தானும் ஒரு “ பாலுமகேந்திரா “ எண்ட நினைப்பு!

கறுப்பு வெள்ளைக் கனாக் காலம்

னுச. வு. கோபிசங்கர்
யாழப்பாணம்

View finder ( வியூ ஃபைண்டர்) க்கால பாத்துக்கொண்டு சரியான அளவுக்கு ஃபிரேமை fix பண்ணீட்டு , கமராவின்டை முன்பக்கம் இருக்கிற பெரிய வட்டத்தை adjust பண்ணி புள்ளிகள் ஒண்டாகி முகம் கூர்மையாகி வந்திச்சுது. முன்னால இருக்கிற fine focus ஐ உருட்டி சப்பை மூக்கின்டை நுனி தெளிவாத் தெரிஞ்சுது. Konica film roll ISO 200 load பண்ணின Yashica கமராவின்டை அப்ஃபேச்சரை குறைச்சு focal depth ஐ மாத்த பின்னால மரம் மறைஞ்சு முகம் மட்டும் தெரிய எடுத்த portraitஐ பிரேம் போட்டுக் கொண்டந்து முன் கண்ணாடியைத் துறந்து மாட்டி வைச்சான் தானும் ஒரு பாலுமகேந்திரா எண்ட நினைப்பில, இதைப்பாத்திட்டு படம் எடுக்க ஆக்கள் கூட வருவினம் எண்டு நம்பிக்கையில். எண்பதுகளில போட்டோக்கடைக்கு போட்டி இல்லாட்டியும் வருமானம் அளவாத் தான் வாறது. எங்கேயும் கலியாண வீடு, விசேசங்கள் எண்டால் மட்டும் நல்ல வருமானம் வரும்.

கடை வாசலில ஒரு கலியாண வீட்டுப் படம், அதே போல Coat போட்ட ரெண்டு பேரின்டை படம் எண்டு கண்ணாடிக்குள்ளால frameஓட கறுப்பு வெள்ளைப் படம் தொங்கும். முகத்தில போட்ட பவுடர் திட்டுக் கூட தெரியிற அளவு உண்மையான உருவத்தைச் சொல்லிறது கறுப்பு வெள்ளைப் படம் தான்.

முந்தி வசதிக்கு ஏத்த மாதிரி மூண்டு நாலு வருசத்துக்கு ஒருக்கா குடும்பமாப் போய் படம் எடுத்து வைக்கிறது . உயரமான மரயானைக் குட்டீல சாய்ஞ்சு நிண்டபடி ஒவ்வொரு பிள்ளையையும் விட்டு, பிறகு பக்கத்தில ஒரு பெரிய flower vase இருக்க பிள்ளைகளை அணைச்சபடி அம்மாவும் அப்பாவும் ஒரு குடும்ப photo, ஒரு கையில ஒரு handbagஓட கட்டின சாறீன்டை head piece மற்றக் கையில சரிஞ்சு தொங்க சரோஜாதேவி மாதிரி pose குடுத்தபடி புரோக்கருக்கு குடுக்கிறதுக்கு சித்திக்கும் மாமிக்கும் ஒரு photo, செத்தா கல்வெட்டில போடிறதுக்கு கிழவீன்டை தனிப்படம் எல்லாம் எடுத்திட்டு வந்த எல்லாரும் அப்பிடியே townஇல மிச்ச அலுவலை முடிச்சிட்டுப் போவினம் .

தனிப்படம் எடுத்த ஆள் தவறிப்போனால் அந்திரட்டி வரேக்க படத்தை தேடிப் பிடிச்சு enlarge பண்ணி பிரேம் போட்டு போன ஒழுங்கில தொங்கவிடிறது வீட்டு hallஇல. படத்துக்கு frame போடிறதுக்கு மானிப்பாய் ரோட்டில glass house ம் , சத்திரத்துச் சந்தீல பட்டாபி பட மாடமும் தான் இருந்தது . பிறேம் போடத படங்களை show case இல இருக்கிற photo frame இல சொருகி வைக்கிறது.

எப்பவாவது தூசுதட்டேக்க அலுமாரிக்கு அடியிலிருந்து ஒரு அல்பம் கிடைக்கும். பழைய அல்பம் தடிச்ச மட்டையோட மூலையிலை பித்தளைக் கிளிப் போட்டபடி வெளிக்கவர் இருக்கும். உள்ள பாத்தா கறுப்பு நிறப் பேப்பர். அந்தப் பேப்பரில மட்டையின்டை நடுவில படம் செருக எண்டு வசதியா இருக்கிற முக்கோண மூலைக்களுக்க படத்தை சொருகி வைச்சிருப்பினம். அதோட ரெண்டு பேப்பருக்கிடையில ஒரு ரிசுப்பேப்பர் இருக்கும். கறுப்பு வெள்ளை படம் எண்டாலும் ஒரு பழுப்பு வெள்ளையாத் தான் இருக்கும். இவர் ஆரெண்டு சொல்லு பாப்பம் எண்டு படத்தைக்காட்டி பிறக்கமுதல் செத்துப்போனவையை, இருத்தி வைச்சு அம்மா சொல்லித்தந்ததால முறைதலை எப்பவுமே தெரிஞ்சுது .

ஊரில படம் எடுக்க சில கடைகள் தான் எண்பதில இருந்திச்சுது. வெலிங்டன் சந்தீல ஸ்ரான்லி ரோட் பக்கமா சித்திராலயா ஸ்டூடியோ, சந்தியால அப்பிடியே திரும்பிப் போனா ஞானம்ஸ் ஸ்டூடியோ,கொழும்பு ஸ்ரூடியோ கம்பஸ் பக்கமா பேபி ஸ்டூடியோ தான் எனக்கு ஞாபகம்.

சோதினை எடுக்க postal identity card வேணுமாம் எண்டு போட்டு ஸ்டூடியோக்குப் போனன். என்ன சைஸ், எத்தினை கொப்பி எண்டு விபரம் கேட்டிட்டு உள்ள போங்கோ எண்ட, திருப்பியும் உள்ள “அண்ணை postal identity card” எண்டு சொல்ல உள்ள கூட்டிக்கொண்டு போய் இருட்டின அறையின்டை lightஐப் போட்டிச்சினம். ஒரு சின்ன அறைக்குள்ள முகம் பாக்கேலாத கண்ணாடீல சீப்பால தலையை இழுத்திட்டு வெள்ளையாத் தெரியும் எண்ட நம்பிக்கையில Cuticura powder ஐயும் போட்டிட்டு எல்லாருக்கும் பொருந்திற மாதிரி இருக்கிற ஒரே கோட்டை போட்டிட்டுப் போய் ஒரு stoolஇல இருக்க , தலையை உயத்துங்கோ,கொஞ்சம் மேலபாருங்கோ கொஞ்சம் கீழ, கொஞ்சம் அங்கால இங்கால எண்டு சைக்கிள் மாதிரி buckle எடுத்திட்டு, சரி “இங்க பாருங்கோ கண்ணை வெட்டாதீங்கோ” எண்டு தலையை காட்டாமல் குரலை மட்டும் காட்டினார்

கமராக்காரர். கண்ணையே வெட்டாம கன நேரம் இருந்து கடைசியா அடிச்சflashக்கு கண்கலங்கி இருட்டுக்கால தடவித்தடவி வெளீல வந்தா பிரின்ட் போட்டுத் தர ரெண்டு கிழமை செல்லும் எண்டு சொல்லிச்சினம்.

கலியாணவீட்டை கமராக்காரார் ஆதிக்கம் செய்யாத காலத்தில கலியாண வீட்டில கமராவோட திரிஞ்சா பெருமை எண்டு நினைக்கத்தொடங்கினது எண்பதின்டை தொடக்கத்தில இருந்திச்சுது. Double barrel மாதிரி load பண்ணிற Kodak இன்டை 110 எண்டு ஒரு கமரா வந்திச்சுது . Loading பிரச்சினை இல்லை , மேல இருக்கிற பட்டினை இழுத்து இழுத்து அடிக்கிறது . இருவத்தி நாலுக்கு படத்துக்கு கிட்ட எடுக்கலாம். ஆனாலும் மணவறையில படம் எடுக்கிறது ஒரு பெரிய கமராக்காரர் மட்டும் தான். அதுக்குப் பிறகு வெளிநாட்டுக்காரர் வரத்தோட SLR வரத் தொடங்க கனபேர் கமராவைத் தொழில் ஆக்கிச்சினம்.

தொண்ணூறுகளின் கலியாணம் எண்டால் கொழும்பால வரேக்க தாண்டிக்குளத்தால என்ன கொண்டராட்டியும் பிடிபடாம எப்பிடியாவது ரெண்டு பிலிம் ரோலும், கடயளா க்கு நாலு பற்றிரியும் கொண்டு வந்திடுவினம். அங்கால இருந்து இங்கால கஸ்டப்பட்டு கொண்டு வர “அண்ணை எங்களுக்கு ரெண்டு பற்றிரியை குடுத்திட்டுப் போங்கோ” எண்டு பெருமாளின்டை பிச்சையை அனுமார் புடுங்க, இதையெல்லாம் தாண்டிக் கொண்டுவந்து கடைசீல கஸ்டப்பட்டு கமராக்காரனைப் பிடிச்சு படம் எடுத்திட்டுக் கழுவக் கொழும்புக்கு கொண்டு போகேலாமல் நிறைய கலியாணவீட்டுப் படங்கள் இன்னும் பிலிம் ரோல் ஆகவே இருக்குது.

Friend ஒருத்தன் புதுக்கமராவும் பிலிம்ரோலுமா திரியிறானாம் படம் எடுக்க ஆள் வேணுமாம் எண்டு கேள்விப்பட்டு , கவுண்டமணி சொன்ன யனஎளைந ன் படி “தெரியாத ஒண்டில தான் முன்னுக்கு வரலாம்” எண்டு போட்டு ஓடிப்போய் உதவிக்கரம் நீட்டினன். அக்காவின்டை campus going down party ஆம் எண்டு சொல்ல முதல் முதலா கம்பஸ{க்க காலடி வைச்சன் கமராக்காரனா. கொஞ்சம் பயந்து போன எனக்கு கையில இருந்த கமராவைக்கண்டோன்ன எங்களையும் ரெண்டு படம் எடுங்கிறீங்களோ எண்டு கேட்டு வந்த ஆக்கள் சாப்பாடும் ஜூசும் தந்திச்சினம் , எல்லாம் கமரா தந்த demand.

பள்ளிக்கூடத்தில படிக்கேக்க ஏனோ தெரியேல்லை வகுப்பில எல்லாருமாச் சேந்து படம் எடுக்கிறேல்லை . ஏதாவது பள்ளிக்கூட விசேசம் எண்டால் pசணைந வாங்கிறவன், drama நடிச்சவன் மட்டும் படம் எடுக்க tie கட்டிக்கொண்டு வந்து கைதட்டினவனிட்டை படம் ஒண்டும் இருக்காது . இல்லாட்டி ஏதாவது விளையாடி இருந்தால் photo இருக்கும் . கம்பஸில அப்பிடி இல்லை வருசத்தில மூண்டு நாலு party இருக்கும். batch photo வில இருந்து சின்னச்சின்ன குறூப் போட்டோ எண்டு எல்லாரும் படம் எடுக்கலாம். எல்லா பெற்றோருக்கும் ஒரே கனவு , கையில சுருளைப் பிடிச்சபடி அலுமாரீல புத்தகம் அடுக்கின பிறேமுக்கு முன்னால ஒரு படம் பட்டமளிப்பு விழா முடிய எடுத்து வீட்டில தொங்கவிட்டிட்டு வாற போற எல்லாருக்கும் காட்டிறது.

யாழ்ப்பாணத்தில அப்ப பிலிம் ரோலும் பற்றிரியும் பவுண் விலை வித்திச்சுது. இந்த விலைக்கு எல்லாம் வாங்கி படம் எடுத்திட்டு கொழும்புக்கு கழுவக் குடுத்தால் பாதிப்படம் வராமலே போயிடும், மிச்சப் படம் வர பாதி வருசம் போயிடும். எல்லாக் கமராக்காரரும் அப்ப producers தான். கம்பஸில ஏதும் விசேசம் எண்டால் கடன் வாங்கி கமராவுக்கு பிலிம்ரோல் போட்டு படம் எடுத்திட்டு, எனக்கு ஒரு கொப்பி இவனக்கொரு கொப்பி எண்டவனை நம்பிextra copyக்கும் ஓடர் குடுத்து காசையும் கட்டி கொழும்புக்கு அனுப்பீட்டு படம் வர எனக்கு வேணாம், இதில நான் வடிவாயில்லை எண்டு சொல்லிற சிலராலேம், படம் வரேக்க கம்பஸ் முடிஞ்சு காணாமல் போற பலராலேம் முதல் இழந்து, படம் flop ஆகி இனிப் படமாக எடுக்கிறேல்லை எண்டு தொழிலைக் கைவிட்டாக்களும் இருக்கினம்.

4 R சைசில வாற குறூப் படத்தில இது நான் அது அவன் எண்டு கண்டு பிடிக்கிறதே பெரிய காரியம். என்ன தான் வீட்டில அல்பம் இருந்தாலும் எப்பவாவது ஒண்டாப் படிச்ச எவனாவது share பண்ணிற படத்தில நான் இருக்கிறனா நான் பாத்ததுகள் இருக்கா எண்டு பாத்து படீற சந்தோசமும், CD வாங்கிக் கேக்கிற பாட்டிலும் பாக்க ரோட்டில போகேக்க எங்கயோ ஒரு மூலையில போடிற பழைய பாட்டுக் கேக்கேக்க வாற சந்தோசமும் எப்பவுமே தனிரகம்.

1,044 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *