இரட்டை அடையாளங்களுடன் எனது போராட்டம்! சுவிஸ் சுபா உமாதேவன் பேச்சு!

சுபா உமாதேவன், ஜெனிவாவில் உள்ள சர்வதேச மற்றும் மேம்பாட்டு ஆய்வுகளின் பட்டதாரி நிறுவனத்தில் சர்வதேச சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற சர்வதேச உறவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். கனடாவில் உள்ள ஒட்டாவா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆய்வுகள் மற்றும் நவீன மொழிகளில் இளங்கலைப் பட்டம் பெற்றார். யுனெஸ்கோ இன்டர்நேஷனல் பீரோ ஆஃப் எஜுகேஷன் நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக தனது சர்வதேச வாழ்க்கையைத் தொடங்கினார். இலாப நோக்கற்ற நிர்வாகத்தில் தனது பத்தாண்டு கால வாழ்க்கையில், அவர் பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளில் கவனம் செலுத்தினார். அவர் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் தென் அமெரிக்காவில் உள்ள பல நாடுகளில் மேம்பாட்டுத் திட்டங்களை நிர்வகித்தார் மற்றும் உலகளாவிய மெகாட்ரெண்ட்களை அடையாளம் காணவும் மாற்றத்திற்குத் தயாராகவும் மேலாளர்களுக்கு உதவும் உத்திகளை உருவாக்கினார். DROSOS FOUNDATION இல் சேர்வதற்கு முன், அவர் குழந்தைகளுக்கான உரிமைகள் மற்றும் பெண்களுக்கான சம வாய்ப்புகளை மேம்படுத்தும் அமைப்பான Plan International Switzerland-ஐ வழிநடத்தினார். சுபா உமாதேவன் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பேரவை உறுப்பினர். சுபா உமாதேவன் உரையின் தமிழாக்கம் இங்கே. -கலாநிதி கல்லாறு சதீஷ்-

இரட்டை அடையாளங்களுடன் எனது போராட்டம்: தமிழ் மரபின் மூலம் கற்றதும் பெற்றதும்:
எனக்கு இரண்டு வயதாக இருக்கும்போது எனது சொந்த நாடான இலங்கையை விட்டு வெளியேறினேன்.அந்த நேரத்தில் நாடு போர்ச் சூழலில் இருந்தது. நூறுஆயிரக்கணக்கான தமிழ் அகதிகளின் மத்தியில் எங்கள் குடும்பமும் இருந்தது. மே 1985 இல் நாங்கள் சுவிட்சர்லாந்தில் உள்ள பெர்னுக்கு வந்தோம்.

நான் இங்கு வந்து வளர்ந்ததிலிருந்து நான் என்னை தமிழ் மற்றும் சுவிஸ் என்று இரண்டு மொழியையும் சேர்ந்தவள் என்று கருதிக் கொள்கிறேன். ஸ்விட்சர்லாந்து தான் எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து எனக்கு அறிந்த தாயகம். ஆனால் அதை எப்போதும் என் சொந்த தாயகம் போல நினைத்துக் கொள்ள முடியுமா? இல்லை, என்னால் உணர முடியவில்லை. நான் உண்மையில் இரட்டை அடையாளத்துடன் வளர்ந்தேன். அதிலேயே போராடிக் கொண்டிருக்கிறேன். என் பெற்றோர் போரில் இருந்து தப்பி ஓடிய போது அவர்கள் பாதுகாப்பாக ஒரு புதிய வாழ்க்கையை உருவாக்க வேண்டும் என்று நினைத்தனர், நம்பினர்.நான் என்,சகோதரர் என எங்கள் இருவருக்குமான வாழும் வாய்ப்பை முற்றிலும் சுவிட்சர்லாந்து எங்களுக்கு வழங்கியது. இந்த நாடு எனது விழுமியங்களை வடிவமைத்தது. எனக்கானகலாச்சாரம், நேரம் தவறாமை மீதுள்ள தீவிரத்தையும் அளித்தது. இருந்தும் ஓர் அகதியாக வளர்ந்தேன்.

மாற்றும் தலைமை என்றால் வழிநடத்துதல் என்று பொருள்.நிச்சயமற்ற தன்மைகளைப் புரிந்து கொண்டு சிக்கலின் போது அதன் பொருள் உணர்ந்து விடாமுயற்சியுடன் கற்றுக் கொள்வது எப்படி என்பதை இங்கேதான் தெரிந்து கொண்டேன்.இதுஎனக்கு இங்கே கற்பிக்கப்பட்ட ஒரு பெருமதிப்புள்ள பாடமாகும். ஒரு மாற்றத்தை விரும்பும் தலைமைப் பண்புள்ளவராக இருப்பது எப்படி என்பதை எனது பயணங்களில் மூலம் கற்றுக் கொண்டேன்.அதன் வழியாக எனது சுய அடையாளத்தை கண்டறிகிறேன். நமக்குத் தேவையான தன்மைகளை மாற்றிக் கொள்ளாமல் உண்மையாக இருங்கள். அப்போது நாம் யார் என்பதை அறிய ஊக்கமளிக்கும். அதனால்தான் தலைமைப் பொறுப்பில் நாம் நினைத்ததை விட நேர்நிலையான மாற்றம் சாத்தியமாக இருந்தது. உண்மையில் உங்கள் சொந்த அடையாளத்தை விடாமல் பற்றித் தழுவிக் கொள்ளுங்கள். அதன் மூலம் உங்கள் ஆற்றலைத் திறந்து கொள்வீர்கள். ஒருவேளை அது இல்லை என்று நீங்கள் கற்பனை செய்யலாம். அது எப்போதும் எளிதானதல்ல. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு என்றால் என்னால் இங்கு நின்று பேச முடிந்திருக்காது.

இங்கே நின்று பேச முடிந்தது உங்களைத் தழுவியதன் மூலமாகத்தான். என் அடையாளத்தைத் தழுவி நிற்கும் என் வேர்கள் என் பாரம்பரியம். அது உண்மையில் என்னை ஆழமான முறையில் பாதித்தது. அதுவே இன்று நான் தலைமைப் பொறுப்பில் இருக்க உதவியது. இந்த அறிவுதான் அகதிப் பெண் நிலையிலிருந்து போராடி எழுந்து,பன்னாட்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக என்னை உயர்த்தி அடையாளம் காட்டியது என்று சொல்வேன். சிறு வயதிலிருந்தே இருவழிப்பாதை பயணத்தில் வளர்ந்தேன். இந்த வழிசெலுத்தல் எனக்குப் புதிதானது.எனக்கு வீட்டில் மிகவும் வித்தியாசமான உலகங்கள் இருந்தன. நாங்கள் வீட்டில் தமிழ் பேசினோம். பள்ளியில், நான் ஜெர்மன் கற்றுக்கொண்டேன். வீட்டில், நாங்கள் சாதம் மற்றும் கறி சாப்பிட்டோம் பள்ளியில், நான் சீஸ் மற்றும் தொத்திறைச்சிகளை விரும்பினேன். இன்று நான் என் சுவிஸ் நண்பர்கள் அதிகமாக சாதம் மற்றும் கறி சாப்பிடுகிறார்கள்.

ஆனால் வீட்டில் ஏ.ஆர.ரஹ்மானின் இசையைக் கேட்போம். பள்ளியில் நான் ஸ்பைஸ் கேர்ள்ஸிடம் ஜாம் செய்து பழகினேன். இரட்டை வாழ்க்கை போல் இது எனக்குத் தோன்றியது என்றாலும் நான் அப்படித்தான் இருந்தேன். உண்மையில் இரண்டு கலாச்சாரங்களுடன், நான் போராடிக் கொண்டிருந்தேன்.எனக்கான அடையாளம் எது என்கிற அடையாள நெருக்கடியுடன் போராடிக் கொண்டிருந்தேன்.

ஆரம்பத்தில் நான் தமிழனாக இருக்க விரும்பமுடியாத,இந்த அடையாளத்துடன் நான் போராடினேன்.அதைத் தழுவ முடியவில்லை. இங்கே புடவை அணிந்திருந்ததைப் பார்த்ததும் எனக்கு வெட்கமாக இருந்தது.எனவே அப்படி நான் இருக்க விரும்பவில்லை. என் வகுப்பில் இருந்த ஒரே பழுப்பு நிறப் பெண் நான் என்று உணர்ந்தேன். என் தோலின் நிறம் பற்றிக் கேலி பேசப்பட்டது.அப்போது நான் ஒரு பாதுகாப்பற்ற மனநிலையில் இருந்தேன்.பெரிய கண்கள் நீண்ட கறுப்பு முடி பெரும்பாலும் கவனித்தலுக்கும் கேலிக்கும் இலக்காகவும் இருந்தன. இனவாத கருத்துக்கள் ஒலித்தன. என் ஆசிரியர்களால் என் பெயரைச் சரியாக உச்சரிக்க முடியவில்லை. என் அடையாளம் என்னை மிகவும் தாழ்வுணர்ச்சியுடன் உணர வைத்தது.

இந்த நேரத்தில் என் பெற்றோர் உருவாக்கிய தமிழ்க் கலாச்சாரத்தில் நான் அடித்தளமிடப்பட்டேன்.நம் பாரம்பரியத்தில் இருந்து நான் விலகி விடுவேனோ என்று அவர்கள் கவலைப்பட்டார்கள். அதனால் என் தாய்மொழியான தமிழைக் கற்றுக் கொடுத்தார்கள். மேலும் அவர்கள் என்னை பரதநாட்டியம் கற்றுக்கொள்ள ஊக்குவித்தார்கள். எனது தலைமைத்துவ திறன்கள் ஒரு நடன ஆசிரியராகவே எனக்கு கிடைத்தது. பரதநாட்டியம் என்கிற ஒன்று என் கற்றலுக்கு உண்மையில் ஆதாரமாக இருந்தது. அது எனக்கு உண்மையில் தன்னம்பிக்கை கொடுத்தது. எனது தமிழ் அடையாளத்தைத் தழுவி, இன்று நான் உண்மையில் உங்கள் முன்னால் நிற்கும்போது நிறைய நான் கற்றுக்கொண்டேன்.

எதிர்பார்க்கக்கூடியவற்றை ஏற்றுக்கொள்ளுங்கள். உண்மையில் சமூகத்தை உருவாக்க உங்களுக்குத் தெரியும். நம்மைப் போல் பலதரப்பட்ட தலைவர்கள் தேவை. சவால்கள் நமக்கு எல்லாரிடமிருந்தும் வரும். நமக்கு இப்போது எவ்வாறான தலைவர்கள் தேவை?

இன்று நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு வெவ்வேறு குரல்கள் தேவை. நமது சொந்தக் கண்ணோட்டங்கள் சவாலாக எதிர்ப்பு தேவை. எதிர்காலத்தில் வழிநடத்த புதிய திறன்கள் வேண்டும். நான் என் முதுகலை முடித்தவுடன் உலகளாவிய வளர்ச்சியில் பங்கெடுக்கும் அமைப்புகளில் பணியாற்றும் பாக்கியமும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தன.ஆப்பிரிக்காவின் சஹாரா தென் அமெரிக்கா பகுதிகளில் பணியாற்றிய போது அம்மக்களின் ஆதரவு தேவைப்பட்டது. எனவே இது உலகின் பன்முகத்தன்மையைக் காட்டுகிறது. இந்த மாற்றங்கள் எப்படி சாத்தியப்பட்டன? இவற்றை உணர்வுபூர்வமாக வெளிப்படையாகப் பகிரும் தைரியம் எனக்கு கிடைத்தது எப்படி? நான் உண்மையான ஆர்வத்தை உணர்ந்ததால்தான். அதனால் நான் மனம் திறக்க முடிவு செய்தேன். அம்மக்கள் நான் யார் என்று அறிவதில் ஆர்வமாக இருந்தார்கள். இங்கே பகிர்ந்து கொண்ட கதை மூலம் நான் இரண்டு வெவ்வேறு கலாச்சாரங்களை இணைத்துள்ளேன். மாலி, சியரா லியோன் மற்றும் கென்யா போன்ற பகுதிகளில் மக்களுடன் உரையாடலில் இருந்தேன் என்றாலும் நான் தனித்துவத்துடன் இருந்தேன் தனியளாகவும் இருந்தேன்.

நான் இறுதியாக சுவிஸ் தமிழரானேன். இன்று மக்கள் அடிக்கடி என்னிடம் எப்படி நீங்கள் நீங்களாக இருக்கிறீர்கள் என்று கேட்பார்கள். எப்போதும் நீயாக இரு என்கிற பதில் மிகவும் எளிமையானது. ஏனெனில் நான் யார், எங்கிருந்து வந்தேன் என்பதை அறிந்து கொண்டேன் நான் அதில் பெருமைப்படுகிறேன். என் குழந்தை பருவத்திலேயே மொழிச் சிக்கலை உணர்ந்தேன். தமிழ் ஜெர்மன் என்று மொழிபெயர்த்தது என் பெற்றோர்கள் மற்றும் அவர்களின் நண்பர்கள். அது ஒன்பது வயதில் தொடங்கியது, அது மிகவும் சவாலான அனுபவமாக இருந்தது. ஏனென்றால் நான் கடின என் வயதுக்கு மீறிய மொழியை மொழிபெயர்க்க வேண்டியிருந்தது. அது என் வயதிற்கு அப்பாற்பட்டது. ஆனால் நான் மீண்டும் நினைக்கும் போது அது எனக்குக் கொடுத்த அனுபவங்களையும் அதற்காக நான் பயன்படுத்திய குறிப்பிடத்தக்க திறன்களையும் நினைக்கும் போது இன்று சற்றே வளர்ந்த வயதில் அது அப்போது எனக்கு உதவியதாகவே தோன்றியது.

நாம் சிறந்த முறையில் வளர்க்கக்கூடிய ஒரு வழி விடாமுயற்சி. கற்றல், மேலும் ஊக்குவித்தலில்தான் உண்மையில்
தலைமை தாங்கும் தன்மை உள்ளது. எப்படி இருக்க வேண்டும் என்பதை இளைஞர்களுக்கு கற்றுத்தர முடியும். தலைவர்கள் மற்றும் நாம் அவர்களை ஊக்குவிக்க முடியும். ஆர்வத்துடன் கூட்டு மனப்பான்மை, நேர்நிலை சிந்தனை,படைப்புத் திறன்களை இன்று கல்வியில் அவசியம் கற்க வேண்டும். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதில் பெரிய பங்கு வகிக்கிறார்கள். எனது பல ஆசிரியர்களின் பேச்சைக் கேட்டிருந்தால் நான் இன்று இங்கு இருந்திருக்கமாட்டேன். அதே நேரத்தில் என் திறமையில் நம்பிக்கை வைத்த ஆசிரியர்கள், என்னை வழிநடத்தியவர்கள் என்னை ஊக்கப்படுத்தவும் செய்தனர். இன்று நான் எரஉய வழிசெலுத்துவதில் சிறந்து விளங்குகிறேன். சங்கடம், என் பலம், அசௌகரியம் போன்றவையும் என் வேலையின் முக்கிய பகுதிகள்தான்.

நான் கேள்விகள் கேட்கிறேன்; நான் புரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்; நான் கற்றுக்கொள்ளவும் செய்கிறேன். நான் மிகவும் விரும்பியது இணைப்புதான்.அனைத்து தரப்பு மக்களும். எனது சக ஊழியருடன் இணைவதை நான் விரும்புகிறேன். நான் இனி வெட்கப்படவில்லை, நான் நேசிக்கிறேன், இன்று சேலை அணிவதில் பெருமை படுகிறேன். நான் என் பாரம்பரியத்துக்காகப் பெருமைப்படுகிறேன். நான் எங்கு வளர்ந்தேன், அதனால் பெருமை அடைகிறேன். நான் சுவிஸ் தமிழ். 15 வயது சுபாவிற்கு இதெல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்று அந்த உறுதியைப் பெற்றிருக்க முடியும்?
நான் பலவீனமாக பார்த்த அனைத்தும் இறுதியில் வலிமையானதாக மாறும்.உண்மையில் அதுவே அவர்களை செழிக்கச் செய்கிறது VUCA என்பது நிலையற்ற தன்மை,நிச்சயமற்ற தன்மை,சிக்கலான தன்மை மற்றும் தெளிவின்மையைக் குறிக்கிறது. இச்சூழலில்.சுருக்கமாக,சிலவற்றைக் கூறி விடைபெற விரும்புகிறேன்.முதலில் இரண்டு எண்ணங்களுடன், தழுவி உங்கள் அடையாளத்தைக் கண்டறியுங்கள். உங்கள் உண்மையான அடையாளம் உங்களுக்குத் தைரியத்தை அளிக்கும். இரண்டாவதாக, உண்மையாக ஆர்வமாக இருங்கள். சவாலான விதிமுறைகள் உங்களை உருவாக்கத் தூண்டுகிறது. தடைகளை உடைத்து சமூகத்தை உருவாக்குங்கள். இது தான் இன்று உலகிற்குத் தேவையான மாற்றம். மிக்க நன்றி.

919 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *