ஜேர்மனியில் நாளைய மாற்றம் திரைப்படத் தொடக்க விழா

- ஏலையா க.முருகதாசன் – ஜேர்மனி
ஜேர்மனியில் பல குறும்படங்களை இயக்கித் தயாரித்தவரும், நாளைய நாம் எனும் தொடர் நாடகத்தைத் தயாரித்து வெளியிட்டவருமாகிய சிபோஜி சிவகுமாரன் அவர்களின் இயக்கத்தில் உருவாகவிருக்கும் நாளைய மாற்றம் எனும் முழுநீளத் திரைப்படத்திற்கான பூஜை 24.09.22 அன்று, மாலை ஐந்து மணியளவில், ஜேர்மனி கம் காமாட்சி அம்பாள் ஆலயத்தின் முன்றலில் பொங்கலிடப்பட்டும்,மங்கல விளக்கேற்றலுடனும் பிரதம குருக்கள் பிரம்மசிறி பாஸ்கரக்கரக்குருக்கள் அவர்களினால் பூஜை போடப்பட்டு தொடக்கி வைக்கப்பட்டது.
இப்படப் பூஜையில் இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராகிய பிரான்ஸ் நாட்டைச்:சேர்ந்த பாலசிசிங்கம், நாடக,குறும்பட திரைப்பட நடிகருமாகிய தயாநிதி தம்பையா,நாடக குறும்பட நடிகராகிய அருண்மொழித் தேவன் ஆகியோருடன் நாளைய நாமில் நடித்த ஏலையா க.முருகதாசன்,திருமதி.அன்னபூபதி குமாரசாமி,பொன். ரமா,திலக்,ரவின்,திருமதி.விக்கி.நாதன்,திருமதி.மயில்விழி,பிரபாகரன்,திருமதி.செல்வி.இரஞ்சன்,ரம்ஜித்,ரம்ஜிகா,திருமதி யோகராஜா,சாந்தினி,பிராங்பேர்ட் நந்தன் ஆகியோரும்; கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நாளைய மாற்றம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் திலக் அவர்களினால் கிளாப் அடித்து படப்பிடிப்பு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அதனையடுத்து கம் காமாட்சி அம்பாள் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் தேநீர் விருந்தும், இரவு விருந்துபசாரமும் இடம்பெற்றதுடன் நாளைய நாம் நாடகத்தில் நடித்த நடிகர்களுக்கு இயக்குநர் சிபோஜி சிவகுமாரனால் சான்றிதழ்கள் அளித்து மதிப்பளிக்கப்பட்டதுடன் இவ்விழாவில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் பாலசிங்கம்,அருண்மொழித்தேவன்,தயாநிதி.தம்பையா,ஆகியோருக்கு பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் இயக்குநர் உரையாற்றும் போது நாளைய நாம் தொடர் நாடகத்தில் நடித்த நடிகர்களும் நாளைய மாற்றம் திரைப்படத்திலும் நடிப்பார்கள் எனக் குறிப்பிட்டிருந்தார்.கலந்துரையாடலுடன் இவ்விழா நிறைவு பெற்றது.தஙகராஜா அவர்களும் இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராவார் என்பது குறிப்பிடத்தக்கது.