நீரிழிவு – பலரை ஆட்டிப்படைக்கும் கொடிய நண்பன்
“காப்பி குடிக்கின்றீர்களா?” என்று யாராவது உங்களிடம் கேட்டால், தொடர்ந்து “சீனி போடலாமா?” என்கின்ற கேள்வியையும் அவர்கள் எப்போதுமே சேர்த்துத் தான் கேட்பார்கள். அதற்குக் காரணம் வேறு ஒன்றுமே இல்லை, சீனி வியாதி, சுகர் நோய், னயைடிநவநள என்று எல்லாம் செல்லமாகப் பலரால் அழைக்கப்படும் இந்த நீரிழிவு நோயால், புவியில் வாழும் பல மக்கள் அவதிப்படுகின்றனர். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றிக் கண்டிப்பாக உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவர்கள் தினமும் இன்சுலின் எடுத்துக்கொள்வதைப் பார்த்திருப்பீர்கள். இப்படி எங்குப் பார்த்தாலும் காணக்கூடிய இந்த நீரிழிவு நோய் உண்மையில் என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா?
பொதுவாக நீரிழிவு நோயைப் பற்றிப் பேசும் போது, எல்லோருமே இன்சுலின் என்பதைப் பற்றியும் பேசுவார்கள். ஆனால், பலருக்கு இன்சுலின் என்றாலே என்ன என்பது தெரிவதில்லை. இன்சுலின் எனப்படும் இயக்குநீர் (ஹார்மோன், harmone) உடலிலுள்ள குளூக்கோஸின் அளவைக் கட்டுப்படுத்தும் வேலையைச் செய்கிறது. குளுக்கோஸ் நமது உடலுக்குத் தேவையான சக்தியை வழங்கக்கூடிய பொருட்களில் ஒன்று. இதிலுள்ள சர்க்கரையளவைச் சரியாகக் கட்டுக்குள் வைக்க முடியாமல் போகும் போது தான், உடலில் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இன்சுலின் சரியாக உடலுக்குக் கிடைக்காமல் இருந்தால், இந்நோய் ஏற்படும். அத்துடன் உடலின் சர்க்கரையளவை அதிகரித்துப் பெரும் பிரச்சினைகளைக் கொண்டுவரும்.
நீரிழிவு நோயினை முற்றிலும் புரிந்துகொள்வதற்கு முதலில் குளுக்கோஸைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். குளுக்கோஸ், சர்க்கரையை மூலப்பொருளாகக் கொண்ட ஒரு பொருள். இது தான் உடலிலுள்ள செல்கள் அனைத்திற்கும் சக்தியை வழங்கக்கூடியது. செல்கள் இரத்தத்திலிருந்து குளுக்கோஸை எடுத்துக்கொண்டு, அதனை ஆற்றலாக மாற்றும். அது மட்டுமில்லாமல் மூளையின் செல்கள் மற்றும் செங்குருதியணுக்கள் போன்றவை குளுக்கோஸில் இருந்து கிடைக்கும் ஆற்றலை மட்டுமே பிரதானமாகக் கொண்டு இயங்குகின்றன. இந்தக் குளுக்கோஸ் நாம் சாப்பிடும் உணவுப்பொருட்களில் இருந்து இரத்தத்திற்கு வருகிறது.
நாம் சாப்பிடும்போது குடலின் மூலம் குளுக்கோஸ் உறிஞ்சப்பட்டு, இரத்த ஓட்டத்தின் மூலம் உடலின் அனைத்து பாகங்களுக்கும் செலுத்தப்படுகிறது. ஒரு வேளை உங்கள் உடலில் அதிகப்படியாக குளுக்கோஸ் உருவாக்கப்பட்டிருந்தால், மீதமுள்ள குளுக்கோஸ் கல்லீரல் மற்றும் தசைப்பகுதிகளில் ‘கிளைக்கோஜன்’ என்கிற நீண்ட குளுக்கோஸ் சங்கிலியாகச் சேமித்து வைக்கப்படும். குளுக்கோஸ் உடலில் குறைவாக இருக்கும்போது சேமித்து வைத்திருந்த இந்த இடங்களில் இருந்து குளுக்கோஸினைப் பயன்படுத்திக்கொள்ளும் மற்றும் உங்களைச் சாப்பிடும்படியும் தூண்டும். இரத்தத்தின் குளுக்கோஸ் அளவினை நிலையாக வைத்திருக்கக் கணையம் இருவிதமான ஹார்மோன்களை உருவாக்கிறது. அவைதான் இன்சுலின் மற்றும் குளுக்கோகான். இன்சுலின், நாம் உணவு உட்கொண்டு முடித்தவுடன் குளுக்கோஸ், கொழுப்பு அமிலங்கள் மற்றும் அமினோ அமிலங்கள் பயன்படுவதைக் குறைத்து ஊட்டச்சத்துக்களைச் சேமிக்கிறது.
நீங்கள் சாப்பிடாவிட்டால் என்னாகும்? நீங்கள் சாப்பிடாமல் விரதம் இருக்கும்போது, உங்களின் கணையம் குளுக்கோகான் என்பதை வெளிப்படுத்தும், இந்த குளுக்கோகான் குளுக்கோஸை உருவாக்கும். குளுக்கோகான் ஒரு புரத ஹார்மோன், இது கணையத்தின் தீவுக்கூட்டங்களில் உள்ள ஆல்பா செல்களால் உருவாக்கப்படும். எப்படியிருந்தாலும் இவையிரண்டுமே முடிந்தவரை குளுக்கோஸைப் பெற்று உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் வழங்குகிறது. இவை இல்லையெனில், உங்களின் உடலில் குளுக்கோஸின் அளவு வெகுவாகக் குறைந்துவிடும்.
சரி இது இருக்கட்டும், ஆனால் இந்த குளுக்கோகான் அல்லது குளுக்கோஸ் என்ற இரண்டில் எதை, எப்போது சுரக்க வேண்டும் என்பது நமது உடலுக்கு எப்படித் தெரியும்? எப்போதுமே குளுக்கோஸ் மற்றும் குளுக்கோகானின் அளவுகள் எதிரெதிர் சமநிலையில் இரத்தத்தில் இருக்கும். இன்சுலினின் அளவு இரத்தத்தில் அதிகரிக்கும்போது உணவிலிருந்து கிடைக்கும் குளுக்கோஸ், அமினோ அமிலங்கள் மற்றும் கொழுப்பு அமிலங்களை உறிஞ்ச ஆரம்பிக்கும். இதனால் நிலையான அளவில் இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு கட்டுப்படுத்தப்படும்.
சரி நண்பர்களே, உங்களுக்கு இப்போது உடல் எப்படி குளுக்கோகான் மற்றும் குளுக்கோஸ் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது என்பது தெளிவாகப் புரிந்திருக்கும். எனவே, இப்போது நீங்கள் நீரிழிவினைப் பற்றித் தெரிந்துகொள்ளத் தயாராகிவிட்டீர்கள். நீரிழிவில் மூன்று வகைகள் உள்ளன. அவை வகை 1, வகை 2 மற்றும் கர்ப்பகால நீரிழிவு ஆகும். இன்சுலின் குறைப்பாட்டினால் ஏற்படும் நீரிழிவு, வகை 1 ஐச் சேர்ந்தது. பரம்பரை நோயாகக் கருதப்படும் இவ்வகை நீரிழிவு, இன்சுலின் குறைப்பாட்டினால் ஏற்படுகிறது. நீரிழிவு நோயாளிகளில் 90மூ முதல் 95மூ வரை வகை 2 நீரிழிவால்தான் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் உடலில் உருவாகும் இன்சுலினை உடல் பயன்படுத்தாது. இது 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படும், பெரும்பாலும் 50 முதல் 60 வயதுடையோர்களுக்கு இதன் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். வகை 2 நீரிழிவு போலவே பாதிக்கும் கர்ப்பகால நீரிழிவு கர்ப்பமான பெண்களைப் பாதிக்கும். அதிகளவிலான இன்சுலின் மற்றும் பாதிக்கக்கூடிய அளவிலான குளுக்கோஸினால் இது ஏற்படுகிறது. கர்ப்பமாக இருக்கும்போது வேறுசில ஹார்மோன்கள் இன்சுலின் செயல்பாட்டினைக் குறைப்பதால் இந்தப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
நீரிழிவிற்கான நிரந்தர தீர்வு இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும், வகை 1 நீரிழிவிற்கு pயnஉசநயவiஉ ளைடநவள மாற்றுவதன் மூலம் நிரந்தரமாகக் குணப்படுத்தலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த முறையில் பாதிப்படைந்த பகுதியினை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக சிறு குழாயினை கல்லீரலில் செலுத்துவதன் மூலம் இதன் செயல்பாடு சரிசெய்யப்படுகிறது. இதனால் புதிதாக இன்சுலின் உருவாக்கம் மேம்படுத்தப்படுகிறது. இந்த முறையில் பிரச்சினைகள் இருந்தாலும், இது குறித்த ஆய்வுகள் இந்த சிகிச்சை முறையினை மேம்படுத்தி வருகின்றன.
நண்பர்களே, நாம் தற்போது விஞ்ஞான வளர்ச்சி அதிவேகத்தில் போகும் காலத்தில் வாழ்ந்து வருகிறோம். குறிப்பாகச் செயற்கை நுண்ணறிவு போன்ற அதிசய கண்டுபிடிப்புகளின் உதவியுடன் நாம் வெகு விரைவில் கொடூரமான நோய்களுக்கும் கூட சிகிச்சை முறைகளைக் காண்போம் என்பதில் எனக்கு எந்த விதச் சந்தேகமும் இல்லை. அதில் இந்த நீரிழிவு நோயும் ஒன்றாக இருக்கும். இருக்கும் என்று நம்புவோம்…
1,202 total views, 6 views today