திரு.க.அருந்தவராஜா அவர்களின் ‘தமிழர்களின் வலியும் வரலாறும்‘ நூலின் வெளியீட்டு விழாவும்
மண் சஞ்சிகை ஆசிரியர் திரு.வைரமுத்து சிவராசா அவர்களுக்கான பாராட்டுவிழாவும்
யேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம் நடாத்திய எழுத்தாளர், கவிஞர் திரு.க.அருந்தவராஜா அவர்களின் புலம்பெயர்ந்த தமிழர்களின் வலியும் வரலாறும் என்ற நூலின் வெளியீட்டு விழாவும் திரு வைரமுத்து சிவராசா அவர்கள் ஐம்பது வருட கால எழுத்துப்பணி; பாராட்டும் விழாவும் 14.10.2023 சனிக்கிழமை மாலை டோர்முண்ட் தமிழர் அரங்கில் நடைபெற்றது. எழுத்தாளர் சங்கத் தலைவர் திரு சிறீஜீவகன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
முதலில் புலம் பெயர்ந்த தமிழர்களின் வலியும் வரலாறும் என்ற நூலின் வெளியீடு விழா நடைபெற்றது. நூலின் முதற்பகுதியான ஆசிய நாடுகள் பற்றி எழுத்தாளர் சங்கச் செயலாளர், எழுத்தாளர், திரு.சி சிவவினோபன், இரண்டாம் பகுதியான ஆபிரிக்க நாடுகள் பற்றி மொழிப்பற்றாளர் திரு. பா.காந்தரூபன், மூன்றாம் பகுதியான ஓசானியத்தீவுகள் பற்றி சங்கீத, நடன கலாஜோதி, செல்வி கார்த்திகா சிவபாலன், நான்காம் பகுதியான கரிபியன் தீவுகள் பற்றி பன்னாட்டுபுலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத் தலைவர், எழுத்தாளர்,; திரு.சபேசன் ஆகியோர் சிறப்புப் பார்வை செய்திருந்தார்கள்.
தொடர்ந்து நூலாசிரியர், கவிஞர் அருந்தவராஜா அவர்கள் நூலை வெளியிட முதல் பிரதியை சமூகபற்றாளர், கோபரா ஞானம் புடவை வியாபார நிலைய உரிமையாளர் திரு.ஞானம் அவர்கள் பெற்றுக்கொண்டார். சிறப்புப்பிரதியை அறிவிப்பாளர் திரு.ரமேஸ்வரன் அவர்கள் பெற்றுக் கொண்டார்;. பின்னர் சபையோர் நூல்களை பெற்றுக்கொண்டனர்.அடுத்து மண் சஞ்சிகை ஆசிரியர் திரு.வை.சிவராசா அவர்களும்,மூத்த அறிவிப்பாளர், திரு.முல்லைமோகன் அவர்களும் வாழ்த்துரைகள் வழங்கினார்கள். இதனைத் தொடர்ந்து நூலாசிரியர் தன் நூலாக்கம் பற்றிய தகவல்கள், சிறப்புரையாற்றியவர்களின் கருத்துகளிற்கு பதிலகள்; என ஏற்புரையை வழங்கி மகிழ்ந்தார். அப்பொழுது எழுத்தாளர் சங்கத்தினர.; பொன்னாடை அணிவித்தும், நினைவுபட்டயம் வழங்கியும் ஆசிரியரை கௌரவித்தனர். நிகழ்வை திருமதி சாந்தினி துரையரங்கன் தொகுத்து வழங்கினார்.
969 total views, 3 views today