பொன்னியின் செல்வன் நாவலை இதுவரை வாசிக்காதவர்களையும் பொன்னியின் செல்வன் திரைப்படம் இப்போ வாசிக்க வைத்துவிட்டது!
பொன்னியின் செல்வன் திரைப்படம் சொல்லியது என்ன?
ஏலையா க.முருகதாசன்-யேர்மனி
பொன்னியின் செல்வன் என்றவுடன் தமிழுலகத்திற்கு பளிச் சென்று தெரிய வருவது கல்கி சஞ்சிகையின் ஆசிரியராக இருந்த கிருஸ்ணமூர்த்தி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற நாவலாகும்.
எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் கல்கி சஞ்சிகையில் வாரந்தோறும் கிட்டத்தட்ட நான்கு பக்கங்களில் தொடர்கதையாக ஐந்து வருடங்களுக்கு மேலாக வெளிவந்த இந்தக் கதை நாவலாகி தனிநூலாகியது.
இக்கதையை வாசித்த சாதாரண வாசகர்களிலிருந்து பiடைப்பாளிகள் எனத் தொட்டு திரைப்பட தயாரிப்hளர் வரை தமக்குள் இக்கதைக் களம் பற்றியும்,இக்கதை மாந்தர் பற்றியும்; வேறு வேறு கற்பனைகளை மனதில் உலாவவிட்டிருப்பார்கள்.
சோழ மன்னர்களின் பரம்பரைத் தெபாடர்பான சுந்தரசோழனின் பிள்ளைகளோடு இணைந்த இக்கதை பல்வேறுபட்ட கதாபாத்திரங்களை உள்ளடக்கியும்,சோழ மண்டலம் தவிர்த்து பாண்டிய மன்னருடனான சண்டை, இலங்கையில் காலூன்றியமை போன்ற பெரும் வரலாற்றைத் திரைப்படமாக எடுப்பதென்றால் அது சுலபமான செயலல்ல.கதையின் ஒவ்வொரு வரியும் பல்வேறு நிகழ்வுகளை கற்பனையுடன் பிரதிபலித்து நின்றமையை கல்கியில் இத்தொடரை வாசித்திருந்தோர் அறிவர்.
சம்பவங்களால் நிறைந்திருந்த இக்கiதையை திரைப்படமாக்க நடிகர் எம்.ஜி.ஆரிலிருந்து (எம்.ஜி.ஆர் திரையிலே தீந்தமிழ்க்காவியம் என அறிவித்தலையும் செய்து இருந்தார்.) கமலகாசன் வரை முயற்சித்தும் இதனுடைய பிரமாண்டம் இவர்களைத் தயங்க வைத்தது. ஒரு முறைக்கு பலமுறை இந்நாவலை முழுமையாக வாசித்தது மட்டுமல்ல,தான் வாசித்த ஒவ்வொரு பக்கத்திலுமுள்ள கதை மாந்தர்களையும், சம்பவங்கள் நடக்கும் களங்களையும் முழுமையாக உள்வாங்கி அதுபற்றிய கற்பனை வளத்தை பெருக்கி ஒவ்வொரு அங்குலம் அங்குலமாக குறிப்பெடுத்தால் மட்டுமே இந்நாவலை ஒரு தரமான திரைப்படமாகத் தயாரித்து பார்ப்போரை,சோழ மன்னரின் காலத்து கொண்டு போக முடியுமென்பதை மணிரத்தினம் நிலைநாட்டியுள்ளார்.
பொன்னியின் செல்வன் கதைக்களம் இலங்கையுடனும் தொடர்புள்ளதால்தானோ இப்படத்தினை தயாரிக்க லைக்கா மொபைல் குழும உரிமையாளர் சுபாஸ்கரன் ஒப்புக் கொண்டமை சில விடயங்களை இவர்தான் இதைச் செய்வார் என்று காலம் தீர்மானித்து விடுகின்றது என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டாகும்.பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெற்றிக்கு முழுக் காரணமும் இலங்கையரான சுபாஸ்கரனே என்பதை மறுக்க முடியாது.
இயக்குநர்களின் கற்பனைக்கும் சுதந்திரத்திற்கும் தயாரிப்பாளர்கள் கொடுக்கும் சுதந்தரமே,தயாரிப்பாளர்களின் பணத்தை வீணடிக்காத இயக்குநர்களால் மட்டுமே தமது ஆற்றலை வெளிப்படுத்தும் மனத்தடையற்ற நிலை உருவாகும்.பொன்னியின் செல்வன் எடுக்கப் போகிறேன் என்று சொன்ன மணிரத்தினத்திடம் பாகுபலி மாதிரி இருக்குமா என்று தயாரிப்பாளர் கேட்ட போது „ இல்லை கல்கி எழுதியது போல இருக்கும்“ என்ற மணிரத்தினம் சொன்ன பதிலானது, ஆயிரம் ஆண்டுக்கு முன்புள்ள சோழரின் கதையை சரியாக தான் உள்வாங்கியுள்ளதையும், இப்படத்திற்கான தனது திட்டமிடலில் தான் கொண்டுள்ள உறுதியும் சரியான முறையில் மக்களைப் போய்ச் சேரும் என்ற அபார நம்பிக்கையுமே ஆகும். மணிரத்தினத்திற்கும் சுபாஸ்கரனுக்கும் நடந்த உரையாடலில் „சரி எடுப்போம்“ என சுபாஸ்கரன் தனது முடிவை இரண்டு நிமிட இடைவெளிக்குள் சொன்னதானது மணிரத்தினம் ஒரு நவீன சிந்தனையுள்ள இயக்குநர் எனவே பொன்னியின் செல்வனை தமிழ்த் திரைப்பட உலகம் இதுவரை சந்திக்காத படமாக கொண்டு வருவார் என்ற பெரும் நம்பிக்கையுமேயாகும். தயாரிப்பாளராக ஒரு இலங்கைத் தமிழன்தான் இருந்திருக்க வேண்டும் என்று காலச்சூழ்நிலை இலங்கைத் தமிழர்களுக்கு பெருமையுடைத்தே.
பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கான கதாபாத்திரத் தேர்வு தொடங்கி கதைக்களம் வரை நுணுக்கமான சிந்தனைக்கூடாக செப்பனிடப்பட்டிருக்கின்றது என்பதைப் படம் பார்த்தோர் அறிவர்.
பொன்னியின் செல்வன் நாவலை வாசித்தோர்,தமது நினைவில் உள்ளதை நினைத்து அவை இப்படத்தில் இல்லையே என நினைக்கலாம்.ஆனால் நாவல்களை படமாக்குவதில் உள்ள ஒரு உபாயமாக நிகழ்வுகளை சுருக்கி அதன் மையக்கருத்தும் நிகழ்வுப் பொலிவும் களப்பொலிவும் சிதையாமல் உயிர்த்துடிப்புடன் எடுப்பதுந்தான் ஒரு திரைப்பட முறையாகும்.மிகக் கவனமாக அதில் கவனம் செலுத்தியுள்ளார் இயக்குநர். சரித்திரக் கதைசார்ந்த திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு இரசிகனின் முன்னால் கதை நடந்த இடத்துக்கே அவனை அத்திரைப்படம் கொண்டு செல்லுமானால் அத்திரைப்படம் வெற்றிப்படமே.கிராபிக்ஸ் வரைகலை இப்படத்தில் இடம்பெற்றிருந்த போதும்,இக்கலை தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாதவாறு இயல்புத்தன்மையுடன் காட்சிகளை தோன்ற வைத்தமையும் நுட்பத்துறையை பயன்படுத்திய முறையின் வெற்றியேயாகும்.நடிகர்களின் விம்பங்களைத் தோற்கடித்து கதாபாத்திரங்களை மட்டுமே கண்முன்னே நிறுத்தி மணிரத்தினம் ஒரு எழுச்சிகரமான வெற்றியை தோட்டத்தரணியின் துணையுடனும் தனதாக்கிக் கொண்டுள்ளார்.
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தை ஆவலுடன் எதிர்நோக்க வைத்துவிட்டது இத்திரைப்படம். அதுமட்டுமல்ல பொன்னியின் செல்வன் நாவலை இதுவரை வாசிக்காதவர்களையும் வாசிக்க வைத்துவிட்டது.
936 total views, 3 views today