நின்று கொல்லும் நீரிழிவை வெற்றி கொள்வோம்
தி.மைக்கல் (தலைவர் யாழ் நீரிழிவு கழகம் யாழ்ப்பாணம்.)
- நீரிழிவு பற்றிய அறிமுகம்
மனித குலத்தின் சுகவாழ்வில் பாரிய பாதிப்பினை ஏற்படுத்தும் நோய்களின் அரசனான நின்று கொல்லும் நீரிழிவு நோய் கிறிஸ்துவுக்கு முன்னர் பல நூற்றாண்டுகளாய் உள்ளது. நீரிழிவை கட்டுபடுத்த உலகசுகாதார ஸ்தாபனமும் சகல அரச மற்றும் தனிப்பட்ட சுகாதார நிறுவனங்களும் மிகவும் பிரயத்தனம்படுகின்றனர் எனினும் இந்நோயாளர் களின் தொகை வருடா வருடம் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. உலகில் 11மூ மக்களும் இலங்கையின் வடமாகாணத்தில் 18மூ மக்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முன்பு நீரிழிவு நோயானது முதியவர்களிடமும் உடல் உழைப்புக் குறைந்த பணம் படைத்தவரிடமும் காணப்பட்டது. தற்போது சிறுவர் முதல், முதியோர் வரை பால் வேறுபாடின்றி நீரிழிவுநோய்க்கு ஆளாகின்றனர். உலக மக்களை நீரிழிவு தொடர்பாக நான்கு வகையாக வகைப்படுத்தலாம்
நீரிழிவுபரிசோதனை மேற்கொண்டு நீரிழிவுநோய் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டவர்கள் இவர்கள் பாக்கியசாலிகள்.
நீரிழிவு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நீரிழிவு நோய்க்கு ஆளாக கூடும் என கண்டு அறியப்பட்டவர்கள்
நீரிழிவு பரிசோதனை மேற்கொண்டு நீரிழிவு நோயாளராக இனம் காணப்பட்டவர்கள்.
நீரிழிவு பரிசோதனை மேற்கொள்ளாது தமக்கு நீரிழிவு நோயுடன் வாழ்பவர்கள் நீரிழிவு நோய் ஏற்பட்டால் பல்வேறு நோய்கள் இயல்பாக ஏற்பட கூடும்.
- நீரிழிவு என்றால் என்ன?
குருதியில் குளுக்கோசின் அளவு நியம அளவிலும் பார்க்க உயர்வடைகின்ற நிலைமையே நீரிழிவாகும்.
குருதியில் குளுக்கோசின் அளவினை கூடி குறையாது சம சீராக பேன வேண்டும்.
ஒவ்வொரு மனிதனின் குருதியிலும் குறிப்பிட்டளவு குளுக்கோஸ் உடலுக்கு சக்தியை வழங்க இருத்தல் வேண்டும். குருதியில் குளுக்கோசின் அளவு உயர்வடைகின்ற நிலைமையே நீரிழிவு எனக் கூறப்படும்.
நீரிழிவு ஒர் குணப்படுத்த முடியாத நோயாகும். ஆனால் இதனைக் கட்டுப்படுத்த வாழ்நாள் முழுவதும் அதற்குரிய கட்டுப்பாட்டு முறைகளைக் கடைப்பிடித்தல் அவசியமாகிறது. - நீரிழிவு பரிசோதனைகள்
Fasting Blood Sugar FBS=70 – 100mg/dl (10 மணித்தியாலங்கள் உணவு உட்கொள்ளாமல் இருந்த பின்னர் குருதியின் குளுக்கோசின் அளவு) Post Pranding Blood Sugar PPBS= 126mg/dl(உணவை உட்கொண்டு 2 மணித்தியாலங்களின் பின்னர் குருதியின் குளுக்கோசின் அளவு)Random Blood Sugar (RBS =140mg/dl எழுந்தமானமாக எந்த நேரமும் செய்யப்படும் பரிசோதனை. HBA1C இது ஆய்வு கூடத்தில் செய்யும் பரிசோதனையாகும். மூன்று மாதம் குருதியிலுள்ள குளுக்கோசின் சராசரி அளவைக் காட்டும் 6.4 க்குள் ,ருத்தல் வேண்டும். நீரிழிவு நிலையை அறிவதற்கு HBA1C பரிசோதனை சிறந்த முறையாகும். - வருடாந்த பரிசோதனைகள்
நீரிழி நோயாளர்கள் வருடத்திற்கு ஒரு முறையாவது தமது இதய,சிறுநீரக, கண், பாதம் (நரம்பு) போன்றவற்றை பரிசோதித்து அவற்றின் செயற்திறன் பற்றி அறிதல் வேண்டும். - நீரிழிவு நோய் வகைகள்
நீரிழிவு வகை ஐ
•உடலில் இன்சுலின் சுரக்கப்படாமையால் ஏற்படும் நிலையே நீரிழிவு நோய் வகை ஐ ஆகும். வைத்தியரின் ஆலோசனைப்படி இவ்வாறான நோயாளர்கள் வாழ்நாள் முழுவதும் தினமும் இன்சுலினை ஊசிமூலம் ஏற்றுதல் வேண்டும்.
நீரிழிவு வகை ஐஐ
•இன்சுலின் சுரப்பிலும், செயற்பாட்டிலும் தடை ஏற்படுவதாலும் பெரும்பாலும் பரம்பரையாலும், முதுமை காரணமாகவும், துரித உணவுப் பழக்கம் காரணமானமாகவும், சீனி பண்டங்கள் மற்றும் அதிக மாப்பொருட்கள் உண்பவர்களையும் உடல் பருமனானவர்களிடமும் இவ்வகை நீரிழிவு நோய் ஐஐ காணப்படுகின்றது. நீரிழிவு நோயாளராக இனங்காணப் பட்டவர்கள் வாழ்நாள் முழுவதும் வைத்தியரின் ஆலோசனைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். தவறின் பல்வேறு நோய்களுக்கு ஆளாக வேண்டி வரும்.
•குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஒருதடவையாவது நீரிழிவு நிலையினை HBA1C பரிசோதனை செய்து வைத்தியரிடம் காண்பித்து அவரின் சிபாரிக்கு அமைவாக மருந்துகளை பயன்படுத்த வேண்டும் நோய் நிலைமை மாற்றம் அடைவதால் ஒரு முறை பெறப்படும் மருந்தினை மாதக்கணக்கில் தொடர்ந்து பயன்படுத்தக்கூடாது.
•நீரிழிவு நோயாளர்கள் எக்காரணம் கொண்டு மருந்துகளை கூட்டிக்குறைக்கவோ எடுப்பதை சுயமாக நிறுத்தக்கூடாது.
கற்பகால நீரிழிவு
•இது கற்ப காலத்தில் தற்காலிகமாய் ஏற்படுகிறது. கற்பகாலம் நிறைவுற்றதும் நீரிழிவு இல்லாம போக கூடும் சிலருக்கு இது தொடரலாம். - நீரிழிவின் அறிகுறிகள்
•அடிக்கடி சிறுநீர் கழித்தல் • அதிகப்படியான தாகம்
•உடல் பலவீனம் ஃ நிறை இழப்பு • அதிகப்படியான பசி
•புண்கள் ஆறுவதற்கு நீண்ட நாட்கள் எடுக்கும். - நீரிழிவால் ஏற்படும் பாதிப்பு
• மாரடைப்பு • பாரிச வாதம்
• சிறுநீரக செயலிழப்பு • கண் பார்வையிழப்பு
• மாறாப்புண்களால் பாதம் அகற்றப்படும் நிலை ஏற்படலாம்
• கட்டுப்பாடற்ற நீரிழிவினால் உடல் உறுப்புக்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகின்றன. - குருதியில் குளுக்கோசின் அளவு கூடினால் ஏற்படும் பாதிப்புக்களாவன.
• பார்வை மங்கும் • வயிற்றுப் பிரட்டல்.
• அதிக தாகம் • அடிக்கடி சிறுநீர் கழித்தல்
• சோம்பலத் தன்மை • அதிகபசி ஃ களைப்பு - நீரிழிவை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?
• அளவான ஆரோக்கியமான ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ளுதல் வேண்டும்.
• சோறு, மா பண்டங்களை அளவாக உண்ணுதல் வேண்டும்.
• சீனி, சீனி கலந்த பானங்கள் (சோடா, ஜஸ்கிறீம் வகைகள்) மற்றும் சீனிப் பண்டங்களைத் தவிர்த்தல் வேண்டும்.
• தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தல் வேண்டும். (வேக நடையே சிறந்த உடற்பயிற்சியாகும்)
• மன அழுத்தமற்று வாழுதல் வேண்டும் இதற்கு தியானம், யோகா பயிற்சிகள் சிறந்தது.
• வாழ்நாள் முழுவதும் வைத்தியரின் ஆலோசனைப்படி மருந்துகளை கிரமமாக உட்கொள்ளுதல் வேண்டும்.
• குருதியில் குளுக்கோசின் அளவை கிரமமாக பரிசோதித்தல் வேண்டும். (HBA1Cபரிசோதனை மூன்று மாதத்திற்கு ஒரு தடவை செய்வது சிறந்தது) - உடற்பயிற்சியால் ஏற்படும் நன்மைகள்
• உடல் நிறை அதிகரிப்பு குறையும்.
• இரத்த அழுத்தம் குறைந்திடும்.
• சீரான உடல் அமைப்பு ஏற்பட்டு உடல் அழகு அதிகரிக்கும்
• குருதியில் குளுக்கோசு மற்றும் கொழுப்பின் அளவு குறையும்
• உற்சாகம் ஏற்படும்;. - உணவு முறை
•சாதாரண ஒருவருக்கு 1500 முதல் 2000 கலோரிவரை ஒருநாள் செயற்பாடுகளுக்கு தேவையாக உள்ளது. இதனை பெற்றுக்கொள்ள காலையிலும் இரவிலும் ஜந்து இடியப்பம், மூன்றுபுட்டு, நான்கு தோசை இவற்றில் ஏதாவது ஒன்றை அதிக மரகறிவகையுடன் உண்ணுதல்; வேண்டும்.
•மதிய உணவாக ஒன்றரை கப் சோற்றுடன் அதின் அளவுக்கு அதிகமான மரகறிவகைகள் மற்றும் தீப்பெட்டி அளவு மீன் அல்லது மாமிசத்துடன் சேத்து உண்ணுதல் வேண்டும்
•உண்ணும் மாப்பொருள்களினால் கிடைக்க பெறும் சக்தியை பயன்படுத்த கூடியதாய் உடல் உழைப்புகள் ,இருத்;தல் வேண்டும். தவறின் மேலதிக குழுக்கோசு கொழுப்பாக மாற்றமடைந்து குருதிக்கலன்களை அடைக்கக்கூடும்.
•அதிக சீனி அற்ற பழங்களை உண்ணுதல் வேண்டும். (நாவற்பழம், கொய்யாப்பழம், பப்பாசி பழம், நெல்லிக்காய், விழாம்பழம் சிறந்தவை)
•நாம் ஒவ்வொரு வேளைகளிலும் உண்ணும் உணவு சகல ஊட்டச்சத்துக்களையும் உள்ளடக்கப்பட்ட நிறை உணவாக இருத்தல் வேண்டும் இவ்வகையான உணவுகள் நோய் எதிர்ப்புசக்தியைக் கூட்டும்.
•காலை உணவு 7.00 மணிக்கும் மதிய உணவு 1.00 மணிக்கும் இரவு உணவு 7.00 மணிக்கும் உன்னுதல் சிறந்ததாகும்.
- மன அழுத்தம்
• மன அழுத்தமே சகல நோய்களுக்கும் காரணமாகின்றது.
• ஆசையை விட்டால் ஆனந்தம் உண்டு.
• எமது பேராசையே மன அழுத்தத்திற்கு காரணமாக அமைகின்றது எம்மை மற்றவர்களிடம் ஒப்பிட்டு பார்ப்பததை தவிர்த்தல் வேண்டும். தினமும் தியானம் செய்வதாலும், யோகா பயிற்சி ஈடுபடுவதாலும் மற்றும் சுவாசப் பயிற்சியிலும்,இறைவழிபாட்டிலும் சந்தோசமாக சகலருடனும் கதைத்து மகிழ்வதாலும் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம்.
1,201 total views, 2 views today