பொன்னாங்காணியும் அலிகேற்றர் (alligator weed) என்னும் களையும்.

ஆ.சி.கந்தராஜா அவுஸ்திரேலியா
பொன்னாங்காணி என்ற பெயரில் தற்போது அலிகேற்றர் (alligator weed) என்னும் களையை உண்பது மீண்டும் அதிகரித்திருப்பது அவதானத்துக்கு வந்துள்ளது. 20 வருடங்களுக்கு முன்னர், பொன்னாங்காணி என நினைத்து அலிகேற்றர் என்னும் களையை, ஆஸ்திரேலியாவில் வாழும் இலங்கை மக்கள் உண்பது அவதானிக்கப் பட்டு, விவசாய இலாகாவினால் பாரிய சிரமத்தின் மத்தியில் அழிக்கப்பட்டது.
பொன்னாங்காணியைப் போன்ற தோற்றமுடைய அலிகேற்றர் என்பது நீரிலும் நிலத்திலும் வாழும் ஒரு களை. இது நீண்ட பலமான வேர்களைக் கொண்டுள்ளதால் விரைவில் படர்ந்து வளர்ந்து நீர் வழிகளையும் வடிகால் குழாய்களையும் அடைத்துக்கொள்ளும். இதில் சௌக்கியத்துக்குக் கேடான மூலகங்கள் (Heavy elements) இருப்பது பகுப்பாய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்து.
தற்போதைய பிரச்சனை என்னவென்றால்,இந்த அலிகேற்றர் களையை பொன்னாங்காணி என்ற பெயரில், இலங்கையில் வளர்ப்பதும் சந்தையில் விற்ப்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது.
பொன்னாங்காணியையும் அலிகேற்றர் களையையும் எப்படி இனங்காண்பது?
1) பொன்னாங்காணியின் ஒவ்வொரு கணுக்களிலும் (Node) பூ இருக்கும். ஆனால் அலிகேற்றர் களையில் தண்டு நுனியில் (Apical or terminal) மட்டும் பூ இருக்கும். கீழேயுள்ள கணுக்களில் பூ இருக்காது.
2) பொன்னாங்காணியின் தன்டை முறித்துப்பார்த்தால் தண்டின் நடுவே துவாரம் இருக்காது. தண்டு நிரம்பியிருக்கும். இதேவேளை அலிகேற்றர் களையில் தண்டின் நடுவே துவாரம் (ஓட்டை) இருக்கும். எனவே பொன்னாங்காணி வாங்கும்போது தண்டை முறித்துப்பார்த்து ஒவ்வொரு கணுவிலும் பூக்கள் இருக்கிறனவா என அவதானித்து வாங்கவும்.
1,027 total views, 6 views today