அன்று தாயகத்தில் உங்கள் பெற்றோருக்கும் தெரிந்த பெயர் பிறைட்டன்.
பிறைட்டன் கடை. 1988
யேர்மனிக்கு 1979 களில் தமிழர்கள் இலங்கையில் இருந்து வந்தபோது, தமிழர்களுக்கு மொழி, வேலை, குளிர், உணவு, இவையே முதல் எதிர்கொண்ட பிரச்சினைகளாக இருந்தன. என்னதான் இங்கு உணவு இருந்தாலும் சுள் என்று உறைப்பாக உண்ணவில்லை என்றால் வயிறு தாங்காது.
அரிசி, வெங்காயம், கறிப்பவுடர் இப்படி சில இருந்தன. எங்கட இலங்கை மிளகாய்த்தூள் கிடையாது. குசயமெகரசவ இல், முல்கைமில், பண்டாரி இந்தியன் கடை மட்டுமே இருந்தது. நகரம் விட்டு நகரம் போக அனுமதியற்ற காலம். ஏலம் கிராம்பு என்று எல்லாம் அலையமுடியாது.
அப்படியான ஒரு காலத்தில் ஒரு தமிழர் கடை ஒன்று இருந்தால் எப்படி இருக்கும், அம்மாடி அம்மாவைக் கண்டது போல் அல்லவா இருக்கும்.
அப்படி ஒரு அங்காடி டோட்மூண்ட் நகரில் 1988 ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பித்தவர் பிறைட்டன். கடைப்பெயரும் பிறைட்டன்.
வீடும் வேலையும் என்று போன வாழ்க்கை கடைவீதிக்கு சென்று வருகிறேன் என்று சொல்லி எம்மை வெளிக்கிட வைத்தது. பிரதான பொழுது போக்கு வீடியோவில் படம் பார்ப்பது, அந்த படங்களை பிறைட்டன் கடையில் எடுத்தோம் , கடலை வடை தோசை, மரக்கறி, மீன், என்று இலங்கை உணவுகள் வீடுகளுக்குள் புகுந்தது.
தாயகத்தில் உள்ள பெற்றோருக்கு நாம் இங்கு இப்ப எல்லாம் பிரைட்டனில் வாங்கலாம் என்று எழுதிய கடிதங்கள் பெருத்த ஆறுதலானது. அவர்கள் வாயிலும் பிரைட்டன் நுழைந்தது.
சனிக்கிழமை களில், வலைப்பந்தாட்டம், கிரிகெட், உதைபந்தாட்டம் என இளைஞர்கள் ஒன்று கூடும் இடமாகவும், கடை அமைந்தது.
திரையில் யேர்மனியில் முதல் பார்த்தபடம் அக்கினி நட்சத்திரம்.அதனையும் திரையில் வெளியிட்டது பிரைட்டன்.
இவ்வாறு ஆரம்பகாலத்தில் கலக்கிய, கைகொடுத்த மனிதர் அவர்.அவருக்கு யேர்மனியில் தமிழர் தெருவிழாவில், மாலை அணிவித்து கௌரவித்தது மகிழ்வான செய்தி. வெற்றிமணி பத்திரிகையின் வாழ்த்துகள்.
630 total views, 2 views today