உலகை வாழ்விப்பது கடவுள் இல்லை! இலைகளே!!
டாக்டர் எம்.கே.முருகானந்தன் – இலங்கை
கருகும் இலை
தரை தழுவும் விரைவில்
ஒன்றா இரண்டா?
நூற்றுக் கணக்கில்
வெள்ளமென முற்றத்தில்
விளக்குமாறு பிடிப்பவர்
முதுகை முறிக்கும்
காய் கனிகள்
நாவின் சுவை மெட்டுகளுக்கு
விருந்தாகும்
கிளைகள் விறகாகும்
அடி மரம் பலகையாகி
கதவு, நிலை, கூரை
தளபாடங்களென
பயன் விரியும்.
முற்றத்துக் குப்பையாகும்
இலைகளால்
தொல்லையேதான்
பயன் ஜீரோ அன்றோ !
மூடக் கதை பேச வேண்டாம் .!!
சூரிய ஒளியை உறிஞ்சி
ஒளிச் சேர்க்கையால்
சக்தியை உற்பவித்து
தாவரத்தை வளர்க்கிறது
உலகையே வாழ்விக்கிறது
எட்டாம் வகுப்பு மாணவன்
முணுமுணுக்க
தாத்தா தலை குனிகிறார்
உலகை வாழ்விப்பது
கடவுள் அல்ல
இலைகளே
மனதிற்குள் பேசுகிறார்
தெளிவுடன் தாத்தா.
526 total views, 3 views today