மரபணு மாற்றப்படும் விலங்குகளா நாம் ?
த.இரவீந்திரன் (அகரம் சஞ்சிகை பிரதம ஆசிரியர்) யேர்மனி
இருபத்தோராம் நூற்றாண்டின் எல்லையில் வாழ்கிறோம். எண்ணுக்கணக்கற்ற நோய்களும், துன்பங்களும் சூழும் உலகமாக இது மாறியிருக்கிறது. இந்த மாற்றங்களை உருவாக்கியது யார் அல்லது எது என்ற கேள்விகளை நம்மினம் சிந்திப்பதில்லை. தொடர்ச்சியாக நாம் பலவீனப்பட்ட மனிதர்களாக மாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறோம். விஞ்ஞானம் என்பது பொய்ஞானமாகமாறி நம்மை அழித்துவருகிறது. நம்மவர்கள் விஞ்ஞானத்திற்குள் சிக்கி அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவையெல்லாவற்றினதும் அடிப்படை என்பது யாரும் சிந்திக்காத கோணத்தில் இருக்கிறது. மனிதரை ஆதிகாலப் பண்பிற்கு மாற்றுவதுதான் அது.
நவீன உலகில் நம்மைத் தற்போது அதிகம் பாதிப்பது நாம் உண்ணும் உணவில் ஏற்படுத்தப்படும் மரபணு மாற்றம். இது மனிதனின் உடல் மற்றும் சிந்தனைகளில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. மரபணு மாற்றப்பட்ட காய்கறிகள் உட்கொள்ளும்போது முதலில் ஒவ்வாமையால் அனைவரும் பாதிக்கப்படுவர். உதாரணமாக, இத்தனை நாட்கள் கத்தரிக்காய் சாப்பிட்டுக் கொண்டு இருந்த நீங்கள் இந்த மரபணு மாற்று கத்தரிக்காயை சாப்பிடும்போது உங்கள் உடல் ஏற்றுக்கொள்ளாது.
புற்றுநோய் வருவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் மரபணு மாற்றப்பட்ட காய்கறிகளால் மலட்டுத்தன்மை, அழற்சி அல்லது புற்றுநோய் வரவும் வாய்ப்பிருக்கிறது. மனிதனின் மரபணு கூட பாதிக்கப்படலாம். உங்கள் உடலில் நோய்கிருமி பரவ ஆரம்பிக்கும். என்னதான் நுண் தொற்று இருந்தாலும், நோய் எதிர்ப்பு சக்தி ஆதிக்கம் அதிகம் இருப்பதால் நோய்வாய்ப்பட வாய்ப்பிருக்கிறது.
இது எந்த மருந்து கொடுத்தாலும் அடங்காது. காரணம் ஒவ்வொரு முறையும் காலத்திற்கு ஏற்ப கிருமிகள் வளர்ச்சியடைகிறது. பாதிக்கப்படும் பல்லுயிர்ச்சூழல் மரபணு மாற்றப்பட்ட விதைகளால் காற்றின் மூலம் மகரந்தச் சேர்க்கை மூலமாக மரபணு மாற்றப்பட்ட பயிரிலிருந்து, மரபணு மாற்றப்படாத பயிர்களுக்கு காற்றின் மூலம் நச்சுக்கள் பரிமாற்றம் நடைபெறுகிறது.
கெட்ட மகரந்தச் சேர்க்கை பரிமாற்றத்தால் நல்ல விளைச்சலும் நச்சுத்தன்மை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதாவது தாவரங்களும் உணவு விளைச்சலும் நச்சுத்தன்மை அடைய வாய்ப்பிருக்கிறது. விவசாய நிலமும் பாதிக்கப்படும். அதுமட்டும் அல்லாமல் பல்லுயிர், அதாவது பால் தரும் பசு எவ்வாறு புல்லையும் இலையையும் நம்பி இருக்கிறதோ, அதுபோல மனிதன் மண்ணையும் அதில் விளையும் விளைச்சலையும் நம்பி இருக்கும் நிலையில் நச்சுத்தன்மை இருந்தால், எவ்வாறு பல்லுயிர் தாக்கப்படுவதோடு ஒரு உயிரினம் மற்றொரு உயிரினத்தை சார்ந்து இருக்கும் என்ற அறிவியல் சுழற்சி கோட்பாடும் இங்கு பாதிக்கப்படும்.
இவற்றால் மனிதர்களின் ´´இனம்´´ என்ற அடிப்படை சிதைக்கப்படும். எல்லோரையும் ஒரே கூரைக்குள் கொண்டுவந்து, ஆதிமனிதன் போல ஆக்குவதே இதன் அடிப்படை. இந்த அடிப்படையை மேற்கொண்டுவிட்டால், உலகில் ஒரே உணவு, ஒரே மருந்து, ஒரே விதமான கல்வி, என அனைவரும் மாறிவிடுவர். இந்த மாற்றம் உலகை ஆளுகைக்குள் வைத்திருக்கவிரும்புகின்ற ´´வல்லரசு´´ ஒன்றில் கைக்குள் மனித இனம் சிக்குவதை இலகுவாக்கும்.
இவற்றால் தமிழருக்கு என்ன பாதிப்பு என்கிறீர்களா ? முதலில் தமிழருக்குத்தான் இதில் வேகமான பாதிப்பு ஏற்படும். இன்னும் இரண்டு தலைமுறைக்கு பிறகு தந்தை மற்றும் தாய் என்ற அடிப்படைக் குடும்பக் கட்டுமானம் உடையும். ஏனெனில் தமிழரிடத்தில் இருக்கும் இந்த வாழ்வியற்கட்டுமானம் அபரிமிதமானது. உலகில் வேறெங்கிலுமில்லாத உணவுப்பழக்கமும், இலக்கிய வளமும், மொழிவளமும் கொண்டவர்கள் தமிழர்கள். இனம், விடுதளை, பண்பாடு என்ற சிந்தனைகளிலிருந்து தமிழர்கள் மெல்ல மெல்ல மாற்றப்படுவர்.
உணவே உங்களுக்கு வாழ்வையும் நோயையும் தரவல்லது. இனி வாழ்வைவிட நோயே உங்களுக்கு அதிகம் ஏற்படுத்தப்படும். நோய் வந்தவுடன் நீங்கள் நவீன மருத்துவத்தை நாடுவீர்கள். நவீன மருத்துவம் உங்கள் நோயை அதிகரிக்கும். அந்த நோய் பரம்பரையாகத் தொடரும்வண்ணம் உங்களுக்குத் தரப்படும் மருந்துகள் மூலம் உங்கள் பிள்ளைகளுக்குத் தொடரும். இது சுழற்சி முறையில் நடக்கும்வேளை, இன்னும் மூன்று தலைமுறைக்குள் தமிழர்கள் காலம் காலமாகப் போற்றிவந்த குடும்ப அடிப்படை உடையும். தந்தையும் தாயும் பெற்றுப்போட்ட இரு மனிதர்கள் என்ற அடிப்படையில் குழந்தைகள் சிந்திக்கத் தொடங்குவர். அப்படியே குடும்பத் தொடர்புகள் அற்றுப்போய் நமது வாழ்வியற் கட்டுமானம் சிதைந்து, உலக மனிதப்பரம்பலின் வாழ்விற்குள் சிக்குவோம். இதுதான் இந்த மரபணு மாற்றப்பட்ட உணவுகளின் அடிப்படை.
இவற்றிலிருந்து மீள வழியில்லையா என்றெல்லாம் அங்கலாய்க்கலாம். ஆனால் அது மிகத் தாமதமான காலமாக மாறியிருக்கிறது. பாரம்பரிய உணவிற்கு மாறுதலே இதற்குள்ள ஒரே வழி. ஆனால் அது சாத்தியப்படக்கூடிய ஒரே இடம் நமது தாயகம் தான். தாயக உணவுப்பொருட்களை நுகர்வது சற்றே இந்த அபாயத்திலிருந்து தப்ப உங்களை வழிசெய்யும். ஆனால் அதுவே நீடிக்கும் என்பதை உறுதிசெய்வது உங்கள் அடுத்த தலைமுறையின் கைகளில் மட்டுமே உள்ளது.
550 total views, 2 views today