பிராங்பேர்ட் தமிழ்க்கல்விக் கழகத்தின்; தமிழ் நூலகம் நடத்தும் கதைசொல்லும் நேரம்!

“தேன் மதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகைசெய்தல் வேண்டும்” என்ற நோக்கத்தோடும்;;;, நாம் சிறுவர்களாய் இருக்கும்போது நாம் வாசித்த,கேட்ட கதைகளை புத்தகவடிவில் அவர்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கத்தோடும் எம் பிள்ளைகளுக்காக, கன்னி முயற்சியாக பெற்றோர்களால் கடந்த அக்டோபர் மாதம் முதலாம் திகதி (01.10.2022) பிராங்பேர்ட் தமிழ்க்கல்விக் கழகத்தின்; கீழ்,„ “தமிழ் நூலகம் – ஆரம்பிக்கப்பட்டது.
ஐரோப்பிய நாடுகளை பொறுத்தமட்டில் நம் குழந்தைகள், வாழும் நாட்டில் உள்ள நூல்கள் மற்றும் ஆங்கிலமொழி, பிரெஞ்சு மொழி என பிறமொழிகளை வாசிக்கின்றார்கள்;. ஆனால் தமிழ்மொழியை வாசிப்பதில் ஆர்வம்காட்டுவது மிக அரிதாகவே உள்ளது. அதற்காக நாம் ஒட்டுமொத்தமாக பிள்ளைகளை குறைசொல்ல,இயலாது, மாறாக அதற்கான சூழலை அமைத்துக்கொடுப்பது பெற்றோர்களின் கடமையாகும். எனவே அவர்கள், தமிழ்புத்தகங்களை சாதாரனமாக நூலகங்களில் எடுத்துபடிக்க வைக்க வேண்டும் என்றநோக்கத்தோடு மட்டுமே நூலகம் அமையகாரணமாயிற்று. இந்த நூலகக்குழுவில் ஒன்பது பேர் அங்கத்தவர்களாக உள்ளனர்.இக்குழுவில் செயற்படும் அனைவரின் பிள்ளைகளும் தமிழ்கல்விக்கழகத் தமிழாயத்தில் (பிராங்பேர்ட்) தழிழ் கல்வியைகற்கின்றமை சிறப்பம்சமாகும்.
நூல்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவர்களின் கற்பனை வளத்தையும்;, கைவேலைப்பாடு திறமையையும் ஊக்குவிக்கும் நோக்கில் நூலகத்தின் செயற்பாடுகளில் ஒன்றாக எம் குழுவினரால் – கதை சொல்லும் நேரம் – என்னும்தலைப்பில் மாதமொருறை பாலர்,மழலையர்,வளர்தமிழ் குழந்தைகளுக்கு கதைகள்சொல்லப்பட்டு அத்தோடு ஒரு கைவேலையும் செய்யபடுகின்றது.இந்நிகழ்வானது மாதமொருறை பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கதாகும். எமது நூலகத்தின் சேவையை ஒவ்வொரு சனிக்கிழமைகளும், காலை 10.00 மணி முதல் பகல் 12.00 மணிவரை (பாடசாலை விடுமுறை நாட்களைத் தவிர்த்து) புத்தகங்களை பெற்று நீங்களும் உங்கள் குழந்தைகளும் பயன்பெறலாம்