அரசியலில் நன்றி மறத்தல்
பெண் என்ற காரணத்தால், சில தலைமைகள்
- விமல் சொக்கநாதன்.இங்கிலாந்து.
நியூசிலாந்து நாட்டில் 2017இல் பிரதமராக தெரியப்பட்டபோது ஜசின்டா ஆர்டனின் வயது 37. உலகிலேயே மிக இளைய வயதில் ஒரு ஆட்சித் தலைவியாக பொறுப்பேற்ற ஜசின்டாவை ஒரு துருவ நட்சத்திரம் என்று நியூசிலாந்து மக்கள் மட்டுமல்ல, உலகின் தலையாக நாடுகளின் தலைவர்களே பாராட்ட தயங்கவில்லை. காலச்சக்கரத்தை ஐந்தரை ஆண்டுகள் முன்னோக்கி நகர்த்தி நிகழ்காலத்திற்கு கொண்டு வருவோம்.
2023 ஜனவரி மாதம் 19ஆம் திகதி வியாழக்கிழமை புகழ்பூத்த பிரதமர் ஜசின்டா தன் தொழிற்கட்சியின் இவ்வாண்டின் முதற்கூட்டத்தில் பேசும்போது ஒக்டோபர் மாதம் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்றும், பெப்ரவரி 7ஆம் திகதி தாம் பிரதமர் பதவியைவிட்டு வெளியேறுவதாகவும் அறிவித்து அதிர்ச்சியூட்டினார்.
கோவிட் தடுப்பு மருந்துக்கு எதிராக, இங்கு பிரிட்டன் உட்பட உலக நாடுகள் பலவற்றிலும் சமூக ஊடகங்களில் நடத்தப்படும் விஷமப் பிரசாரம் நியூசிலாந்து நாட்டிலும் பிரதமர் ஜசின்டாவுக்கு எதிரான வன்முறை அச்சுறுத்தல்களாக உருப்பெற்றது. கோவிட் பெருந்தொற்று காலத்தில் மரணங்களைத் தடுக்க அவர் கையாண்ட முறைகள் பெரிதும் பாராட்டப்பட்டன. எவ்வாறாயினும் தற்போது 43 வயதான ஒரு துடிதுடிப்பான மங்கை பொல்லாத அரசியலில் தீர்மானங்களை மேற்கொள்வது மிகமிகச் சிரமம் என்பதை ஜசின்டா உணர்ந்ததாக தனக்கு எதிராக குவிக்கப்பட்டுள்ள பகடைக்காய்களை உணரத் தொடங்கினார்.
சில ஆண்களிடம் காணப்படும் ஆணாதிக்கப்போக்கு – கல்யாணம் செய்து பிள்ளைபெற்று வளர்ப்பதுதான் பெண்கள் வேலை. சமையற்கட்டில்தான் அவர்கள் பொழுது கழியவேண்டும் – நாட்டை நிர்வகிப்பது அல்ல! இந்த பெண் அடிமைகளை ஆக்கிரமிக்கும் ஆணாதிக்கப்போக்கு மேலைநாடு கீழைநாடு என்று பாகுபாடு இல்லாமல் கடைப்பிடிக்கப்படுகிறது.
பாரதநாட்டின் தன்னிகரற்ற தலைவியாக விளங்கியவர் பிரதமர் இந்திராகாந்தி. சீக்கியர்களின் புனித கோயிலான அமிர்தசரஸ் பொற்கோயிலை ஆக்கிரமித்த தீவிரவாத பின்தரன்வாலே போன்றவர்களை எச்சரித்த பிரதமர் இந்திரா ராணுவத்தை அனுப்பி அவர்களை அப்புறப்படுத்தப்போவதாக அறிவித்தார். ஆனால் பயங்கரவாதிகள் கேட்கவில்லை. புனிதக்கோயில் கொடியவர்களின் கூடாரமாக மாறக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டபடி, பிரதமர் இந்திராவின் ராணுவம் பொற்கோயிலுக்குள் புகுந்தது. மதவாத பின்தரன்வாலே கொல்லப்பட்டார். சீக்கிய தீவிரவாதம் அடக்கப்பட்டது. ஆனால் தலைவி இந்திராவின் தலைக்கு குறிவைக்கப்பட்டது.
1984ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் திகதி அன்னை இந்திராவின் மெய்க்காப்பாளர்களான இரு சீக்கிய காவல் வீரர்கள் (?) ஆயுதம் தாங்காத ஒரு பெண் தலைவியை பின்புறமாக சுட்டு வீழ்த்தினார்கள். சத்வந்த சிங், கேறார் சிங் ஆகிய இரு சீக்கிய காவலர்களுக்கும் 1989 ஜனவரி 6ஆம் திகதி தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது! “அவள் ஒரு பொம்பிளை! ஏன் இந்த ஆட்டம் ஆடுகிறாள்?” என்ற சில ஆண்களின் காழ்ப்பு மனப்பான்மை அயல்நாடான பாகிஸ்தானிலும் நிலைத்திருந்தது.
முதன்முதலாக ஒரு முஸ்லிம் நாட்டின் தலைவியாக தெரிவு செய்யப்பட்ட பெண்மணி பெனாசிர் புட்டோ. பாகிஸ்தானின் முதலாவது ஜனநாயக பிரதமர் சுல்பிக்கார் அலியின் புதல்விதான் பெனாசிர். 1990களில் இரு தடவை பாகிஸ்தானின் பிரதமராக வழிநடத்திய பெனாசிர் 2007ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 27ஆம் திகதி மூன்றாவது தடவையாக பிரதமர் பதவிக்கு போட்டியிட வந்த பெனாசிர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது அவரது வண்டியை நோக்கிச்சுட்ட தற்கொலைக்குண்டுதாரி 15 வயதான பிலால் தன்னைத்தானே வெடிக்க வைத்து பெனாசிர் உட்பட அவரது ஆதரவாளர்கள் பலரைக் கொன்றான். பெண்கள் படிக்கக் கூடாது, வேலைக்குப் போகக்கூடாது என்று இன்றும் ஆப்கானிஸ்தானில் அல்லோலகல்லோலம் செய்துவரும் தலீபன் இக்காலத்தில் பாகிஸ்தான் குழு ஃ அல்குவேதா ஆகியவற்றை சேர்ந்தவன்தான் இந்த பிலால். பெனாசிரை சுட்டதும் அவர் காருக்குள் தன் மருத்துவர் மடியில் வீழ்ந்தாராம். தங்கள் கார் எந்தவித போலிஸ் பாதுகாப்பும் இல்லாமல் மருத்துவமனைக்கு சென்றதாக மருத்துவர் கூறியபோது பெனாசிர் – அல்கொய்தா கொலையில் பல சதித்திட்டங்கள் பின்னிப் பிணைந்து இருந்தன என்பது தெரியவரும்.
ஒரு பெண் என்ற காரணத்தால், அவர் மீது கடும் கோபமும் பொறாமையும் கொண்ட சில ஆண் தலைமைகள், தலைவியை கவிழ்த்து குப்புற தள்ளியது இங்கு பிரிட்டனிலும் நடந்தது உண்மையானது. இரும்புத் தலைவியான மார்கிரெட் தாச்சர் அம்மையார் 1979 முதல் 1990 வரை பிரதமராகப் பதவி வகித்தார். பிரிட்டனில் நீண்டகாலம் பதவிவகித்த ஒரு பெண் இவரே என்று பாராட்டப்பட்டவர். மிகவும் சர்ச்சைக்குரிய ஒரு தலைவி என்று வெளிநாட்டவர்கள் மட்டுமல்ல, பிரிட்டிஷாரே பாராட்டிய ஒருவர். ‘கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும்’ என்று வலியுறுத்திய இவர் தொழிற்சங்கவாதிகளையும், பிரிட்டிஷ் தொழிற்சங்கங்களையும் துளைத்து எடுத்தார். இவரது காலத்தில் கொழுந்து விட்டெரிந்த IRA IRISH பயங்கரவாதிகள் இவரையும் அமைச்சர்களையும் ஒட்டுமொத்தமாக கொன்றுவிட செய்யப்பட்ட சதியிலிருந்து உயிர் தப்பினார்.
1990இல் நடந்த கட்சித் தலைவி தேர்தலில் இவரது ஆண் சகாக்களே பொறாமையால் இவரைக் கவிழ்த்து துழாn ஆயதழச என்பவரை கட்சித் தலைவராகவும் பிரதமராகவும் தெரிவுசெய்தார்கள். அன்று இலண்டன் டவுனிங் தெரு 10ஆம் இலக்க பிரதமர் இல்லத்திலிருந்து கடைசித் தடவையாக மார்கிரெட் தாச்சர் வெளியேறும்போது கண்களில் கண்ணீர் இருந்ததை பலர் கவனித்தார்கள். அதேபோல, நியூசிலாந்து பிரதமர் ஜனவரி மாதம் 24ஆம் திகதி கடைசியாக வெளியேறும்போது, அவரை நேசித்த மக்கள் அவரை கட்டி அணைத்து கண்ணீர் சிந்தி வழி அனுப்பினர்.
இலங்கையில் கணவனை இழந்த கைம்பெண், அரசியலுக்குப் புதிய ஸ்ரீமாவோ – 1960களில் இலங்கையின் பிரதமராகவும், உலகின் முதலாவது பெண் பிரதமராகவும் பதவியேற்றார். தரப்படுத்தல், சிங்களம், ஆட்சி மொழி இப்படி பல இன்னல்கள் தந்த ஒரு கட்சியான, சுதரக்கட்சியின் தலைவி சிறிமாவோ பண்டாரநாயக்க. ஆனால் அவர்கள்,பொருளாதாரக் கொள்கையில் சிறப்பாக இருந்தார். இலங்கையில் செழிப்பாக வளரும் மிளகாய், வெங்காயம் போன்ற பலவற்றை இறக்குமதி இன்றி தன்னிறைவு கொள்ளவைத்தவர்.அவரது எதிராளிகளும், சொந்தக் கட்சியினரும் அவரது குடியுரிமைகளை பறித்து அவரை ஒரு செல்லாக்காசாக்கி விரட்டிவிட்டார்கள். இன்று ஒட்டுமொத்த இலங்கையிலும் அறகலய,ஆர்ப்பாட்டம், பணநெருக்கடி, நாட்டின் பொருளாதாரமே வங்குரோத்;தாகி நிற்கிறது! ஏனென்று யாரும் ஆராய்வார்களா?
ஒரு குடும்பத்தலைவி கண்ணீர் வடித்தால் அந்தக் குடும்பம் உருப்படாது என்று சொல்வார்கள். ஒரு நாட்டின் தலைவி கண்ணீர் வடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டால் அந்த நாடு உருப்படாது என்பது என் கருத்து. 1990களில் பிரிட்டனில் ஆளும் கட்சியாக இருந்த மார்கிரெட் தாச்சரின் கம்பீரமான கன்சவேடிவ் கட்சி எங்கே? இன்று 2023இல் பிரிட்டனில்; ஆளும் கட்சியாக இருக்கும் போறிஸ் ஜோன்சன், ரிஷி சுனாக் ஆகியோரின் கன்சவேடிவ் கட்சி எங்கே?
996 total views, 6 views today