சிலப்பதிகாரத்தில் புனைவு நெருடல்


ஏலையா க.முருகதாசன்- யேர்மனி

இலக்கிய வரலாறாகட்டும்,இன வழித்தோன்றல் தொடர்நிலை வரலாறாகட்டும் எழுதியவர்கள் புனைவு இன்றியும்,பூசி மெழுகுதல் இன்றியும் எதையும் தவிர்க்காமல் எழுதியிருப்பார்கள் என்ற வாசிப்போரின் பெருநம்பிக்கையைக் கேடயமாகப் பாவித்து எழுதுவோர் தமக்குச் சார்பாக வரலாறுகளை தாம் விரும்பியபடி எழுதுகிறார்களோ என்பது பொதுவெளிக் கதைத்தலில் ஆங்காங்கே கதைக்கப்பட்டு வருகின்றது. வரலாறுகள் எதுவாகினும் அந்த வரலாறுகளைப் படிப்போரின் மனதில் பல விடை தெரியாத கேள்விகளும் சந்தேகங்களும் எழுவது இயல்பானதே. தீர்ப்புச் சொன்ன வழக்குகளே மீண்டும் விசாரிக்கப்பட்ட சம்பவங்கள் நிறைய உண்டு.பாண்டிய மன்னனால் தீர்ப்புச் சொல்லப்பட்ட வழக்கு மீண்டும் கண்ணகியால் தோண்டி எடுக்கப்பட்டு பாண்டியன் நீதியால் தண்டிக்கப்பாட்டான் என்ற வரலாறு சிலப்பதிகாரத்தில் உண்டு.அதே வரலாற்றில் நெருடலும் உண்டு .ஆய்தல்,துணிதல்,எழுதுதல் என்பது நேர்மையின் மேன்மை வெளிப்பாடாகவே கருதப்படுகிகின்றன.

காப்பியங்கள், காவியங்கள், புராண இதிகாசங்களில் ஏராளமான புனைவுகளும் மூடிமறைக்கப்பட்ட விடயங்கள் இருப்பது நிரூபிக்கப்பட்டு வருகின்றன. ஆயிரக்கணக்கான வருடங்களாக நம்பப்பட்டவை மீதே கேள்விகள் எழும். இது உண்மையா? இது சாத்தியமா? எனக் கேள்விகள் எழுந்து ஒன்றுடன் ஒன்று ஒப்பீடு செய்து பார்க்கப்புடுகின்றன. ஒப்பீடுகள் ஆய்வுகளாக பரிணாம வளர்ச்சியடையும் போது, அது நோக்கிய கேள்வி எழும் போது வரலாற்று ஆய்வாளர்களும், அதைப் பின்பற்றி, அது சமுதாயத்துக்குள் பரவி அந்த வரலாறுகளில் சில தவறுகளிருக்கின்றன என்று அறீவுஜீவிகள் சிந்தித்து கேள்வி எழும் போது, வரலாறுகளில் எங்குமே தவறு நிகழவில்லை, சாத்தியமானவற்றைத்தான, உண்மையைத்தான் வரலாற்று ஆசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள் என பல அறிஞர்களே சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகின்றது. ஆனால் வரலாற்று நூல்களில் பக்கசார்பாக, மூடிமறைத்து எழுதப்பட்டவை ஆய்வுக்குட்படுத்தப்பட்டு பொய் புனைவுகள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.

சிலப்பதிகாரத்தில் வரும் எந்த நிகழ்வையுமே யாருமே மறுத்துச் சொல்லத் தயாராகவில்லை. சிலப்பதிகாரச் சம்பவங்களை குறை சொல்வதா என்று பரவலான எண்ணம் அனைவரின் மனதிலும் ஆழப் பதிந்துவிட்டது. நூல்களாகவும்,உரைகளாகவும்,பட்டிமன்றவிவாதமாகவும்,கல்லூரிகளிலும்,பல்கலைக்கழகங்களிலும் பாடநூலாகவும், முனைவர் பட்டத்தின் ஆய்வுக் கட்டுரைக்கான விடயமாகவும், எல்லோராலும் நம்பப்படுகின்றன ஒரு இலக்கியத் தின் மீது கேள்வி வைக்கலாமா என்ற கேள்விக்கு, எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்ற திருக்குறளின்படியும், அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று நம்பாதெ ஏன?;எதற்கு?எப்போது? ஏன்று கேள்விகளைக் கேள் என்று சொன்ன கிரேக்கத்தின் தத்துவஞானி சாக்கிரட்டீஸைப் பின்பற்றியும் சந்தேகங்களை கேள்விகளாக்கி விடை காண முயற்சித்தல் அறிவின் அவாவாகவும்,அகன்று விரிந்து செல்கின்றன அறிவுஜீவத்தனமாகவும் கருதப்படுகின்றது.

சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகியை விட்டுப் பிரிந்து மாதவியிடம் ஏன் போனான் என்பதற்கு „கோவலன் நிறைகளும் குறைகளும் உள்ள தலைவன்,பரத்தையர் வீதிகளில் எப்பெபாழுதம் திரிபவன் என்று இளங்கோவடிகளும் எழுதியதாக இநூலை ஆய்ந்;தவர்கள் சொல்லியிருக்கிறார்கள், அதுவே,அதுசார்ந்து பேசுபவர்களினால் மக்களின் மனங்களில் பதியப்பட்டும் இருக்கின்றது.

கோவலன் கண்ணகியைத் திருமணம் செய்வதற்கு முன்னரே பரத்தையர் தெருவெங்கும் அலைந்த பரத்தையரிடம் உடல் சுகம் கண்டவனாயின்,கண்ணகியின் பெற்றோhர் அதனை அறியாதவர்களாகவா இருந்திருப்பார்கள்.
தனது மகளுக்கு ஏற்ற ஒரு மணமகனைத் தேடும் போது கோவலன் பற்றி தீர விசாரிக்கமலா இருந்திருப்பார்கள் என எண்ணத் தோன்றுகின்றது.என்னதான் கோவலன் பெரும் வணிகச் செல்வந்தனாக இருந்த போதும் தமது மகளுக்கு சரியான மாசுமறுவற்ற மணமகனைத் தேடியபின் அவனைப் பற்றித் துருவித்துருவி ஆராயமலா விட்டிருப்பார்கள்.

2010 ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டுக்கு யாழ் பல்கலைக் கழகத்திலிருந்து ஒரு பெண் விரிவுரையாளர் அம்மாநாட்டுக்கு அனுப்பிய ஆய்வுக் கட்டுரை வீரகேசரிப் பத்திரிகையின் மின் பதிப்பில் வந்த போது அதில் „கண்ணகிக்கு தாம்பத்திய உறவில் இருந்த விருப்பமின்மையே, கோவலனை மதாவியை நோக்கிச் செல்ல வைத்தது என்றிருந்தது. அதை வாசித்த போது இதுவரைகாலமும் கோவலன் கணணகியின் கதைபற்றி இருந்த எனது பார்வை உற்று நோக்குதலுக்கு உள்ளானது.

கோவலனுக்குக் கண்ணகியுடனான தாம்பத்திய உறவில் திருப்தி ஏற்படாததாலோ அல்லது கண்ணகிக்கு தாம்பத்திய உறவில் விருப்பமின்மை காரணமாகவோ அவர்களுக்குள் உடலுறவு ஏற்படவில்லை அதனால் கோவலன் கண்ணகி மீது விருப்பமற்றவனாகக்கூட இருந்திருக்கலாம் என்று கருத வேண்டியுள்ளது.
அதே வேளை ஒரு ஆணும் பெண்ணும் காதல் வசப்படுவது என்பதுகூட அவை மனம் சார்ந்தது மட்டுமல்ல உடலுணர்வும் சார்ந்தது என்பதே யதார்த்தமானது.காதல் என்பது காமமும் கலந்ததுதான்.காதலனும் காதலியும் ஒருவரின் உடல் மீது ஒருவர் ஆசை வைப்பதன் மூலமே காதல் உருவாகின்றது என்ற யதார்த்தத்தை மறுக்க முடியாது.

உடலிருந்தால்தான் அதில் மனம் என்று சொல்லிக் கொள்கின்ற உருவமற்ற ஒரு உணர்வும் இருக்கும் என்பதே உண்மையாகும்.இக்கதையில் இன்னொரு விடயமாக கோவலனுக்குக் கண்ணகியைத் திருமணம் செய்து வைக்கின்ற போது பதிமூன்று வயது என மின்தமிழ்ச் செய்தியில் வாசித்திருந்தேன். பின்னர் இது தொடர்பான மின்தமிழ் ஊடான கருத்தாடலின் போது கண்ணகி திருமணம் செய்த போது அவளுக்கு பன்னிரண்டு வயது என்றிருந்தது.
கோவலனும் கண்ணகியும் காதலித்துத்தான் திருமணம் செய்து கொண்டார்கள் என்று சிலப்பதிகார நூலை ஆய்ந்தோர் சொல்லுகிற போது,காதலிப்பாதற்கான பூரணத்துவமான பாலியல் ஈர்ப்பு பன்னிரண்டு வயதில் ஏற்படுமா என்பது கேள்வியாகின்றது.

பன்னிரண்டு வயது என்பது ஒரு பருவ மங்கைக்கு உரிய வயது அல்ல.அது ஒரு சிறுமிக்கு உரிய வயதேயாகும்.
இற்றைக்கு நாறப்து வருடங்களுக்கு முன்புவரை பருவமடைதல் வயது பதினைந்திலிருந்து பதினாறு வயதுவரையும் அப்பாலும் இருந்திருக்கிறது.இவ்வயதை பெண்பிள்ளைகள் எட்டுவதற்கு முன்னர் அவர்களின் உடலும் பாலியல் உறுப்பும் அவர்ளின் மார்பகம் போன்றவையும் துரிதமாக வளரத் தொடங்குகின்றது.
அவ்வளர்ச்சியின் முகிழ்ப்பாக பருவமடைதல் நடைபெற்றுப் பின்னரான காலங்களில் தனது இணையுடன் அனுபவிக்கப் போகும் உடலுறவு எத்தையது என்பதையும் உடலுறவு என்:றால் என்ன,அதன் பெறுபேறான இன்பம் என்ன என்பதையும் தன்னறிதல் மூலமம் தோழிகள் மூலமூம் இயல்பாக பழகும் தனது பெண் உறவினர்கள் மூலமும் அறிந்து கொள்கிறாள்.

கண்ணகியின் திருமணத்தில் ஒரு கேள்வி தெக்கி நிற்கின்றது.ஒரு பருவமடையாத சிறுமியான கண்ணகிக்கு, கணணகியின் பெற்றோர் செல்வந்த வணிகனான கோவலனை தமது மருமகனாக்க வேண்டுமென்பதற்காக திருமணம் செய்து கொடுத்தார்களா என்பதேயாகும்.

அதுவல்லாது சிறுமியான கண்ணகி ஏதோ ஒரு நிலையில் பருவமடைந்திருந்தாலும் அவளுக்கு பருவமங்கைகளுக்கு இயலபாக ஏற்படும் பருவக் கிளர்ச்சிக்கு அவளுக்கு ஏற்படுவதறகான உடலியல்பு இருந் திருக்காது என்பதையும் சிந்திக்க வேண்டியுள்ளது.கண்ணகியின் பெற்றோர் தவறுவிட்டுள்ளார்கள் என்பதாகக்கூட எடுத்துக் கொள்ளலாம்.

அரிதாக அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் பன்ளனிரண்டு பதின்மூன்று வயதுப் பெண்களின் திருமணத்தின் மூலமாகவும் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்கிறார்களே என்ற வாதம் முன் வைக்கப்படுகின்றது என்று வைத்துக் கொண்டாலும்,பிள்ளைகளைப் பெறுதல் உடலுறவுச் சுகத்தினையும் கலந்தனுபவித்துத்தான் பெற்றதாக கருதிவிட முடியாது.தாம் திருமணத்திற்கு கட்டுப்பட்டவர்கள்,தமக்குத் தாலி கட்டியவனின் சொல்லுக்கு கீழ்படிந்து அடங்கிப் போகுதல் என்பதற்கமைய தனது கணவனின் விருப்பம் எதுவோ அதை நிறைவேற்றுவதே பெண்ணாகப் பிறந்தவர்களின் கடமை என்றெண்ணி தன்னை அனுபவிக்கும் கணவனின் சுகத்தை மட்டுமே கருத்தில் கொண்டு தன்னை ஒரு சடப்பொருளாக்கி கொள்பர்களாலும் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.வன்புணர்வுக்கு உட்படும் பெண்களும் கருத்தரிப்புக்குள்ளாகிறார்கள் என்பது அதற்கு ஒரு உதாரணமாகும்.

கொஞ்சமான உண்மைச் சம்பவங்களுக்கு ஏற்றாற் போல இவ்விலக்கியம் இப்படித்தான் எழுதப்பட வேண்டும் என்பதற்கமைய,அவ்வுண்மைகளைச் சுற்றி இளங்னேகாவடிகளால் புனையப்பட்ட கதைதான் இது என சிலப்பதிகாரத்தை நோக்குவதைத் தவிர்க்க முடியவில்லை.காலம் காலம் நம்ப வைக்கப்பட்டு மக்கள் அதற்கு இசைவாக்கம் பெற்றவர்களாக மாறிவிட்ட நிலையில் சிலப்பதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்துவதே தவறு என்பதே தவறாகும்.

கோவலன் மாதவியிடம் போனதற்கும்,கோவலன் கொலையுண்டதற்கும், பாண்டிய மன்னன் சிம்மாசனத்திலிருந்து விழுந்து இறந்ததற்கும், மதுரை எரியூட்டபட்டதற்கும் மூல காரணம் எதுவென்று ஆய்கையில் கண்ணகியின் பெற்றோர் பொய்யுரைத்தும்,மூடிமறைத்தும், கண்ணகியின் உடல் தகுதியைக் கவனத்தில் எடுக்காது கண்ணகியின் சிறுமிப் பராயத்தில் உடலுறவில் விருப்பமில்லாத ஒருத்தியைத் கோவலனுக்கு திருமணம் செய்து வைத்து கோவலனை பரத்தையர் விரும்பியாக மாற்றியமைக்கு கண்ணகியின் பெற்றோரோ காரணமாகும் என்பது எனது பார்வையாகும்.

„தாம்பத்ய உறவென்பது ஒரு ஆணும் பெண்ணும் அதுபற்றி முழுமையாக அறிந்து,மனதில் காதலும் உடலில் காமமும் கொண்டு ஓருயிராவதே“

752 total views, 9 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *