Trading உருவான வரலாறு எப்படி?
- சிந்தனை சிவவினோபன்.யேர்மனி
வா நண்பா வசதியான பணக்கார வாழ்க்கை வாழுவோம். கடின உழைப்பு தேவையில்லை, வீட்டில் இருந்து கொண்டே வேலை செய்யலாம். இப்படிப்பட்ட வாக்குறுதிகளை வழங்குவோர் சொல்லுகின்ற வேலைகளில் ஒன்று தான், இந்த டிரேடிங் (Trading). இந்த டிரேடிங்கை (Trading) பற்றி இன்றைய தினம் நாங்கள் விரிவாக பார்க்க இருக்கின்றோம். இது எவ்வாறு உருவாகியது என்கின்ற அடிப்படைக் கதை தெரிந்தால், தான் இந்த டிரேடிங்கை (Trading) புரிந்து கொள்வது இலகுவாக இருக்கும். ஏனென்றால் டிரேடிங் மிக மிக கடினமான ஒரு விடயம்.
ஆரம்ப காலகட்டங்களில், மனிதனுடைய பகுத்தறிவு வளரும் பொழுது, மனிதன் ஒரு இடத்தில் இருந்து வாழ தொடங்கினான். அதன் பின் தனக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்யத் தொடங்கினான். அதன் பின் மற்றய இடங்களில் வாழுகின்ற மனிதர்கள் எதையெல்லாம் உற்பத்தி செய்கிறார்கள் என்பதை, ஆவலாக அறிந்து கொள்ள ஆசை கொண்டான். அந்த இடங்களுக்குச் சென்று அவர்களிடம் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை கொடுத்து, அவர்கள் உற்பத்தி செய்த பொருட்களை வாங்க, பண்டமாற்று என்கின்ற ஒரு விடயம் ஆரம்பமானது. அதன் வளர்ச்சி தான் கடல் தாண்டி பல நாடுகளை கண்டுபிடித்து அந்த நாடுகளில் இருக்கின்ற வளங்களை வர்த்தகம் மூலமாகவோ அல்லது கொள்ளை அடிப்பதன் மூலமாகவோ எடுத்து வருவதை பலர் தங்கள் வழக்கமாக்கிக் கொண்டார்கள்.
இவ்வாறு பல பணக்கார முதலாளிகள், கப்பல்களை கட்டி அதை மற்றய கண்டங்களுக்கு, நாடுகளுக்கு அனுப்பி வைத்தார்கள். அந்தக் கப்பல் சென்று திரும்பி வந்தால், அதில் பல செல்வங்கள் வரும். அந்த செல்வங்களை வைத்து, தங்கள் பணத்தை இன்னும் பெருக்கிக் கொள்ளலாம் என்று நினைத்தார்கள். இதில் அந்த காலகட்டத்தில் இருந்த மிகப்பெரிய ஆபத்து என்னவென்றால், சென்ற அனைத்து கப்பல்களும் திரும்பி வந்தது என்று இல்லை. இயற்கை அனர்த்தங்களால், அல்லது சென்ற இடத்தில் அங்கு வாழ்ந்த மக்கள்களால் அழிக்கப்பட்டதனால், அல்லது இடையிலேயே மற்றைய போட்டி கப்பல்களால் உடைக்கப்பட்டதனால், என்று பல கப்பல்கள் திரும்பி வரவில்லை. சில கப்பல்கள் திரும்பி வந்தன. இங்கு தான் இந்த ட்ரெயினிங் (Trading) என்பதன் அடிப்படை ஆரம்பிக்கின்றது.
அப்போது வாழ்ந்த அந்த பண முதலாளிகள் என்ன செய்தார்கள் என்றால். சிறிய முதலாளிகள் மற்றும் சாதாரண மக்களிடம் சொன்னார்கள், இப்போது செல்கின்ற கப்பல் திரும்பி வந்தால், அதில் இருக்கின்ற செல்வத்தை அனைவரும் பகிர்ந்து கொள்ளலாம். ஆகவே இந்தக் கப்பல் திரும்பி வரும் என்றால் நீங்கள் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை எங்களுக்கு கட்ட வேண்டும். நீங்கள் கட்டுகின்ற பணத்தொகையை, வைத்துக்கொண்டு கப்பல் திரும்பி வரும் பொழுது அதன் பல மடங்கான பணத்தொகை உங்களுக்கு அந்தக் கப்பலில் இருக்கும் சொத்துக்களை பிரிப்பதன் மூலமாக தரப்படும். உதாரணத்திற்கு நீங்கள் பத்து வெள்ளி காசுகளை கட்டினால் அந்தக் கப்பல் திரும்பி வரும் பொழுது, அந்தக் கப்பலின் சொத்தில் இருந்து கொண்டு உங்களுக்கு லட்சம் வெள்ளி காசுகளாக திருப்பித் தருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது. என்கின்ற ஒரு முறையை ஆரம்பித்தார்கள் இதுதான் இப்போது நவீன மயப்படுத்தப்பட்டு இருக்கின்ற ட்ரேடிங்கின் (Trading) அடிப்படை ஆக இருக்கின்றது. இப்போது அந்தக் கப்பல் திரும்பி வந்தால் பத்து வெள்ளி கொடுத்தவர்களுக்கு ஒரு லட்சம் வெள்ளி கிடைக்கும். அதுவே அந்த கப்பல் திருப்பி வரவில்லை என்றால் அந்த பத்து வள்ளி திருப்பிக் கொடுக்கப்பட மாட்டாது. அது அந்த பணக்கார முதலாளிகளுக்கு அவர்களுக்கு ஏற்படுத்திய அந்த நட்டத்தை ஓரளவு சமாளிக்கக்கூடிய தொகையை திருப்பித் தரக் கூடியதாக இருந்தது.
இப்போது ஒரு சிலர் சொன்னார்கள் இல்லை எனக்குத் தெரியும் இந்த காலகட்டத்தில் இந்த கப்பல் வெளிக்கிட்டால், இந்தக் கப்பல் திரும்பி வராது ஆகவே நான் காசு கட்ட மாட்டேன் என்று சொன்னார்கள். அப்போது அந்த பண முதலாளிகள் என்ன செய்தார்கள் என்றால் கப்பல் வரும் என்று சொல்பவர்கள் 10 வெள்ளிகட்டுங்கள். கப்பல் வராது என்று சொல்பவர்கள் 10 வெள்ளி கட்டுங்கள். சென்ற கப்பல் திரும்பி வந்தால், வராது என்று சொன்னவர்களுக்கு கட்டிய பணம் திருப்பி கொடுக்கப்பட மாட்டாது. வரும் என்று சொன்னவர்களுக்கு அவர்கள் கொடுத்த பணம் பல மடங்காக திருப்பி கிடைக்கும். இதுவே சென்ற கப்பல் திருப்பி வராது என்று சொன்னவர்கள் சொன்னதைப் போன்று, அந்தக் கப்பல் திருப்பி வரவில்லை, என்றால் அவர்கள் கொடுத்த பணம் பல மடங்காக திருப்பிக் கொடுக்கப்படும். என்கின்ற ஒரு முறை ஆரம்பிக்கப்பட்டு. அதுதான் இன்றுவரையும் இணையதளத்தில் கூட, வாங்குதல் விற்றல் என்கின்ற அடிப்படையில் இந்த டிரேடிங்காக (Trading) நடைபெற்றுக் கொண்டு வருகின்றது.
அடுத்த தொடரில் இது எவ்வாறு இன்றைய வர்த்தகத்தில் செயல்படுகின்றது என்கின்ற விரிவான விளக்கத்தை வழங்க காத்திருக்கின்றேன். வாசிக்கின்ற உங்களுக்கு அடுத்த தொடர் வேண்டுமென்று ஆசைப்பட்டால், நீங்கள் உங்கள் விருப்பத்தை தெரிவித்தால் மட்டுமே, அடுத்த தொடர் உங்களுக்காக காத்திருக்கின்றது.
770 total views, 3 views today