யாழ்பாணத்தில் கேஜிஎப் நாயகன் யஷ்
கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களின் தொடர் வெற்றியால் பான் இந்திய நடிகராக மாறிவிட்டார் கன்னட நடிகர் யஷ். இதைத்தொடர்ந்து அவரது அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் தற்போது நடிகர் யஷ் தனது அடுத்த படத்தின் லொகேஷன் பார்ப்பதற்காக இலங்கையில் முகாமிட்டுள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் யஷ் தற்போது இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள யாழ் தேசிய பூங்காவை சுற்றிப் பார்த்து ரசித்துள்ளார் அதே சமயம் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ள இலங்கை அரசு அதிகாரிகளில் ஒருவர் யஷ் பற்றி பெருமையுடன் குறிப்பிட்டுள்ளதுடன் அவர் இலங்கையில் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பு நடத்த சில இடங்களை தேர்வு செய்வதற்காக வந்துள்ளார் என்கிற தகவலையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் தெரியப்படுத்தியுள்ளார்.
விஜயை அவமானப்படுத்திய உலகழகி ஐஸ்வர்யா!
விஜய் கதாநாயகனாக நடித்த தமிழன் படத்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக இருந்த மஜீத் இயக்கினார். இயக்குநர் மணிரத்னத்தின் அண்ணன் ஜி.விதான் படத்தை தயாரித்திருந்தார்.
படத்தை பிரபலமாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க முடிவு செய்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினாராம் தயாரிப்பாளர் ஜி.வெங்கடேஸ்வரன். இதற்காக மும்பை சென்ற அவர் ஐஸ்வர்யா ராயிடம் பேச்சு நடத்தினாராம். அதற்கு யார் ஹீரோ என ஐஸ்வர்யா ராய் கேட்டாராம். விஜய் என ஜிவி பதிலளிக்க, “விஜய்யா. சார் அவன்லாம் சின்னப்பையன் சார். எனக்கு ஜோடி பொருத்தம் சரியாக இருக்காது. அஜித் மாதிரி வேற யாராக இருந்தாலும் ஓகே. எனக்கு ஜோடி பொருத்தம் சரியா இருக்கும் சார்” என கூறி ஒத்துக்கொள்ளவில்லையாம். இந்த விஷயம் பிற்காலத்தில் விஜய்க்கு தெரியவர,ஒரு படத்தில் ஐஸ்வர்யாராயுடன் இணைந்து பணியாற்றும் சூழல் அமைந்ததாம்.ஆனால் விஜய் அதற்கு மறுப்பு சொல்லிவிட்டாராம். இந்தத் தகவலை பத்திரிகையாளர் சபிதா ஜோசப் பகிர்ந்திருக்கிறார்
டாட்டூ பிரியை: நடிகை த்ரிஷா
நடிகை த்ரிஷா பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்த நிலையில், அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் த்ரிஷா.
குருவி பட காலத்தில் இருந்தே டாட்டூ மீது அதிக பிரியம் கொண்ட நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். குருவி படத்துக்கு முன்பாக அவர் தனது மார்புக்கு மேல் போட்ட அந்த நெமோ மீன் டாட்டூ அந்த படத்தில் ஏகப்பட்ட இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டு ரசிகர்களுக்கு விருந்து கொடுத்திருக்கும். அந்த மீன் டாட்டூவுக்கு கிடைத்த யோகத்தை பார்த்தீங்களா? என அப்போதே ஏகப்பட்ட இளைஞர்கள் ஏங்கித் தவித்தனர். அந்த ஒரு டாட்டூ மட்டுமின்றி நடிகை த்ரிஷாவின் உடம்பில் பல இடங்களில் அடிக்கடி டாட்டூக்களை குத்திக் கொள்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். அடுத்ததாக தனது கையில் தனது ரிஷப ராசியை குறிக்கும் விதமாக டாரஸ் டாட்டூவை போட்டுள்ளார் த்ரிஷா.
ஜெயம் ரவி டாட்டூ:
நடிகை த்ரிஷா ஒரு டாட்டூ பிரியை என்பதை புரிந்துக் கொண்ட பூலோகம் படத்தின் இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் த்ரிஷாவின் தொடையில் ஜெயம் ரவியின் டாட்டூவை போடுவது போன்ற காட்சிகளை வைத்திருப்பார். ஆனால், அது வெறும் படத்துக்கு போடப்பட்ட தற்காலிக டாட்டூ என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அந்த படங்கள்; வெளியான சமயத்தில் த்ரிஷா டாட்டூ போடும் அந்த வலைத்தளங்களைப் பின்னியெடுத்தன.
முதுகில் ஒரு டாட்டூ:
சில ஆண்டுகளுக்கு முன்பாகவே தனது முதுகில் கேமரா ஒன்று இருப்பது போன்ற டாட்டூவை போட்டிருந்தார். சினிமா மீது உள்ள காதல் காரணமாக அந்த டாட்டூவை த்ரிஷா குத்தியிருந்தார். தற்போது பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு ஸ்லீவ்லெஸ் உடையில் கலந்து கொண்ட த்ரிஷாவின் அந்த பழைய டாட்டூ பளிச்சென தெரிய நெட்டிசன்கள் த்ரிஷாவின் புதிய டாட்டூ இது என கொண்டாடி வருகின்றனர்.
சூர்யாவின் ”கங்குவா”
நடிகர் சூர்யா தற்போது இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில், பொலிவுட் நடிகை திஷா பதானி, மிருணால் தாக்கூர், யோகி பாபு ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்..சூர்யா 42 என அழைக்கப்பட்டு வந்த இப்படத்திற்கு கங்குவா என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த தலைப்பு வெளியானது இணையத்தில் பெரும் புயலை கிளப்பியது. ரஜினிகாந்த் நடித்த ஒரு இந்தி படத்தில் தலைப்பு இது என படத்தின் தலைப்பு குறித்து பல கருத்துக்கள் இணையத்தில் தீயாக பரவின.இதையடுத்து, படத்தின் இயக்குநர் கங்குவா என்பதன் அர்த்தத்தை விளக்கி உள்ளார். அதில், கங்குவா என்பது படத்தில் நாயகனின் பெயர் என்றும் கங்கு என்றால் நெருப்பு என்றும் கங்குவா என்றால் நெருப்பின் சக்தி என்று அர்த்தம் என்றும், 1500 வருடங்களுக்கு முறைப்பட்ட கதை என்றும் தமிழ் உள்பட 10க்கும் மேற்பட்ட மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளதால் அனைத்து மொழிக்கும் பொருத்தமான ஒரு பெயரை தேர்ந்து எடுத்து வைத்துள்ளதாக கூறியுள்ளார்.
1,169 total views, 2 views today