யேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சாதனையாளர் விருதும் (2023), புத்தக வெளியிடும்.

19.08.2023 அன்று யேர்மனி டோட்முண்ட் நகரில்,யேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கத்தால் இரண்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. யேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் உபதலைவர் கவிச்சுடர் திரு. அம்பலவன்புவனேந்திரன் அவர்களுடைய இரண்டு புத்தக வெளியீடும், அதைத் தொடர்ந்து, யேர்மனியில் தமிழ், கலாச்சாரம், மொழி, பண்பாடு என்று சமூக மேண்பாட்டில் தம்மை இணைத்து நீண்ட நாட்களாக இன்றும் தொடர்ச்சியாக சேவை ஆற்றி வருகின்ற நான்கு தொண்டாளர்களிற்கு, இந்த வருடத்தின் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்தனர். இந் நிகழ்வு கவிச்சுடர் திரு. அம்பலவன் புவனேந்திரன், ஆசிரியை திருமதி. சாந்தினி துரையரங்கன் மற்றும் புத்தறிவாளன் சி.சிவவினோபன், இவர்களின் கூட்டணியில் நிகழ்ச்சி அமைப்பு மிக சிறப்பாக இருந்தது என்று அனைவரும் பாராட்டினர்.
திரு. ஏலையா க. முருகதாசன் அவர்களின் தமிழ் பயணம், அவருக்கு எவ்வாறு ஏலையா என்ற பட்டம் கிடைத்தது, அவர் எழுத்து துறையில் இருந்து நடிப்புத் துறைக்கு சென்று செய்த சாதனைகள், இளம் வயது சாதனைகள் என்று அனைத்தையும் யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராகிய திருமதி. ஜெயாநடேசன் அவர்கள் விரிவாக வழங்கினார்.
அதைத்தொடர்ந்து பாவலர் திருமதி. கீதாராணி பரமானந்தம் அவர்களுடைய தமிழ் பயணம், கவிதை ஊடாக இசைக்குள் சென்று, வீணை மூலம் விண்ணைத் தொட்டு, யேர்மனியில் வந்து ஆசிரியராகி, அத்தோடு மரபுக் கவிதையில் இன்று சிறந்து விளங்குகின்ற கீதாராணி பரமானந்தம் அவர்கள் பெற்ற மிகப்பெரும் பட்டம் தன் பிள்ளைகளிற்கு தமிழ் மொழி சிறப்பாக கற்றுக் கொடுத்தவர் என்ற பட்டமே என்று, அழகாக அவரைப் பற்றி புத்தறிவாளன் சி. சிவவினோபன் கௌரவித்தார்.
திரு.சுப்பிரமணியம் பாக்கியநாதன் அவர்களுடைய 30க்கும் மேற்பட்ட வருடக்கணக்கான சாதனைகளை துல்லியமாக சிறு வயது விளையாட்டுத் துறையில் செய்த சாதனைகள் முதல், வெளிநாட்டில் அரசியல், தமிழ், பாடசாலை என்று பன்முகச் சேவைகளையும், தொலைக்காட்சி, காணொளி பதிவு, குறும்படம், வானொலி என்று பலதுறை சார்ந்த திறமைகளையும் அழகாக எடுத்துரைத்த ஆசிரியை திருமதி. சாந்தினி துரையரங்கன், 23 நிமிடங்கள் மழை போன்று பொழிந்து தள்ளினார். இது அரங்கத்தையே சுவாரசியமாக மேடையை நோக்கி கவர்ந்து ஈர்த்தது.
இறுதியில் ஜெர்மன் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகிய திரு. பொன்னுதுரை சிறீஜீவகன் அவர்களை, அவர் தாயகத்தில் செய்த சாதனை, மற்றும் அவருக்கு கிடைத்த துன்பங்கள், சிறை தண்டனை, அனைத்தையும் தாங்கி தமிழ் தான் தன் மூச்சு என்று தொடர்ந்தும் தான் கொண்ட கொள்கையில் மீறாது,இன்றும் தனி ஒருவராக பல சாதனைகளை தமிழ் சார்ந்து செய்து கொண்டிருக்கின்றார் என்று, மண் பத்திரிகையின் ஆசிரியர் திரு. வைரமுத்து சிவராசா அவர்கள் அழகாக கௌரவித்தார்.
இவ்வாறே அழகாக கவிச்சுடர் திரு. அம்பலவன்புவனேந்திரன் அவர்களின், இரண்டு புத்தகத்தின் வெளியீட்டை திரு. தியான் மற்றும் திரு.இரா.சம்மந்தன் அவர்கள் ஆரம்பித்து வைக்க, இரண்டாம் நிகழ்சி நான்கு சாதனையாளர்களைக் கௌரவித்தது. இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் 19.08.2023 ஜெர்மனி டோட்முண்ட் நகரில் மிகச் சிறப்பாக, பிரம்மாண்டமாக நடந்ததேறியது.
- புத்தறிவாளன் சி.சிவவினோபன்.
739 total views, 4 views today