நியூஸிலாந்தில் ஒரு தமிழ் மணி!.
-அப்துல் ஹமீத்
தமிழகத்தின் தொன்மைத் துறைமுகமாம் நாகப்பட்டினத்திற்கும் நியூஸிலாந்துக்கும் என்ன தொடர்பு?
New Zeeland தொல்பொருள் அருங்காட்சியகத்தில் பேணிப் பாதுகாக்கப் பட்டுவரும்,500 ஆண்டுகள் பழமைவாய்ந்த அந்த மணியில், தமிழ் எழுத்துகள்!!! அதனை கைகளால் தொட்டுத் தூக்கிப் பார்க்க, எமக்கு மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது, அதுவும் கையுறை அணிந்துகொண்டு.
இந்த மணியின் வயது?
15ம் நூற்றுண்டுக்கும் 18ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலம் என ஆய்வாளர்கள் கணித்துள்ளார்கள். நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்ட ஒரு பாய்மரக் கப்பல், புயலில் சிக்குண்டு அக்கப்பலின் சிதிலங்கள் கரையொதுங்கியபோது, ஒரு மரத்தின் வேர்களுக்குள் சிக்குண்டிருந்த இந்த வெண்கலமணியைக் கண்டெடுத்த நியுஸிலாந்தின் ஆதிக்குடிகளான, ‘மாஒரி’ இனத்து மக்கள், இது என்னவென்று தெரியமால், உணவு தயாரிக்க, இதனடியில் நெருப்பு மூட்டி உருளைக் கிழங்குகளை அவிப்பதற்குப் பயன்படுத்தி வந்தார்களாம். நீண்ட காலத்தின் பின்னர் 1899ம் ஆண்டு, இதனைக் கண்டெடுத்த வரலாற்று ஆய்வாளர் திரு.றுடைடயைஅ ஊழடநளெழ, இந்த வரலாற்றுச் சின்னத்தை அருங்காட்சியகத்தில் பாதுகாப்பதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளார். 166அஅ உயரமும், 155அஅ சுற்றளவும் கொண்ட இந்த மணியில் பொறிக்கப் பட்டிருந்த எழுத்துகள் எந்த மொழிக்குரியவை? எந்த நாடு எனக் கண்டுபிடிப்பதற்காக எடுத்துக்கொண்ட முயற்சியில் இது தமிழ் மொழி என்பதுவும் அந்த நாளில் மிக முக்கிய துறைமுகங்களில் ஒன்றான நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்டுவந்த கப்பலின் மணி என்பதுவும் தெரியவந்துள்ளது. இந்த மணியில் இப்போதும் தெளிவாகத் தெரியும் வகையில்,பொறிக்கப்பட்டுள்ள வரி ‘ முகைய்யத் தீன் பாகசுடைய கப்பல் மணி’ இஸ்லாமியராயினும் தம் தாய்மொழியாம் தமிழை தமது மொழி அடையாளமாய் மதிக்கும் ஒருவரது கப்பல் எனப்புரிந்தது. வாணிபத்தில் சிறந்து விளங்கிய நம் தொன்மைத் தமிழரின் அடையாளக் குறியீடாக தமிழ் எழுத்துகளைக் கண்ணுற்றபோது பெருமையால் நெஞ்சு நிமிர்ந்தது.
626 total views, 3 views today