கான ஓர் சிறந்த தேர்வுமுறையே சரகோஷி .
வாடகைத் தாய் மூலம் பிறக்கும் குழந்தை, ‘Deoxyribo Nucleic Acid’ எனப்படும் டி. ஏன்.எ.பரிசோதனை மூலம் இன்னாரின் குழந்தை என்று நிரூபிக்கப் பட வேண்டும். இல்லாத பட்சத்தில் அந்தக் குழந்தை உருவாகக் காரணமாக இருந்த உயிரியல் பெற்றோர்கள் (biological parents) அக்குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளவேண்டும் என இது தொடர்பான சட்டம் கூறுகின்றது. எது எவ்வாறாயினும், மேலைத்தேய நாடுகளைப் போலல்லாது பழமையில் ஊறிய நாடுகளில் இம்முறை சிறிது தாழ்ந்த கண்ணோட்டத்துடனேயே பார்க்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தீபாவளி வாழ்த்து, தீபாவளி மலிவு விற்பனை போட்ட கடைகளில் மலிவு விற்பனை எல்லாம் எடுக்கவும் சாதமாரண நாளில் உள் வசனங்களை அந்த அந்தக்கடைக்கு விடவும்.பின்பக்கமும் யஸ்மின் சிலக் மலிவுவிற்பனை எடுக்கவும்.
2ம் பக்கம் செல்வராஜா மட்டுமே 20 வருட சேல் இருக்கு.
557 total views, 3 views today