‘உயிர் மிகும் ஓவியங்கள்’ – நடன நாடகம்
நோர்வேயில் அரங்கம் 2023
ரூபன் சிவராஜா – நோர்வே
நோர்வேயில் கலாசாதனா நடனக் கலைக்கூடத்தின் 21வது ஆண்டு விழா ஜனவரி 22, பாறூம் பண்பாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. அரங்கம் இரண்டு பகுதிகளாக இடம்பெற்றது. நிகழ்வின் முதற்பகுதி சிலப்பதி காரத்தில் மாதவி ஆடிய ‘பதினோராடலைத் தழுவிய குழுநடனங்கள்’. இரண்டாம் பகுதி ‘உயிர்மிகும் ஓவியங்கள்’ – நடன நாடகம்.
ஓவியம் என்பது காண்பியற் கலை. அந்தக் கலையை இன்னொரு கலை வடிவத்தினூடாக அல்லது பல கலை இலக்கிய வடிவங்களின் ஊடாக வெளிப்படுத்துவதென்பது புதியதோர் காட்சிபூர்வ அனுபவத்தைக் கொடுத்தது. ஒரு ஓவியனையும் அவனது ஓவியங்களையும் வெளிப்படுத்துகின்ற நடன நாடகப் படைப்பாக அது உருவாக்கப் பட்டிருந்தது.
மூன்று அம்சங்களை இந்நடன நாடகம் வெளிப்படுத்தியது. ஓவியர் ரவிவர்மாவை ஒர் ஓவியனாக அறிமுகப்படுத்தியது
அவனது ஓவியங்களின் தன்மைகளையும் பல்வகைமைகளையும் பிரதிபலித்தது.
இந்தியக் கலைமரபின் அழகியற் கோட்பாடுகளையும் வெளிப்பாட்டு முறைமைகளையும், வடிவங்களையும், பேசுபொருட்களையும் ரவிவர்மாவின் ஓவியங்கள் எவ்வகையாகப் பிரதிபலித்தன என்பதைப் பேசியது. ரவிவர்மா! இந்திய ஓவியக்கலையில் தவிர்க்க முடியாத பெயர். அவரது ஓவியங்கள்,அழகியல்,ஆன்மீகம் மற்றும் கதைசொல்லல் ஆகியவற்றால் அடையாளப்படுத்தப்படக்கூடிய அவரது படைப்புத் தளங்கள் விசாலமானவை.
நவரசங்கள், அவதாரங்கள், புராண மற்றும் இதிகாசங்கள், கடவுள்களின் புதிய வடிவங்கள், அரசவை மனிதர்கள்;, இந்திய அழகிகள், வாழ்வின் துன்பங்கள் என்றவாறான அம்சங்கள் அனைத்தும் ரவிவர்மாவின் ஓவியங்களின் கருப்பொருட்களாகினரவிவர்மாவின் ஓவியங்களினூடும் நாட்டியத்தினூடும் இந்தியக் கலைகளின் அடிப்படை அங் கங்களைத் தரிசிக்கும்;படியாக ‘உயிர்மிகும் ஓவியங்கள்’ அரங்க நிகழ்வு அமைந்தது.
இந்த நடன அரங்கம் இந்திய கலையின் அடிப்படை அம்சங்களை ரவிவர்மாவின் பார்வையில் அதாவது ரவிவர் மாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓவியங்கள் மூலம் பிரதிபலித்தது.ஆன்மீகம்,கதைசொல்லல்,அழகியல்,குறியீடு, யதார்த்;த வாதம், காதல், காமம் ஆகியன ஆடல்களாலும் பாடல்களாலும் இசையாலும் கதைகளாலும் நிரப்பப் பட்டிருந்தன.
ஓவியனும் அவனது ஓவியங்களும் ஆடற்கலையினூடு வெளிப்பட்டன. பேசுபொருளின் அடிப்படையிலான இந்தப் படைப்பில் பாரதி, பாரதிதாசன் பாடல்கள், கவிதைகள், செய்யுட்கள்,திருக்குறள், இசை, கதைசொல்லல் எனக் கலையினதும் இலக்கியத்தினதும் பல்வேறு அம்சங்கள் சங்கமித்தன. நடனக் கலைஞர்களின் சிறப்பான ஆற்றுகை,அரங்கப்பொருட்கள்,உடைகள்,ஒளியமைப்பு,பிரமாண்ட மேடை என்பன நடன நாடகத்தின் நேர்த்தியான வெளிப்பாட்டிற்குத் துணைநின்றன. இந் நடன நாடகத்திற்கான எழுத்துருவை உருவாக்கியவர் கவிதா லட்சுமி. நடன அமைப்பு,நெறியாள்கை, ஒளி யமைப்பும் அவரே. அரங்கக் கலைப்பொருள் உருவாக்கம் கரிகாலன் கதிர் மற்றும் விஸ்ணுசிங்கம் கண பதிப் பிள்ளை. பாடல்களுக்கான மற்றும் பின்னணி இசை அஷ்வமித்ரா.
தமிழர் ஆடற்கலை உட்பட்ட இந்தியக் கலை மரபுகளின் தனித்துவத்தன்மைகளை வரலாற்று, சமூக ஆய்வுப் பார்வையில் நோக்குவதற்கும் காட்சிபூர்வ அனுபவத்தைப் பெறுவதற்கும் இத்தகு படைப்புகள் துணைநிற்கக் கூடியன.
கவிதா பேசுபொருள் அடிப்படையிலான நடனம்,நடன நாடகங்கள் மற்றும் தனது மாணவிகளின் அரங் கேற்றங்களைத் தொடர்ச்சியாக படைப்பாக்கம் செய்து வருபவர். கவிதாவின் புத்தாக்கக் கலைப்படைப்புகளின் வரிசையில் ‘உயிர் மிகும் ஓவியங்கள்’ நடன நாடகமும் இணைந்து கொண்டது. கலை ஆர்வலர்களுக்கு நல்லதோர் கலா அனுபவத்தை இந்நிகழ்வு வழங்கியது. நிகழ்ச்சியை மூன்று வார்த்தைகளில் விபரிக்கலாம்:வண்ணமயம்! கலைநயம்!! உள்ளடக்கக் கனதி!!
1,293 total views, 2 views today