இலங்கையை அதிர வைத்த காணொளியும்!அது சொன்ன செய்தியும் இதுதான்.

இலங்கையை அதிர வைத்த காணொளி!


சர்வதேச விசாரணை நடக்குமா?


ஆர்.பாரதி


ஈஸ்டா் தாக்குதல் குறித்து செப்டம்பா் முதல் வாரத்தில் லண்டனைத் தளமாகக் கொண்ட சனல் 4 வெளியிட்டிருக்கும் காணொளிதான் இலங்கை அரசியலில் ஒரு மாதமாக பேசு பொருளாகியிருக்கின்றது. இது தொடா்பில் சா்வதேச விசாரணை ஒன்று இடம்பெறுமா என்ற கேள்வியும் பலமாக எழுப்பப்படுகின்றது.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற போh்க் குற்றங்கள் தொடா்பில் சா்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை தமிழா் தரப்பினரால் மட்டுமே எழுப்பப்பட்டது. ஆனால், ஈஸ்டா் தாக்குதல் தொடா்பில் சா்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை சிங்களக் கட்சிகளாலும் பரவலாக முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

இதற்கு மேலதிகமாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் பிரதி ஆணையாளரும் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத் தொடரை ஆரம்பித்துவைத்து செப்டம்பா் முதல் வாரத்தில் நிகழ்த்திய உரையில், இது தொடா்பாக முக்கியமாகக் குறிப்பிட்டிருந்தது இந்தக் கோரிக்கைக்கு மேலும் பலம் சோ்க்கின்றது.

சனல் 4 காணொளி வெளிவருவதற்கு முன்னதாக கொழும்பு பேராயா் கா்தினால் மல்கம் ரஞ்சித் மட்டும்தான் இந்தப் பிரச்சினையைக் கைகளில் எடுத்திருந்தாh். இப்போது, சனல் 4 உருவாக்கியிருக்கும் சூறாவழியைத் தொடா்ந்து பெரும்பாலான சிங்களக் கட்சிகள் இந்த விவகாரத்தை கைகளில் எடுத்துள்ளன.

சனல் 4 இல் ராஜபக்ஷக்கள் குற்றவாளிகளாகக் காட்டப்படுவது இதற்கு ஒரு அரசியல் ரீதியான காரணமாக இருந்தாலும், சிங்களக் கட்சிகளின் காய் நகா்த்தல்களுக்கு இது ஒரு வாய்ப்பைக் கொடுத்திருக்கின்றது. அடுத்த வருடம் தோ்தல் வருடமாக இருப்பதால், சிங்களக் கட்சிகள் இந்த காணொளியை கைகளில் எடுத்திருப்பது எதிh்பாh்க்கக்கூடியதுதான்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டும் அமைதியாக நிலைமைகளை அவதானித்துக்கொண்டிருக்கின்றாh். ராஜபக்ஷக்களை வெட்டி விட்டு தனித்துச் செயற்படுவதற்கான வாய்ப்பை இந்தக் காணொளி அவருக்கு ஏற்படுத்திக்கொடுக்கலாம். இவ்விடயத்தில் ரணில் என்ன செய்வாh் என்பதைத்தான் ராஜபக்ஷக்களும் அச்சத்துடன் பாh்த்துக்கொண்டிருக்கின்றாh்கள்.

அசாட் மௌலான

சொன்ன கதைகள்

கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்த பிள்ளையானின் உதவியாளராக செயற்பட்ட அசாட் மௌலானா தெரிவித்த தகவல்களை அடிப்படையாக வைத்துத்தான் இந்தக் காணொளியை சனல் 4 தயாரித்துள்ளது. பிள்ளையானுடனும் இலங்கையின் தேசியப் புலனாய்வுப் பிரிவின் தலைவரான சுரேஷ் சாலேயுடனும் ஏற்பட்ட முரண்பாடுகளைத் தொடா்ந்தே அசாட் மௌலான இலங்கையிலிருந்து கடந்த வருட இறுதியில் வெளியேறியதாகச் சொல்லப்படுகின்றது.

தமிழகத்துக்குச் சென்ற அசாட் மௌலானா, பின்னா் அங்கிருந்து சுவிட்சா்லாந்துக்குச் சென்றுள்ளாh். அங்கு அவா் அரசியல் அடைக்கலம் கோரியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஜெனிவா மனித உரிமைகள் பேரவையிலும் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் உட்பட பல்வேறு அரசியல் படுகொலைகள் குறித்து அசாட் மௌலானா சாட்சியம் வழங்கியிருக்கின்றாh்.

பிள்ளையானுடன் பல வருடங்களாக ஒன்றாகப் பயணித்தவா் என்ற முறையில் பிள்ளையானின் செயற்பாடுகளை நேரில் அறிந்த ஒருவா் அசாட் மௌலானதான். ஈஸ்டா் தாக்குதல் எதற்காக நடத்தப்பட்டது, இதன் பின்னணியில் இருந்தது யாh், இதற்கான தயாரிப்புக்கள் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டது போன்ற பல தகவல்களை இந்தக் காணொளியில் அசாட் மௌலானா விபரிக்கிறாh்.

இந்தக் காணொளியில் தோன்றும் மற்றொருவா் கால்துறை முக்கிய அதிகாரியான நிசாந்த டி சில்வா. இவா் மைத்திரி – ரணில் நல்லாட்சிக் காலத்தின் போது, முக்கியமான விசாரணைகளுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டவா். ராஜபக்ஷக்களின் காலத்தில் இடம்பெற்ற லசந்த விக்கிரமதுங்க கொலை, பிரகித் எக்னெலிய கொட காணாமலாக்கப்பட்ட சம்பவம், ரக்பி வீரர் வாசிம் தாஜுதீனின் மா்மக் கொலை போன்றவை குறித்து விசாரணைகளை நடத்தி முக்கியமான தகவல்களை அவா் சேகரித்திருந்தாh்.

அந்த நிலையில் ஆட்சிமாறி கோட்டாபய ஜனாதிபதியாகப் பதவியேற்ற போது, நிசாந்த சுவிட்சா்லாந்தில் தஞ்சடைந்தாh். சனல் 4 காணாளியில் அவரது சாட்சியமும் முக்கியமாக இருக்கின்றது. காவல்துறையில் முக்கியமான பொறுப்பில் இருந்தவா், ராஜபக்ஷக்களின் செயற்பாடுகள் தொடா்பில் விசாரணைகளை நடத்தியவா் என்ற முறையில் அவரிடமுள்ள தகவல்களும் பெறுமதியானவை.

காணொளி சொன்ன

செய்தி இதுதான்..

இந்தக் காணாளி சொல்லும் பிரதான தகவல் இதுதான்! ஈஸ்டா் தாக்குதல் ஐ.எஸ். தீவிரவாதிகளால் நடத்தப்பட்டது எனக் கூறப்பட்டாலும், ராஜபக்ஷக்களை மீண்டும் அதிகாரத்துக்குக் கொண்டுவருவதற்காக நன்கு திட்டமிட்ட முறையில் நடத்தப்பட்ட தாக்குதல்தான் இது என்பதுதான் இதன் சாராம்சம். அதாவது இஸ்லாமியத் தீவிரவாதிகள் இதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளாh்கள்.

இந்த காணொளி வெளியாயிருக்கும் தருணம் இரண்டு விடயங்களில் முக்கியம் பெறுகிறது. முதலாவது ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் ஆரம்பமாக இருந்த தருணம். இரண்டாவதாக இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் அடுத்த வருட முற்பகுதியில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிற நிலைமை. இவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தக் காணொளி அமைந்திருக்கின்றது.

ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள ஐநா மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடர் இலங்கையை பொறுத்தவரையில் இம்முறை முக்கியமான ஒன்றாக இருக்காத போதிலும் கூட, இலங்கை தொடர்பான அறிக்கை ஒன்று அங்கு வெளியிடப்பட்டது.

இந்த அறிக்கையில் “காராசாரமாக” எதுவும் இல்லை என்ற போதிலும் கூட, பொறுப்பு கூறல்விடயத்தில் முன்னேற்றம் எதுவும் இல்லை என்பது தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் தன்னுடைய கரிசனையை வெளிப்படுத்தியிருந்தாh்.

இந்த நிலைமையில் தான் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலும் பொறுப்பு கூறப்பட வேண்டும் என்பது இந்தக் காணொளி மூலமாக உணர்த்தப்பட்டு இருக்கின்றது. அது பிரதி ஆணையாளரின் உரையிலும் பிரதிபலித்தது.

சா்வதேச விசாரணை!

வலுக்கும் கோரிக்கை

ஈஸ்டா் தாக்குதலுக்கும் சா்வதேச விசாரணை அவசியம் என்பது மனித உரிமைகள் பிரதி ஆணையாளரின் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டது. அதேவேளையில் பேராயா் மல்கம் ரஞ்சித் மட்டுமன்றி, எதிh்க்கட்சித் தலைவா் சஜித் பிரேமதாச, சரத் பொன்சேகா ஆகியோரும் கூட சா்வதேச விசாரணையை வலியுறுத்தி பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு இந்தக் காணொளி காரணமாக இருந்துள்ளது.

அதாவது பொறுப்பு கூறல் விடயத்தை பொறுத்தவரை வெறுமனே உள்நாட்டு விசாரணை மீது நம்பிக்கை வைக்க முடியாது என்பதையும் சர்வதேச விசாரணையை இதற்கு அவசியம் என்பதையும் இந்த காணொளி உணர்த்தியிருக்கின்றது. எதிh்க்கட்சிகளின் தலைவா்களே இதனை வலியுறுத்தும் நிலையில், போரில் இடம்பெற்ற மீறல்களை விசாரிக்கவும் சா்வதேச பொறிமுறைதான் அவசியம் என்பது உணா்த்தப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தல் அடுத்த வருடம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலைமையில், அந்தத் தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் இந்த காணொளி அமைந்திருக்கின்றது. கடந்த வருடம் இடம்பெற்ற “அரகலய” போராட்டத்தின் போது ராஜபக்ஷாக்களின் செல்வாக்கு பெருமளவுக்கு வீழ்ச்சி அடைந்திருந்தது. தமது பகுதிகளுக்கு கூட செல்ல முடியாத நிலைமை அவரது கட்சிக்கு ஏற்பட்டிருந்தது.

இப்போதுதான் அவர்கள் தமது கட்சியை கொஞ்சம் கொஞ்சமாக கட்டமைத்து கொண்டு வருவதற்கு முனைந்து கொண்டிருக்கும் நிலைமையில் இந்த காணொளி வெளியாகி அவர்களுடைய நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.

சனல் 4 வெளியிட்டு இருக்கும் காணொளி என்ன தான் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மைகளை வெளிக்கொண்டு வருவதாக சொல்லி இருந்தாலும் கூட, இது ராஜபக்க்ஷக்களை இலக்கு வைத்த ஒரு காணொளி என்பது வெளிப்படை. இதனுடைய தாக்கத்திலிருந்து அவர்கள் வெளியே வருவது இப்போதைக்கு சாத்தியமானது அல்ல.

ராஜபக்ஷக்களில் ஒருவர் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்து வந்த நிலைமையில், அதற்கான சாத்தியத்தை இந்த காணொளி பெருமளவுக்கு இல்லாமல் செய்துள்ளது. மறுபுறத்தில் இது ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஓரளவுக்கு சாதகமானதாக உள்ளது. ரணிலைப் பலப்படுத்துவதற்காகத்தான் இந்தக் காணொளி இப்போது வெளியிடப்பட்டது என்ற ஒரு கருத்தும் பரவலாக உள்ளது.

சா்வதேச விசாரணை

சாத்தியமான ஒன்றா?

இந்த சம்பவம் குறித்து சா்வதேச விசாரணை ஒன்று சாத்தியமானதா என்ற கேள்விக்கு, “ஆம்” என்ற பதிலைத்தான் சா்வதேச ராஜதந்திரிகள் தெரிவிக்கின்றாh்கள். மனித உரிமை மீறல்கள் தொடா்பில் விசாரணைக்கான சா்வதேச ஆணைக்குழு ஐவெநசயெவழையெட உழஅஅளைளழைளெ ழக iஙெரசைல (ஊழுஐள) ஒன்றை அமைப்பதற்கான அதிகாரம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு உள்ளது.

இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடா்பில் சா்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற தீh்மானம் 2019 இல் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டது. அதில் ஈஸ்டா் தாக்குதல் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இலங்கை அரசாங்கம் இதுவரையில் அதனை நிராகரித்தே வருகின்றது.

ஆனால், ஈஸ்ட்டா் தாக்குதல் தொடா்பில் சா்வதேச விசாரணை ஒன்று அவசியம் என சா்வதேச அழுத்தங்கள் அண்மைக்காலத்தில் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் என்பன இந்தக் கோரிக்கையை பலமாக முன்வைக்கின்றன. கடந்த ஜூலையில் அமெரிக்க பிரதிநிதிகள் சபையிலும் இது தொடா்பான தீh்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.

இதனைவிட, இந்தத் தாக்குதலில் அமெரிக்கர்களும் உயிரிழந்திருப்பதனால் இவ்விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்றை நடத்துவதற்கான சாத்தியம் குறித்து தாம் ஆராய்வதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான தூதுவர் பெத் வான் ஸ்காக் தெரிவித்திருக்கின்றாh்.

ஈஸ்டா் தாக்குதல் தொடா்பில் பதில் இல்லாத பல கேள்விகள் உள்ளன. இதனைத் திட்டமிட்டது யாh் என்பது முதலாவது கேள்வி. புலனாய்புத் தகவல் கிடைத்திருந்தும் இதனைத் தடுத்து நிறுத்த இலங்கை அரசாங்கம் ஏன் தவறியது என்பது இரண்டாவது கேள்வி. இலங்கை அரசாங்கம் நடத்திய விசாரணைகளில் இவற்றுக்கான பதில் கிடைக்கவில்லை. ஆக, சா்வதேச விசாரணை ஒன்று மட்டுமே உண்மைகளை வெளிக்கொண்டுவரும்,

723 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *