வெற்றிமணி இலங்கைச் சிப்பிதழ் கண்டு விரல்களில் பட்டுத்தெறித்த கவிதை!
வெற்றிமணி நாதம் ஜேர்மனியில் ஒலிக்க
முத்தமிழுமாய செய்திகளை கோர்த்தடுக்கி
அச்சுருவில் நம் தமிழை அழகு செய்து சுமந்து
பன்நாடெங்கும் பவனி வருகிறது காண் – இனிதே
உற்ற பல செய்திகளை தேடித்தன் பக்கமதில்
இட்டழகு கோலமுடன் வீடு வந்தது நேற்று
தொட்டதனை பார்க்க தோன்றியதே மகிழ்ச்சி
அற்புதமாம் அழகு பத்திரிகையின் கனதி
ஆனி மாத இதழ் அலங்கார தோரணையில்
இலங்கை தமிழ் மண்ணை இனிதாக நேசித்து
பற்பலவும் நற்சுவையும் பல மடங்கு புதினங்களும்
தன்னியல்பு போல தனித்து வந்து காட்டியது
வெற்றிமணி ஏன் இத்தனை அழகு என
சுற்றிலும் எண்ணிப்பார்த்தேன் – வியந்து
ஓவியக் கலைவேள் என்ப, பிரதம ஆசான் என்று
தெரிந்ததும் புரிந்தேன் அதனால் தான் அழகு என்று
சுட்டெரிக்கும் வெயிலில் சுட்டுத்தள்ளிய படமும்
கட்டமைப்புக்குள் பெண்கள் மலையகம் பற்றிப் பேச
வாழ்க்கையை பட்டம் என்று சொல்வதை விடுத்து
செவ்வகம் போட்டுச் சொன்ன செம்மையும்
யாழ்ப்பாண கதலி பற்றி சிறப்பாக எழுதி வைத்த
பார்த்தீபன் எழுத்து வரலாறு கதையின் சிறப்பு
சாப்பாடு என்றால் நல்ல சரியான யாழ் மண் என்ற
நோக்கோடு எழுதித் தீர்த்த சிறப்புக்கள் போற்றி போற்றி
திவ்வியா சுஜன் எனும் கலாசூரி நடனமங்கை
பாரதி பற்றி தொடராய் பல பக்கம் எழுதித்தள்ளும்
இருபத்தி ஏழாம் பகுதி அதுபற்றி படித்தேன் மகிழ்வாய்
எழில் கொஞ்சிம் இலங்காபுரி பற்றி சிறப்பு
விதவைகள் தினத்தையொட்டி ஆகாயம் இல்லா
நிலவை அழகாக சொன்னார் ரஞ்சினியம்மா
வாழ்நாள் நூலகமாய் வாசிப்பின் மேன்மை பற்றி
திக்குவல்லை மண் கமால் செம்மையாய் தந்துள்ளார்
மனதை மயக்கும் பாசிக்கூடா கடலும் கரையும்
இலக்கியத்தில் இவர்கள் தொடர் முப்பத்தொரு நான்கு
தல்லாயிருக்க வேண்டிய நாசமானதெப்பிடி
இந்திர விழாவிம் வல்வெட்டித் துறையுமென்பதுவும்
எழுதாத கவிதைக்கு முதல் பரிசு படமும்
சாநிழல் நூலும் வெளியீடும் – திருப்பிய போதில்
நமைப் பிரிந்த லண்டன் விமல் அவர்களை
கண்டு மனம் நொந்தோம் கனத்து
இருபதொடு ஒன்பதாம் ஆண்டு நிறைவு
விரைவுடனும் வீறுடனும் நிமிர்ந்துலவும் வெற்றிமணி
நெடுங்காலம் வாழ வேண்டும் நின்றுலகில்
சீரோங்கி தமிழ் நாதமாய் வென்று மணி ஒலிக்கட்டும்
ஸ்ரீமதி சுபாஷினி பிரணவன். இயக்குநர்.
தேஜஸ்வராலயா கலைக்கூடம்.இலங்கை
1,233 total views, 9 views today