சிகண்டிக்குள் கூடு பாய்ந்த கவிதா, சுயம்பு ஆகத் துருத்தித் தெரிகிறாள்.
நூல் நயம் 01
— சாம் பிரதீபன்- (மெய் வெளி) இங்கிலாந்து
கவிதா லட்சுமியின் “சிகண்டி படித்துக்கொண்டிருக்கிறேன். எனக்குத் தெரியும், இது எனது மிகக் காலதாமதமான ஒரு வாசிப்பு. ஒரு நூலுக்கு நிகழும் ஆகக் கூடிய அவமானம் என்பது அதைப் படிக்காமல் விடுவது. தாமதமான வாசிப்பென்றாலும் “சிகண்டி”யை என் வீட்டுக்குள் நான் அவமானம் செய்வதில் இருந்து என்னை மீட்க முடிந்திருக் கிறது.
“ஒரு பறவையைக் கொல்வது எப்படி”
என்ற ஒரு கவிதையை படித்துவிட்டு அந்த நூலை விரித்த அந்தப் பக்கத்தோடு என் மேசையில் கவிழ்த்து வைத்துவிட்டு கண்களை மூடியபடி அந்த கவிதையோடு பேசிமுடித்துவிட்டு இதை எழுதிக்கொண்டிருக்கிறேன். சொற்கள் புரிந்து போனால் அவை சொற்கள் அல்ல சங்கதிகள். வார்த்தைகள் புரிந்து போனால் அவை வார்த்தைகள் அல்ல விஞ்ஞாபனங்கள். இந்த கவிதை தூக்கி நிறுத்திய பாடுபொருள் இதற்கு முன்னர் யாரும் பேசாததல்ல. பல படைப்பாளிகளால் தொடப்பட்டுப் போன ஒரு கரு நிலை தான். ஆனால் அந்த பாடு பொருளை கவிதா பாடிய விதம் ஆள் மனதைப் புரட்டிப் போடுகின்றது.
“எந்த நூலை நாம் புரட்டிப் புரட்டிப் படிக்கிறோமோ அவையெல்லாம் நல்ல நூல்களாவதில்லை. படிக்கும் போதெல்லாம் எந்த நூல் எம்மைப் புரட்டிப் புரட்டிப் போடுகின்றதோ அவை மிகச் சிறந்த நூல்களாகின்றன”
சிகண்டிக்குள் கூடு பாய்ந்த கவிதா, சுயம்பு ஆகத் துருத்தித் தெரிகிறாள். கழுகுகள் மாத்திரம் வேறு விதம் அல்ல! கவிதா போன்றவர்களும் தான்.
686 total views, 2 views today