அமரர் நாகமுத்து சாந்திநாதன் ஒரு ஆர்ப்பாட்டம் இல்லாத அற்புதக் கலைஞன்.
- கதிர் துரைசிங்கம் -கனடா
1993 ஒக்ரோபர் 16 மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் முதல் முத்தமிழ் விழா .தீசன் இயக்கிய“ Sponsor Ready “நாடகத்தில்நடித்த என்னைத் தேடிவந்து ஒருவர் பாராட்டுகிறார். இவர் சாந்திநாதன்-நடிகர்,இயக்குனர்,வானொலிக் கலைஞர் என அறிமுகம் செய்கிறார் அதிபர் கனகசபாபதி. அன்று பாராட்டியதில் ஆரம்பமான சாந்திநாதனின் நட்பு குடும்ப உறவாகி பாராட்டில் தோடர்கிறது .
மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து அவர்களுக்கு மதிப்பளித்துப் பாடறிந்து ஒழுகும் சாந்திநாதனை அனைவரும் நேசித்தார்கள் சொந்தம் கொண்டாடினார்கள். அழைத்த விழாக்களுக்கு குறித்த நேரத்திற்கு தவறாது செல்லும் சாந்தி விழா முடிந்த பின் அதன் அமைப்பாளரையும் கலைஞர்களையும் பாராட்ட தவறமாட்டார் திருத்தங்கள் இருப்பின் நாசூக்காக அவர்களுக்கு எடுத்துக் கூறவும் தேவையெனின் உதவவும் தயங்கமாட்டார்.
நேர்மை,நேர்த்தி ,நேரம் தவறாமை சாந்தியின் தாரக மந்திரம். பொறியியல் துறை சார்ந்த சாந்தி திட்டங்கள் இன்றி எதுவும் தொடங்கார். பத்து பூக்கன்று நடுவதென்றாலும் திட்டமிட்டு சரியாகச் ஆக செய்து முடிப்பார்.
புராந்தகனும் நானும் சாந்தியை அவரது இல்லத்தில் வாரத்திற்கு ஒரு தரமாவது சந்திப்போம். சாந்தியின் சம்பாஷனையும் மனைவி உஷாவின் உபசரிப்பும் எமக்கு பெரு விருந்தாயிருக்கும். நேருக்கு நேர் சந்தித்து முகம் பார்த்து உரையாடுவதுதான் சிறந்த தொடர்பாடலாக இருக்கும் என்பது சாந்தியின் கோட்பாடு. இதற்காக நேரத்தையும் தூரத்தையும் பொருட்படுத்தாமல் பயணிப்பார்
சாந்தி விழாக்களைப் பொறுப்பேற்றால் ஒவ்வொரு நிகழ்வும் பாரவையாளரைச் சென்றடைய வேண்டும் என்பதற்கு கடினமாக உழைப்பார் நாடக இயக்குனராக சிறந்து விளங்கிய சாந்தி மகாஜனக் கல்லூரி முத்தமிழ் விழாக்களுக்கும் அரங்காடல் நிகழ்வுகளுக்கும் பல நாடகங்களை இயக்கியுள்ளார்.
25 ஆண்டுகளுக்கு மேலாக மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்க முத்தமிழ் விழாவின் சூத்திரதாரியாக
செயற்பட்ட சாந்நி கணித பொதுஅறிவுப்பரீட்சை பொறுப்பையும் ஏற்றுத்திறம்பட நடத்தினார்தலைவராப் பணியாற்
றியபின் காப்பாளராகஇருந்து மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் -கனடாக் கிளையைவழிநடத்திவந்தார்.
இவரின் நாடகங்கள் புரியுக்கூடியதாகவும் பார்வையாளருக்கு செய்தி ஒன்றைக்கூறுவதாகவும் அமையும்
அரங்காடலின்”ஆக்குவாய் காப்பாய் “நாடகத்தில்என்னை ஒரு வைத்திய நிபுணராகநடிக்க செய்து அதை ஐந்து மேடை ஏற்றி, பலர் பாராட்டைப் பெறவைத்த இயக்குனர் சாந்தி என்னை அண்ணை என்றே அழைப்பார். இங்குநடந்த எங்கள்வீட்டு வைபவங்களை இயக்கியவரும் சாந்தியே.
2012 இல் உஷா சாந்தி உடன் மனைவியும் நானும் விடுமுறைக்கு இலங்கை சென்றபோது சாந்தியின் திட்ட மிடலின் திறனையும் அதன் பலனையும் அனுபவித்தேன். 2018 இல் இருந்து மூன்று முறை நடந்த எனது முழங்கால் சத்திர சிகிச்சை சம்பந்தமான பயணங்களுக்கு எனது பார்த்தசாரதியாக விருப்புடன் பணியாற்றியவர் நணபன் சாந்தி. அந்துடன் எந்த விழாவாயினும் என்னைக்கூட்டிச் செல்பவர் சாந்திதான்-
ஐந்து மணி என்றால் 4.59 க்கு சாந்தியின் Car driveway யில் நிற்கும். -விழா நிகழ்வுகளை விட வாகனத்தில் சாந்தியின் விமரசனமும் சம்பாஷனையும் சுவாரசியமாக இருக்கும் தமிழர் தகவல் ஆண்டு மலர்களில் சாந்தி எழுதிவந்த கட்டுரைகள் அவரின் எழுத்துவன்மைக்கு எடுத்துக்காட்டு.
காலம் தாழ்த்தல்,மறதி,சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் இந்த நான்கும் சாந்தியிடம் இல்லாதவை.சாந்தியின் நடை உடை, இரசனை உரையாடல் ஹாசியம் விமர்சனம் அனைத்துமே தனித்துவமானவை.
எல்லோற்கும் நண்பனாகவும், எல்லோற்கும் இனியவராகவும், எல்லோற்கும் உதவுபவராகவும், எல்லோற்கும் பொதுவாவனராகவும் எல்லோரின் மதிப்பிற்கு உரியவராகவும் எம்மத்தியில் வாழ்ந்த திரு நாகமுத்து சாந்திநாதன் ஒரு ஆர்ப்பாட்டம் இல்லாத அற்புதக் கலைஞன்.
ஆனி 10 சாந்தியுடன் இருந்த நான் மதியம் 12 15 அளவில் விடை பெறுகிறேன் என்று கை அசைத்தேன்
விடைபெறும் நேரம் எனக்கும் நெருங்கிவிட்டது, எல்லாம் திட்டப்படி போய்க்கொண்டிருக்கு என எனக்கு உணர்ந்த சாந்தி கட்டைவிரலை நிமிர்த்திக் (Thumbs up) காட்டிய போது நட்பின் வலிமையையும், வலியையும் உணர்ந்தேன்.
968 total views, 6 views today