அவள் நல்லாப்; பிட்டவிப்பாள்

சிவகுமாரன் – யேர்மனி

அப்பம் சுட்டுவித்த அன்னம்மாவின் படம் மாலைபோடப்பட்டு சுவரில் தெய்வ நிலைக்கு உயர்த்தப்பட்டு இருந்தது. அடுப்புச் சூட்டில் சுருங்கிப்போன முகத்தில்கூட தன் மகளை பட்டதாரியாக்கியதன் மகிழ்சி விரிந்து கிடந்தது.
தந்தை அதிகாலை தோட்டத்திற்கு துலாமிதிக்கச்சென்று கால்தடக்கிவிழுந்து இறந்ததும்,வாழ்கை கண்ணீர் ஆனதும் எனக்கு இன்றுபோல் தெரிகிறது.

அன்னம்மாவின் தன்மானமும் மன உறுதியும் எவரிடமும் கை ஏந்தவிடவில்லை. தன் மகளைப் படிப்பித்து முன்னுக்குக் கொண்டுவரவேண்டும் என்று தன் வாழ்வை தினமும் தீயில் நீராட்டி இடியப்பம் சுட்டு மகளைப் படிக்கவைத்தாள்;.

அப்பக்காறி அன்னம்மா என்று ஊரார் அழைக்கும் போது எல்லாம் மகள் அகிலாவிற்கு வெட்கம் தாங்க முடிய- வில்லை. அந்த வெட்கம் நீண்டகாலம் நிலைக்கவில்லை. அதுவே அவள் நெஞ்சில் எதிர்காலத்தில் கல்வியிலும், சமூகத்திலும் உயாவாக வாழவேண்டும் என்கின்ற இலட்சியவேட்கையை உருவாக்கியது.

ஆண் ஆதிக்கத்தால் அமுக்கப்பட்டு அன்று ஆசிரியர் தொழிலைக் கூட பார்க்க முடியாது தன் கணவனாலும் தந்தையாலும் தடுக்கப்பட தன் அன்னை, அடுப்பம்கரையில் நெருப்புக்குளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதையும் நினைத்த போது அன்று அந்த சமுதாயத்தை அடியோடு மாற்றவேண்டும் என்ற மனம் அவள் உள்ளே புயலாக வீசத்தொடங்கியது.

பாடசாலை நாட்கள் முதல் பல்கலைக்கழகம் வரை பட்டிமன்றம் முதல் பத்திரிகைகள் வரை அகிலாவின் சிந்தனைகள் உயிர்பெற்று பலரையும் விழிப்புறவைத்தன.
‘அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்று ஒளவை சொன்னது தனிய ஆண்களைமட்டுமா? கைகட்டி சேவகம் செய்ய, ஆண்கள் இருந்த இரையில் எம்மை ஆட்சிசெய்ய காதல்,அன்பு பாரம்பரியம் என்கின்ற போர்வையால் எமக்கு பொன்னாடைபோற்றி நம்மையே நாம் உணராது ஒரு அடிமைவாழ்வை தருபவர்கள் இந்த ஆண்கள்.”

இப்படி பல கருத்துக்களை தன் கவிதையிலும் பேச்சிலும் முழங்கிய அன்றைய அகிலாவை இருபதுவருட இடைவெளிக்குப்பின் என் ‘நிலவு ” சஞ்சிகைக்கு ஒரு நேர் காணலுக்காக ஜெர்மனியில் சந்திக்கின்றேன்..
அவள் என்னுடன் பழைய நினைவுகளைமீட்பதும் தன் அன்றாட வீட்டுவேலைகளிலும் கருத்தாகவும் நின்றாள்.
என்ன காந்தன்! என்னிடம் உள்ள திறமைகளை நீங்கள் இப்போ சொல்லும் போதுதான் எனக்கே ஞாபகம் வருகிறது என்றாள் அகிலா..
நீங்கள் இறுதியாக எழுதிய சிறுகதை ஏதும் இருந்தால் தாருங்கள் பார்க்கலாம் என்றேன்.

அவள் இதோ என்றபடி அறைக்குள் சென்று தூக்கிவந்து என் மடியிலேயே தந்துவிட்டு இது சிறுகதை அல்ல இது தான் நான் இறுதியாக எழுதிய நாவல் என்று நிருஷாவை இருத்திவிட்டாள்;. இளமையில் அகிலாவிற்கு இருந்த அதே உருட்டும் விழிகள்.
‘ முகத்தை அலசிவிட்டு வாருங்களேன். இஞ்சை என்னுடன் படித்த காந்தன் வந்திருக்கிறார். என்னை நேர்காணவாம். இரவிரவாக காட்ஸ் அடித்துப்போட்டு போதாக்குறைக்கு பட்டையும் அதுதான் பிறன்டியோ கிறண்டி அதையும் போட்டு ஏதோ இரவு வேலைக்கு போனவர்கள் மாதிரி தூங்கிவடியிறியள். இஞ்;சாலை வாருங்கோவேன் என்று அழைத்தாள் தன் கணவனை அகிலா.
ரவி உடம்பை முறித்துக்கொண்டு வெளியில் வருகிறார்.நேரம் மாலை 6மணி.இனி அடுத்த ஆட்டம் நண்பர்களுடன் சூதாட்டத்திற்கு செல்லவேண்டும். ‘பெரிதாக காசை வைத்து விளையாடுவ தில்லைத்தான் ஆனால் அதைவிடப் பொன்னான பெரிய நேரத்தை அல்லவா வைத்து விளையாடுகிறார்கள்” என்றபடி முகம் துடைக்க துவாயைக் கொண்டு வந்து கொடுத்தாள். ஒரு கையில் தேனீரும் மறுகையில் சிகரட்டும் ஆக இருக்கும் ரவியின் முகம் கழுவி நனைந்த முடியைத் துடைத்து விடுகிறாள் அகிலா.

காந்தனின் பார்வை அன்றைய அகிலாவின் கவிதைகளை மீள அசைபோட்டது.

காலுக்கு சப்பாத்து நூல் கட்டி
அடுக்களையில் நூலாய் இழைத்தும் -நாய்
வாலுக்கும் இல்லா மதிப்புடன்
படுக்கும் பாவையா? பெண்!

நான் தேடும் அகிலாவை இன்று காணவில்லை! கவிதைகள் என்ன வெறும் எதுகைமோனைக்காக எழுதப்படும் நீர் எழுத்துக்களா? அவள் தன் மீது கணவனின் கால்கள் தவறுதலாகப் பட்டுவிடக் குனிந்து அவர் காலைத் தொட்டு வணங்கிவிட்டுச் சென்றாhள்.

அது என் சிந்தனையைக் கலைக்க மீண்டும் என் பேச்சைத் தொடர்ந்தேன். பேச்சின் நடுவே ஒன்றைப் புரிந்து கொண்டேன். ரவிக்கு வேலை இல்லை என்பதும்.வேலை தேடி வந்தாலும் விலகிப்போகும் மனம்படைத்தவர் அவர் என்றும் தெரிந்தது. அதiயும் விட ஒன்று நன்றாகவே தெரிந்து கொண்டேன் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என அன்று சொல்பவர்களுக்கு சாட்டை அடிகொடுத்த கவிக்குயில் அகிலா, இன்று புல்லையும் கல்லையும் வணங்கும் வாழ்கைக்குள் வாழ்கிறாள் என்று.

நீங்கள் என்றாலும் எடுத்துச் சொல்லி மீண்டும் அவளை எழுத்துலகிற்குள் கொண்டுவரலாமே! இருக்கும் மேலதிக பொருளை மட்டுமல்ல அறிவையும் பகிர்ந்துகொள்வேண்டும் என்பதே ஆன்றோர் கருத்து.
ஓய்வு நேரங்களில் எதிர்காலச் சந்ததிகளுக்கு உகந்த பல கட்டுரைகளை எழுதி அனுப்புங்கள் உங்களுக்கு எதிர்காலம் தலைவணங்கும்.என்றேன்
ரவிக்கு குனிந்து சப்பாத்துப் போடமுடியாமல் பியர் வண்டிதடுத்தது. ஓடிவந்து நூலைக்கட்டிவிட்டாள்.அகிலா!
(இது அல்லவா உண்மைக்காதல்.) அவர் ஏதும் பேசவில்லை மாலைக்காட்ஸ் விளையாட்டிற்கு நண்பர்களின் இல்லத்தை நோக்கிப் புறப்படுகிறர்.
நான் சற்று உரத்த குரலில் கேட்கின்றேன்’ சொல்லிப் போட்டுப் போங்களேன் உங்கள் மனைவியை மீண்டும் எழுதும்படி”. முகத்திலே ஒரு இரப்பர் சிரிப்புடன் சொன்னார்’ அவ நல்லாப் பி;ட்டவிப்பாள் இருந்து சாப்பிட்டுவிட்டுத்தான் போகவேண்டும்.”. என்றார்.
எனக்கு தற்கொலை செய்யவேண்டும் போல் இருந்தது. எப்படி என்று கேட்கிறீர்களா? அந்தப் புட்டுப்பானைக்குள் ஒரு வெடிகுண்டோடு குதிக்கவேண்டும் அவ்வளவுதான்.

848 total views, 2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *