சட்ட பூர்வமான கல்விச் சான்றிதழ்களும், நமது தொழில் முன்னேற்றங்களும்!


இளைஞன் கமலநாதன்.சுகன் அவர்களுடன் ஒரு சந்திப்பு!

தாயகத்தை விட்டு புலம் பெயர்ந்து வாசிக்கும் நாம் வசிக்கும் அந்ந அந்த நாடுகளில் உள்ள சட்ட திட்டங்களுக்கு அமையவே தொழில் செய்கின்றோம். யேர்மனியில் ஆரம்பகாலத்தில் 1977 களில் வந்தவர்கள் மொழியறிவு பெற்று, யேர்மனியர்களுக்கு ஈடான தொழில்களில் ஈடுபட முடியவில்ல. ஆனால் இன்று அந்த நிலமை இல்லை. இன்றைய சந்ததியினர் யேர்மன் மொழியினை தாரளமாக பேச, எழுதக்கூடியவர்களாக உள்ளனர். காப்புறுதி, வங்கிக்கடன், வீடுவிற்பனை முகவர்கள் என பலதுறையிலும், அவர்களுக்கு உள்ள தனித்திறமை, அனுபவங்கள், இவற்றை வைத்து இத்தொழிலை சிறப்பாகச் செய்கின்றனர். இருந்தாலும் சட்டதிட்டங்களுக்கு அமைய தமது துறையை மேம்படுத்தினால் மட்டுமே உயர்ச்சியடைய முடியும்.

இக்கல்விகள் சம்மந்தமாக அவற்றுடன் தொடர்புடைய இளைஞன் கமலநாதன்.சுகன் அவர்களை நேர்கண்டபொழுதில் அவர் தந்த சில செய்திகளை இங்கு பதிவு செய்கின்றேன். Kaufmann /Kauffrau für Versicherungen und Finanzen (seit 01.08.2006 umbenannt ) மேற்படி கல்வியை சட்டபூர்வமாக கற்று சான்றிதழ் பெறுவதற்கான வழிமுறைகளை, அதற்கான வசதிகளை தாம் செய்துகொடுக்க தயாராக உள்ளதாக தெரிவித்தார். எமது ஆசை இத்தொழிலில் ஈடுபடும் ஒவ்வொருவரும்,சரியாகவும், நேர்த்தியாகவும், இத்தொழில் புரிவதற்கான சட்ட அங்கிகாரம் (IHK) உடையவராக வேண்டும் என்பதே.

2004ம் ஆண்டு முதல் 2007 வரை DEBEKA Versicherungskaufmann மூன்று வருடங்கள் கற்று சான்றிதழ் பெற்ற நீங்கள், இன்றுவரை Versicherungsmakler கடமை புரிகிறீர்கள். இத்துறையில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்ன?
முதலில் இத்துறையில் கல்வி கற்க A/L (Abitur) பரீட்சையில் சித்திபெற முயன்றதைச்சொல்லலாம். அடுத்து தாய் நாடக இருந்தாலும், இங்காக இருந்தாலும் பெரிதும் ஈடுபடாத ஒரு துறையாக அன்று இருந்தது,அதனால் அத்துறைகளில் அனுபவம் உடைய நம்மவர்கள் யேர்மனியில் அரிதாகவே இருந்தனர். அதனால் இத்துறையில் மேலதிக கல்வியை எமது சுயமுயற்சி மூலம் இங்கேதான் கற்க முடிந்தது. ஆங்கிலம் பேசும் நாடுகளில், எமது மக்களுக்கு போதிய மொழி அறிவு இருந்துருக்கும், யேர்மனியில் மொழியோடும் போராடியே அன்று நம்மவர்கள் முன்னேறினார்கள் என்பதை இச்சந்தர்ப்பத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன். என்றார்.

இத்துறையில் நீங்கள் மட்டும்தான் கற்று யேர்மனியில் தொழில் புரிகிறீர்கள்? காரணம் பல இளையவர்கள் இதனை செய்வதால் இக்கேள்வி இங்கு அவசியமாகிறது. பலர் கற்று தொழில் புரிகிறார்கள் என்பது மறுப்பதற்கு இல்லை, ஆனால் அவர்களில் பல மாதச் சம்பளத்தில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்வதால், அங்கு தமது சுயமுயற்சியால் தனிப்பட்ட முறையில் தங்களை உயர்த்திட முடிவதில்லை. அதற்கான சுதந்திரமும் அங்கில்லை.
இத்துறையில் Versicherungsmakler அவை Erlaubnis nach § 34d Abs. 1 GewO நான் கற்று தனிப்பட்ட முறையில் வேலை செய்பவன் என்பதில் எனக்கு பெருமகிழ்வும், திருப்தியும் உண்டு. பலர் இவற்றை கற்று இருந்தாலும், சுய தொழிலாக செய்வது குறைவு என்றே நான் கருதுகிறேன். எனது தரவுகளில் தவறு இருந்தால் அதற்கான பதிலை என்னுடன் நேர்கொண்டு பெறலாம். தொடர்பு இலக்கம் கீழே தரப்படுகின்றது. இந்த இளைஞனின் ஊக்கம் உச்சம் பெற வாழ்த்துவோம். தொடர்பு இலக்கம்: (49) 0179 7190138

1,133 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *