உலகில் முதலில் தோன்றியது மனிதனா ? தென்னை மரமா?
தேங்காய் மதம்!
பிரியா.இராமநாதன் இலங்கை.
நாடோடிக் கதைகள் மற்றும் புராணங்களின் அடிப்படையில் பார்த்தால்,பல்வேறு தேசத்தினரும் தேங்காயின் பூர்விகத்திற்கு உரிமை கோருவதாகவேஎண்ணத்தோன்றும். சுமார் இருபது மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாகவே அதாவது மனித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே பூமியில் தென்னை மரம் இருந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன . ஆனாலும் உலகின் எந்தப் பகுதியில் தென்னை முதலில் உருவானது என்பதை கண்டறிவது கடினம். ஒருசில படிம
ஆதாரங்களைக் கொண்டு பசுபிக் பெருங் கடலில் அமைந்திருக்கும் தீவுகளில் குறிப்பாக “ papua new guinea” தீவுகளில் தென்னை மரங்கள் முதலில் உருவாகியிருக்கலாம் என்றும்,இந்திய பெருங் கடலின் கரையோர பகுதிகளிலும் ஆதி தென்னை மரங்கள் இருந்திருக்கலாம் எனவும்கூறப்படுகின்றது. பிலிப்பைன்ஸ், பாலிநேசியா பகுதிகளும் தென்னைக்கானபூர்விக பிரதேசங்களாக கருதப்படுகின்றது.
வெப்ப மண்டல பிரதேசங்களிலெல்லாம் வளரும் தென்னையானது மணற்பாங்கான நிலத்தில் உப்பு நீரை தாங்கி வளரக்கூடியது. அதனால் கரையோரங்களில் அதிகமாக காணப்பட்ட தென்னைகளிலிருந்து நீருக்குள் விழுந்த தேங்காய்கள் கடல் அலைகளால் இழுத்து செல்லப்பட்டு மற்ற கரைகளுக்கும் தீவுகளுக்கும் பரவி, அங்கேயும் தென்னைகள் முளைத்திருக்கலாம் என்கின்றன ஆய்வுகள். 2011 ஆம் ஆண்டு வெளியான தென்னை தொடர்பான தாவரவியல் ஆராச்சியின்படி உலகின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த தேங்காய்களின் னுNயு மாதிரிகளை சோதனை செய்து ரூஙரழவ் ஆதியிலே பசுபிக் பெருங் கடல் தென்னை ( பிலிப்பைன்ஸ் , மலேசியா,இந்தோனேசியா பகுதிகளை உள்ளடக்கியது ), இந்திய பெருங் கடல் தென்னை (தென் இந்தியா, இலங்கை, மாலைதீவு, லட்சத்தீவு பகுதிகளை உள்ளடக்கியது)என இரண்டு விதமான தென்னை ரகங்கள் இருந்திருப்பதாகவும் இதில் எது முதலில் உருவாகியது என்பதை அறுதியிட்டு கூற முடியவில்லை என்றும் கூறினர்.
இந்தியாவிற்கு வந்த போர்த்துகீசியர்கள் இந்திய தேங்காய்களை ஆப்ரிக்கா,தென் அமேரிக்கா போன்ற கண்டங்களுக்கு எடுத்துசென்றதன் மூலம் அந்தந்த பகுதிகளுக்கு பரவிதாகவும், அதேபோல ஸ்பானியர்கள் மூலமாக பசுபிக்வகை தேங்காய்கள் தென் அமேரிக்கா மற்றும் மத்திய அமேரிக்கா பகுதிகளுக்கு கொண்டு சேர்க்கப் பட்டதாகவும் கூறப்படுகின்றது.
குரங்கு மூஞ்சி coco nut
“ Cocos nucifera “ எனும் தாவரவியல் பெயரினைக்கொண்ட தென்னையினை முதன் முதலாக பார்த்த போர்துகீசியர்களுக்கு அதில் இருந்த கண் போன்ற மூன்று ஓட்டைகள் பார்ப்பதற்கு “கோகோ மூஞ்சியை” போன்றே இருந்ததாம். அட “கோகோ “ என்றால் போர்த்துகீசிய மொழியில் அர்த்தம் என்ன தெரியுமா? குரங்கு மூஞ்சி ! குரங்கின் முகம் போல தெரிந்த தேங்காயிற்கு அவர்கள் வைத்த பெயர்தான் “ coco nut “.அதுமட்டுமன்றி போர்த்துகீசிய நாடோடிக் கதைகளில் வரும் கோகோ என்கிற பேயின் முகம்போலவும் தேங்காய் இருப்பதாக அவர்கள் நினைத்தார்கள் . அன்றைய அரேபிய வணிகர்கள். தேங்காயை “ Indian nut” என்று அழைத்தார்களாம். 16 ஆம் நூற்றாண்டிலிருந்தே ஐரோப்பியர்கள் தேங்காயினை தங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள ஆரம்பித்துள்ளனர். தேங்காயைக்கொண்டு அலங்கார பொருட்களையும் தயாரித்துள்ளனர். தேங்காயின் வடிவத்தினை பார்த்து அதற்கு மந்திர சக்தி உண்டு என்கிற நம்பிக்கையும் ஐரோப்பியர்களிடம் வலுவாக இருந்தனவாம் 19 ஆம் நூற்றாண்டுவரை.
சரி தேங்காய் எனும் தமிழ் வார்த்தையின் அர்த்தம்தான் என்ன ? சங்ககாலத்தில் இதனை தெங்கு என்றும் தெங்கம் என்றுமே அழைத்துள்ளனர் தெங்கம் மரத்திலிருந்து கிடைக்கும் காய் (தெங்கம் ூ காய் ) தெங்கங்காய் எனும் வார்த்தையாக உருவாகி பின்னாளில் அது தேங்காய் என மறுவியதாக கூறப்படுகின்றது. இங்கே இன்னொரு முக்கியமான விடயமொன்றினையும் குறிப்பிட்டாகவேண்டும். அதாவது கிபி ஏழாம் நூற்றாண்டினை சேர்ந்த பக்தி இலக்கியங்களில்கூட கோவில்களில் தேங்காய் உடைத்தல் பற்றிய எந்த குறிப்பும் இல்லை என்பதுடன், கிபி பத்தாம்.நூற்றாண்டுவரையில் இறைவனுக்கு படைக்கப்படும் பொருள்களின் பட்டியலில் தேங்காய் இடம்பெற்றிருக்க வில்லையாம். ஆக, கோவில்களில் தேங்காய் உடைக்கும் வழக்கம் என்பது பிற்காலத்தில்தான் வந்திருக்கவேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள். வரலாற்றின் இடைக்காலத்தில்தான் தேங்காயை இறைவனுக்கு படைக்க, இளநீர் அபிஷேகம் செய்ய ஆகம அனுமதி பெறப்பட்டது என பாரதிதாசன் பலக்லைக்கழக அறிவியல்துறை முனைவர் கு .வி கிருஷ்ணமூர்த்தி என்பவர் தனது ஆய்வுநூலில் குறிப்பிட்டுள்ளார் .
ஒரு தென்னை மரம் சராசரியாக 80 ஆண்டுகள் முதல் 200 ஆண்டுகள் வரை வாழக்கூடியவை என்பதுடன் அதில் பல்வேறு மருத்துவ குணங்களும் நிறைந்து காணப்படுகின்றன. புரத சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு முதலிய தாது பொருட்கள் , வைட்டமின் சி,நார்ச்சத்து என்று உடல் இயக்கத்திற்கு தேவைப்படும் அனைத்து சத்துக்களும் தேங்காயில் நிரம்பவே இருக்கின்றன. தேங்காய் எண்ணெய் பல நூற்றாண்டு காலமாக மனிதனால் உணவாகவும் , மருந்தாகவும் அழகு சாதன பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றது. உலகில் பல பகுதிகளிலும் தலைக்கு தேய்க்க மற்ற எண்ணெய்களைவிட தேங்காய் எண்ணெய்தான் அதிகமாக பயன்படுத்தப் படுகின்றதாம் வெப்ப மண்டல பகுதியில் வாழும் மக்கள் மற்ற பகுதி மக்களைவிட அதிக ஆரோக்கியம் நிறைந்தவர்களாக இருப்பதற்கு முக்கிய காரணம் அவர்கள் சமையலில் தேங்காய் எண்ணெய் இருப்பதுதான் என
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் தேங்காய் எண்ணெய் கொழுப்பு நிறைந்தது, இதயத்திற்கு ஆபத்தானது என சொல்லப்படுவதெல்லாம் ?
நிச்சயமாக இது மிகப்பெரிய காப்பரேட்டுக்களின் அரசியல்தான். ஆசிய நாடுகளில் தேங்காய் எண்ணையின் சந்தையை ஒழித்துக்கட்டிவிட்டு தங்களது மேற்கத்தைய சமையல் எண்ணெய்களை அதிக அளவில் இறக்குமதி செய்வதற்காக மற்றைய தேசங்களினால் கட்டியெழுப்பப்படும் பொய் பிரசாரங்கள் அவை.தேங்காயில் உள்ள “கயவவல யஉனை” உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை கரைத்துவிடுவதுடன் உடல் எடையினை குறைக்கிறது
என்கின்றன ஆய்வுகள்.உலக அளவில் தேங்காய் உற்பத்தியில் முதல் இடத்தில் இருக்கும் நாடுகள் இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் . மூன்றாவது இடத்தினை இந்தியா பிடித்துள்ளது.
இங்கே ஓர் விசித்திரமான தகவல் ஒன்றினையும் பகிரவேண்டும்.அதாவது வியட்நாமை சேர்ந்த “ Nguyen thanh nam “ எனும் அறிஞரால் 1963 ஆம் ஆண்டு “dao dua”(தேங்காய் மதம் ) எனும் புதிய ஓர் மதம் தோற்றுவிக்கப்பட்டதாம்.. தன்னை அவர் தேங்காய் குரு என அழைத்துக்கொண்டதுடன், தேங்காய்க்கான ராஜ்யத்தினை உருவாக்குவதும், தென்னையையும் தேங்காயையும் வழிபடுவதுதான் இம்மதத்தின் முக்கிய குறிக்கோள் எனவும் பிரசாரம் செய்துவந்துள்ளார். தேங்காய் மதத்தில் இணைந்துகொண்டவர்கள் தேங்காய் சார்ந்த உணவுகள் மட்டுமே உண்ண அனுமதிக்கப்பட்டதுடன், மதத்தில் இணையும் ஆண்களுக்கு ஒன்பது பெண்களை திருமணம் செய்துகொள்ளும் சிறப்புசலுகையும் வழங்கப்பட்டதாம். தெற்கு வியட்நாமில் நீரில் மிதக்கும் பிரமாண்டமான தேங்காய் கோவிலொன்றும் இவரால் கட்டப்பட்டது. பின்னர் 1975 ஆம் ஆண்டு வியட்நாம் அரசினால் இந்த மதம் தடை செய்யப்பட்டுவிட்டது.
826 total views, 2 views today