உயிரின் மொழி
மனித உடல் நமது பிரபஞ்சத்தில் காணக்கூடிய மாபெரும் அதிசயத்தில் ஒன்றாகும். நீங்கள் உங்களை ஒரு தனிப்பட்ட „பொருளாக“ நினைத்துக் கொள்ளலாம், ஆனால் உண்மையில், நீங்கள் கோடிக்கணக்கான தனித்தனி உயிரணுக்களால் உருவாக்கப்பட்டுள்ளீர்கள். இந்த செல்கள் சிறிய உயிரியல் ரோபோக்கள் போன்றவை. இவை பல கோடி ஆண்டுகளாக தம்மை மேம்படுத்தி தற்போது நமக்கு உயிரைக் கொடுக்கும் செல்களாக மாறியுள்ளன. இவை எதையும் விரும்பவும் இல்லை, இவை எதையும் உணரவும் இல்லை. இவை அப்படியே தங்கள் பாட்டுக்கு இருக்கின்றன. ஆனால் இவை அப்படி என்ன தான் வேலை செய்கின்றன? இந்தக் கட்டுரையில்,உயிரின் மொழியையும், இந்த புத்தியில்லாத செல்கள் அதை எப்படிப் பேசுகின்றன என்பதையும் ஆழமாகப் பார்ப்போம்.
உங்கள் செல்கள் பெரும்பாலும் நீர் மூலக்கூறுகள் மற்றும் புரதங்களால் ஆனவை. ஒவ்வொரு செல்லிலும் பல கோடி புரதங்கள் உள்ளன, அவை செல்லின் செயல்பாட்டைப் பொறுத்து 10.000 க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகைகள் ஆகும். புரதங்கள் நமது உயிரின் மொழியில் உள்ள சொற்கள் என்று எடுத்துக்கொள்ளலாம். இவை அனைத்துக்கும் முக்கியமானவை அமினோ அமிலங்கள் என்று அழைக்கப்படும் amino acids ஆகும். ஒரு மொழியில் காணப்படும் எழுத்துக்களைப் போன்று, உயிரின் மொழியின் அடிப்படையாக அமினோ அமிலங்களை எடுத்துக் கொள்ளலாம். இவற்றில் 21 வெவ்வேறு அமினோ அமிலங்கள் உள்ளன. சுமார் 50 அமினோ அமிலங்களை ஒன்றாக இணைத்தால், அவை ஒரு புரதத்தை உருவாக்குகின்றன, இது ஒரு வார்த்தை போன்றது. இந்த புரதச் சொற்களில் பலவற்றை ஒன்றாக இணைத்தால், உயிரியல் பாதை எனப்படும் வாக்கியம் கிடைக்கும்.
உயிரின் மொழியில் 20.000 புரதச் சொற்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரு சராசரி புரதத்தில் 375 அமினோ அமிலங்கள் உள்ளன. செல்கள் எந்த நேரத்திலும் ஆயிரக்கணக்கான வேலைகளைச் செய்ய வேண்டும். ஆனால் ஒரு செல் எப்போதாவது உயிரின் மொழியைப் பேசுவதை நிறுத்தினால், அது அந்நேரமே இறந்துவிடும்.
இதில் கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய விஷயம் உள்ளது. செல்கள் உயிரின் மொழியைப் பேசுவதற்கு ஒரு உதவியாளர் தேவைப் படுகிறார். அவர் தான் டிஎன்ஏ (DNA) ஆகும். டிஎன்ஏ என்பது ஒரு நீண்ட வரிசை கட்டளைகள் போன்றது, இதில் அனைத்து புரத அகராதிகளும், செல்கள் செயல்படத் தேவையான கையேடுகளும் உள்ளன. உங்கள் டிஎன்ஏவின் மீதமுள்ளவை உயிரின் மொழிக்கான இலக்கண புத்தகம் போன்றது, அதாவது செல்கள் எந்த புரதங்களை உருவாக்க வேண்டும், எப்போது உருவாக்க வேண்டும், அவற்றில் எத்தனை தேவை என்று சொல்கிறது.
சுருக்கமாகச் சொல்லப்போனால், உயிரின் மொழி என்பது மிகவும் சுவாரசியமான ஒரு மொழி ஆகும். இது புத்தி இல்லாத செல்களை வைத்து மிகவும் புத்திசாலித்தனமான மனிதர்களை உருவாக்கி இயக்குகின்றது என்பது மிகவும் அதிசயமான விஷயம் ஆகும். இந்த சாத்தியமற்ற எந்திரங்கள் உண்மையிலே உள்ளன என்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. எனவே அடுத்த முறை நீங்கள் மனச்சோர்வடைந்தால், உங்களை உயிருடன் வைத்திருக்க ஒன்றிணைந்து செயல்படும் கோடிக் கணக்கான சிறிய உயிரியல் ரோபோக்களால் நீங்கள் உருவாக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள், மனச்சோர்வு பறந்துபோய்விடும்.
நோர்வேயில் அரங்கம் 2023
‘உயிர் மிகும் ஓவியங்கள்’ – நடன நாடகம்
ரூபன் சிவராஜா – நோர்வே
நோர்வேயில் கலாசாதனா நடனக் கலைக்கூடத்தின் 21வது ஆண்டு விழா ஜனவரி 22, பாறூம் பண்பாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.அரங்கம் இரண்டு பகுதிகளாக இடம்பெற்றது. நிகழ்வின் முதற்பகுதி சிலப்பதி காரத்தில் மாதவி ஆடிய ‘பதினோராடலைத் தழுவிய குழுநடனங்கள்’.
இரண்டாம் பகுதி ‘உயிர்மிகும் ஓவியங்கள்’ – நடன நாடகம்.
ஓவியம் என்பது காண்பியற் கலை. அந்தக் கலையை இன்னொரு கலை வடிவத்தினூடாக அல்லது பல கலை இலக்கிய வடிவங்களின் ஊடாக வெளிப்படுத்துவதென்பது புதியதோர் காட்சிபூர்வ அனுபவத்தைக் கொடுத்தது. ஒரு ஓவியனையும் அவனது ஓவியங்களையும் வெளிப்படுத்துகின்ற நடன நாடகப் படைப்பாக அது உருவாக்கப் பட்டிருந்தது.
மூன்று அம்சங்களை இந்நடன நாடகம் வெளிப்படுத்தியது
ஓவியர் ரவிவர்மாவை ஒர் ஓவியனாக அறிமுகப்படுத்தியது
அவனது ஓவியங்களின் தன்மைகளையும் பல்வகைமைகளையும் பிரதிபலித்தது.
இந்தியக் கலைமரபின் அழகியற் கோட்பாடுகளையும் வெளிப்பாட்டு முறைமைகளையும், வடிவங்களையும், பேசுபொருட்களையும் ரவிவர்மாவின் ஓவியங்கள் எவ்வகையாகப் பிரதிபலித்தன என்பதைப் பேசியது.
ரவிவர்மா! இந்திய ஓவியக்கலையில் தவிர்க்க முடியாத பெயர். அவரது ஓவியங்கள்,அழகியல், ஆன்மீகம் மற்றும் கதைசொல்லல் ஆகியவற்றால் அடையாளப்படுத்தப்படக்கூடிய அவரது படைப்புத் தளங்கள் விசாலமானவை.
நவரசங்கள், அவதாரங்கள், புராண மற்றும் இதிகாசங்கள், கடவுள்களின் புதிய வடிவங்கள், அரசவை மனிதர்கள்;, இந்திய அழகிகள், வாழ்வின் துன்பங்கள் என்றவாறான அம்சங்கள் அனைத்தும் ரவிவர்மாவின் ஓவியங்களின் கருப்பொருட்களாகினரவிவர்மாவின் ஓவியங்களினூடும் நாட்டியத்தினூடும் இந்தியக் கலைகளின் அடிப்படை அங்கங்களைத் தரிசிக்கும்;படியாக ‘உயிர்மிகும் ஓவியங்கள்’ அரங்க நிகழ்வு அமைந்தது.
இந்த நடன அரங்கம் இந்திய கலையின் அடிப்படை அம்சங்களை ரவிவர்மாவின் பார்வையில் அதாவது ரவிவர் மாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓவியங்கள் மூலம் பிரதிபலித்தது. ஆன்மீகம், கதைசொல்லல்,அழகியல்,குறியீடு, யதார்த்;தவாதம்,காதல்,காமம் ஆகியன ஆடல்களாலும் பாடல்களாலும் இசையாலும் கதைகளாலும் நிரப்பப் பட்டிருந்தன.
ஓவியனும் அவனது ஓவியங்களும் ஆடற்கலையினூடு வெளிப்பட்டன. பேசுபொருளின் அடிப்படையிலான இந்தப் படைப்பில் பாரதி, பாரதிதாசன் பாடல்கள், கவிதைகள், செய்யுட்கள், திருக்குறள், இசை, கதைசொல்லல் எனக் கலையினதும் இலக்கியத்தினதும் பல்வேறு அம்சங்கள் சங்கமித்தன.
நடனக் கலைஞர்களின் சிறப்பான ஆற்றுகை,அரங்கப்பொருட்கள்,உடைகள்,ஒளியமைப்பு,பிரமாண்ட மேடை என்பன நடன நாடகத்தின் நேர்த்தியான வெளிப்பாட்டிற்குத் துணைநின்றன.
இந் நடன நாடகத்திற்கான எழுத்துருவை உருவாக்கியவர் கவிதா லட்சுமி. நடன அமைப்பு,நெறியாள்கை, ஒளி யமைப்பும் அவரே. அரங்கக் கலைப்பொருள் உருவாக்கம் கரிகாலன் கதிர் மற்றும் விஸ்ணுசிங்கம் கண பதிப்பிள்ளை. பாடல்களுக்கான மற்றும் பின்னணி இசை அஷ்வமித்ரா.
தமிழர் ஆடற்கலை உட்பட்ட இந்தியக் கலை மரபுகளின் தனித்துவத்தன்மைகளை வரலாற்று, சமூக ஆய்வுப் பார்வையில் நோக்குவதற்கும் காட்சிபூர்வ அனுபவத்தைப் பெறுவதற்கும் இத்தகு படைப்புகள் துணைநிற்கக் கூடியன.
கவிதா பேசுபொருள் அடிப்படையிலான நடனம், நடன நாடகங்கள் மற்றும் தனது மாணவிகளின் அரங் கேற்றங்களைத் தொடர்ச்சியாக படைப்பாக்கம் செய்து வருபவர். கவிதாவின் புத்தாக்கக் கலைப்படைப்புகளின் வரிசையில் ‘உயிர் மிகும் ஓவியங்கள்’ நடன நாடகமும் இணைந்து கொண்டது.
கலை ஆர்வலர்களுக்கு நல்லதோர் கலா அனுபவத்தை இந்நிகழ்வு வழங்கியது. நிகழ்ச்சியை மூன்று வார்த்தைகளில் விபரிக்கலாம்: வண்ணமயம்! கலைநயம்!! உள்ளடக்கக் கனதி!!
845 total views, 2 views today