தேடி வரும் பூநாரைகளின் காலை வாரி விடாதீர்கள்!
-எம்.லோகி (காணுயிர் புகைப்பட கலைஞன்) – யேர்மனி
என்னுடைய பெயர் லோகேஸ்வரநாதன். நான் ஒரு வனவிலங்கு புகைப்பட கலைஞன். எனக்கு மிருங்கள், பறவைகளை புகைப்படம் எடுப்பதில் ஒரு அதீத நாட்டம்.
மன்னர் பகுதியில் முதல் முதலாக பிளமிங்கோ பறவைகளின் வருகை தந்துள்ளன என வலைத்தளம் மூலம் அறிந்து கொண்டேன். அதை முதலில் என்னுடைய கமராவின் மூலம் பதிவு செய்ய வேண்டும் என்ற ஆவலுடன் இந்தவருடம் (2023) ஜனவரி மாதம் 8 ஆம் திகதி ஜேர்மனி இருந்து என்னுடைய பயணத்தை மன்னார் நோக்கி தொடங்கினேன்.
சுமார் நான்கு ஐந்து நாட்கள் மன்னாரில் தங்கியிருந்து இருந்து இந்த அருமையான புகைப்படங்கள் எடுக்க அரிய வாய்ப்பு கிட்டியது.
பிளமிங்கோ பறவைகள்
ஆஸ்திரேலிய கடல்பகுதியில் இந்த பறவைகள் அதிகமாகவே உள்ளது. அதுபோல் இந்தியாவில் குஜராத் மாநிலம் கட்ச் வளைகுடா கடல் பகுதியில் அதிகமான பிளமிங்கோ பறவைகள் உள்ளன. இலங்கை கரையோரத்தில் உள்ள யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் கிளிநொச்சி கலப்பு பகுதியிலும் பிளமிங்கோ பறவைகளை காணலாம்.
இந்த பறவைகள் உருவ அளவு 125 முதல் 145 சென்டி மீற்றர் வரை இருக்கும். இளஞ்சிவப்பு கால்களையும், நீண்ட கழுத்தையும் உடைய நீர் பறவை. உடல் வெள்ளை நிறமாக இருக்கும். ஆனால் இறக்கைகளை மடக்கி வைத்திருக்கும் போது அதில் உள்ள சிவப்பு நிற சிறகுகளான திட்டு தெரியும்.
ஆண்டுதோறும் ஜனவரி அல்லது பெப்ரவரி மாதங்களில் பூநாரை என்று சொல்லக் கூடிய பிளமிங்கோ பறவைகள் வருவது வழக்கம். இவ்வாறு வரும் பறவைகள் மன்னார் கலப்பு மற்றும் கடல் பகுதியில் குவிந்துள்ளன. இதனை சுற் றுலா பயணிகள் மற்றும் வனவிலங்கு புகைப்பட கலைஞர்கள் கண்டு ரசித்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பறவை கள் ஏப்ரல் அல்லது ஜூன் மாதம் மீண்டும் திரும்பி செல்லும்.
மன்னார் சென்ற முதல் நாள் பிளமிங்கோ பறவைகளை சுமார் 800 மீற்றர் தூரத்தில் என் பார்வையில் பட்டன. பார்வையில் பட்டவற்றை என் கமராவின் ஊடாக புகைப்படம் எடுக்க வேண்டு என்ற நோக்கத்தில் நான் சுமார் 400 மீற்றர் தூரம் தவண்டு சென்று சில புகைடங்களை எடுத்தேன்.
இந்த வருடம் சுமார் ஆயிரத்துக்கு மேட்பட்ட பிளமிங்கோ பறவைகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளன. அதில் ஐந் துக்கு மேட்பட்ட பறவைகள் கால் இழந்த நிலையில் காணக்கூடியதாக இருந்தது. அதை பார்க்கும் போது கவலை அடைந்தேன். இவ்வாறு காணப்படும் பறவைகளை ஆவணப்படுத்த வேண்டும் என்று நோக்குடன் என்னுடைய கமராவை ஐந்து பிளமிங்கோ பறவைகள் பக்கம் திருப்பி புகைப்படங்களை எடுக்க ஆரம்பித்தேன்.
ரெயில் பெட்டி போன்று நீண்ட நெடிய வரிசையில் கலப்புக்குள் நின்ற படி இரை தேடியபடி சுற்றுகின்றன. வனவிலங்கு புகைப்பட கலைஞசர்களுக்கு கமராக்கு விருந்தாக இந்த பறவைகள் காணக்கூடிய தாக உள்ளது.
பிளமிங்கோ பறவைகள்
இரைதேடுவதே அழகு
இரைதேடும் பண்பு மிகவும் வித்தியாசமானது. தலையை குப்புற கவிழ்ந்து முழுவதும் நீருக்குள் விட்டு அல்லது அலகை மட்டும் நீரின் மேற்பரப்பில் அழுத்தி இரை தேடும். மற்ற பறவைகளுக்கு உள்ளது போல இல்லாமல் இவற்றின் மேல் அலகு வெகுவாக அசையும் பண்பை பெற்றிருக்கும்.
கடல் நீரில் உள்ள சிறிய இறால் வகை உயிரினங்கள், புழு பூச்சிகள், நீர் தாவரங்களின் விதைகள் உள்ளிட்ட வைகளை உணவாக உட்கொள்ளும். கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பிளமிங்கோ பறவைகள் குறைவாகவே வந்துள்ளது. இன்னும் சில நாட்களில் அதிகளுவு வருவதற்கு வாய்ப்புள்ளது.
இந்த வருடம் மட்டும் கால்கள் இழந்த பறவைகளை காணக்கூடியதாக இருந்தது. இவ்வாறான பறவைகள் நிலைக்கு மனிதர்களின் செயல்பாடுகள் காரணமாக இருக்கலாம். சரியாக என்னால் இதனைக் கூற முடியவில்லை இருந்தும் காலநிலை மாற்றம் அல்லது மனிதர்கள் மீன் பிடிக்க விரிந்திருக்கும் வலைகளில் இதன் கால்கள் சிக்குண்டு இவ்வாறு நடைபெற்றிருக்கலாம்.
இந்த வருடம் பிளமிங்கோ பறவைகளை பார் வையிட வந்த சுற்றுள்ள பயணிகளால் அதிகளவில் இடையூறுகளை காணப்பட்டன. அவர்கள் அணிந் திருக்கும் ஆடைகள் மற்றும் பிளமிங்கோ அருகில் புகைப்படம் எடுக்க அவர்கள் செல்வதனால் பிளமிங்கோ பறவைகள் இடையூறுகளை எதிர்நோக்கின. இதனால் அந்த பறவை வேறு இடங்களைத் இரை தேடி சென்றன. இந்த நிலை இவ்வாறு நீடித்தால் இனி வரும் காலங்களில் இவ்வாறான வெளிநாடு பறவைகள் வருவது குறைவடை வாய்ப்புள்ளது.
945 total views, 6 views today