”1000 இயக்குனர்களை உருவாக்கும் பயணம்”
இயக்குனர்; மதிசுதா இலங்கை (வெந்து தணிந்தது காடு)
இது கற்பனைக்கு எட்டாத தூரமாக இருக்கலாம் ஆனால் கற்பனை செய்யக் கூடாத முயற்சி இல்லைத் தானே.
கடந்த 2 வருடங்களாக ஒவ்வொரு பிரதேசத்திற்கும் சென்று இலவசமாக இதைச் செய்து வருகின்றேன்.
இதன் மூலம் ”பணமில்லாவிடினும் இருக்கும் வளத்தை வைத்து ஒரு சினிமாவை எப்படி உருவாக்கலாம்” என்ற தொனிப் பொருளில் நான் கடந்து வந்த 10 வருட கரடுமுரடான பயணத்தினூடான அனுபவங்களை வைத்து அவர்களுக்கு கடத்திக் கொண்டிருக்கின்றேன்.
450 பேரைக் கடந்து நகரும் எனது பயணத்தில் முதல் முதல் திருமலை மாவட்டத்தில் இந்த பட்டறையை செய்திருந்தேன். 22 மாணவர்கள் கலந்து கொண்டிருந்த இந்த நிகழ்வில் மாணவர்களின் ஆர்வமும் கேள்விகளும் பெரு நம்பிக்கை அளிப்பதாக அமைந்திருந்தது.
இளைஞர்களை தவறான பாதைக்கு செல்லாமல் எங்கள் மொழி, வாழ்வியல், பண்பாடுகளை இன்னொரு மொழிக்கும் தலைமுறைக்கும் கடத்தும் கலை வடிவங்களுக்குள் புகுத்தி எமக்கான ஆரோக்கியமான எதிர் காலத்தைக் கட்டி எழுப்புவோம்.
இதே எண்ணங்கொண்ட ”தளம்” அமைப்பு இதை ஏற்பாடு செய்து தந்திருந்தது. இதற்கு முதற் காரணமான சகோதரன் மதன் , அருசா மற்றும் கஜன் ஆகியோருக்கும் எனக்கு அறிமுகமில்லாமல் இதை ஒழுங்கமைத்த அனைவருக்கும் எனது உளப்பூர்வ நன்றிகள்.
இந்த பயணத்தில் 5 வருடத்திற்கு முதல் இணைந்து இன்று எனக்கு பதிலாக பயணத்தை தொடர என்னுடன் பயணிக்கும் முரசர வுமு க்கும் நன்றிகள்.
உங்கள் ஊர்களுக்கும் எந்நேரமும் வரத் தயாராகவே இருக்கின்றேன். ஆர்வமுடையோர் 10 பேரை சேர்த்து விட்டு அழையுங்கள்.(இலங்கையில்)
1,183 total views, 3 views today