விஜய்க்கு வில்லனான மோகன்

பிகில் படத்துக்குப் பிறகு விஜய், ஏஜிஎஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க வுள்ளார். இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் பூஜை நடந்த நிலையில் படத்தில் நடிக்கும் பிரபலங்கள் கலந்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்நிலையில் இந்த படத்தில் பழம்பெரும் நடிகர் மைக் மோகன் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். இதற்காக அவர் வாங்காத சம்பளமாக 2 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அவர் நாயகனாக நடித்துள்ள ஹரா திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது
அஜித்தின் விடாமுயற்சியில் ரெஜினா
நடிகர் அஜித்குமார் துணிவு படத்தின் வெற்றிக்குப் பிறகு கிட்டத்தட்ட 9 மாதங்கள் கழித்து தனது அடுத்த படமான ‘விடாமுயற்சி’ படத்தில் நடிக்க தொடங்கியுள்ளார். இதனை மகிழ்திருமேனி இயக்குகிறார். லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இதில் கதாநாயகியாக த்ரிஷா நடிக்கின்றார். மற்றொரு கதாநாயகியாக நடிக்க பொலிவுட் நடிகை ஹமா குரேஷி ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது திடீர் மாற்றமாக ஹமா குரேஷிக்கு பதிலாக கேடி பில்லா, நெஞ்சம் மறப்பதில்லை, சரவணன் இருக்க பயமேன் ஆகிய படங்களில் நடித்த ரெஜினா கசண்டரா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகனை தலைவன் என்று கொண்டாடாதே.. அசிங்கம் அவமானம்
- நடிகவேள் எம்.ஆர்.ராதா..!
இவரை போல ஒரு துணிச்சல்காரரை இந்திய வரலாறு இதுவரை பார்த்ததில்லை.. இனியும் பார்க்க போவதில்லை..!
கம்பர் விழாவில்; பேசிய ராதா, “பெரியவங்களே, சின்னவங்களே, பொம்பளைங்களே… நீங்கள் எல்லாம் இப்ப எதுக்கு வந்திருக்கீங்கன்னு தெரியும். இந்த கம்ப நாடாரின் விழாவிலே…” என்று ஆரம்பித்தார்.
அப்போது, ஒருவர் குறுக்கிட்டு, ‘அய்யா… கம்பர் நாடாரு இல்ல..’ என்றார்.
‘நாடார் இல்லயா… நம்மாளு போலருக்கு, இந்த கம்ப முதலியாராகப்பட்டவர்…’
‘அய்யா… அவரு முதலியாரும் இல்ல…’ என்றார்.
‘முதலியாரும் இல்லயா சரி… என்னன்னு புரிஞ்சு போச்சு; இந்த கம்பர் அய்யர் ஆனவர்…’
‘அய்யா… அவரு அய்யரும் இல்ல…’
‘என்னது நாடார் இல்ல, முதலியார் இல்ல, அய்யரும் இல்லயா… அப்போ, இப்ப தான் ஜாதிகளை சொல்லிக்கிட்டிருக்கோமா… அப்ப ஜாதி கிடையாதா… சரி தான், இந்த ஜாதியில்லாத கம்பன் விழாவிலே…” என, ராதாவின் அந்த பேச்சு தொடர்ந்தது..!
“நாட்டிலே அதிகமா உழைக்கிறவனுக்கு கொஞ்சமா கூலி கொடுக்கிறான்… சினிமாவில கொஞ்சமா உழைக்கிறவனுக்கு அள்ளி அள்ளி கொடுக்கிறான். “பார்த்தியா, ரசிச்சியா அதோட கூத்தாடிய விட்டு போய்ட்டே இரு.. அவன் அடுத்த கூத்துக்கு ரெடியாகிட்டே இருப்பான்.. அவன் உலகத்துக்குள்ள நுழைஞ்சி பாக்காதே.. அது ரொம்ப அசிங்கம்.. அவனை அரசியல்ல கூப்பிட்டு அழிஞ்சி போகாதே.. நீ அவனுக்கு காசு கொடுக்குற, அவன் நடிக்கிறான் அவ்வளவுதான். உன் வேலைக்காரன் அவன்.. அந்த வேலைக்காரனை தலைவன்னு கொண்டாடாதே.. அசிங்கம் அவமானம்” என்றார்.
1,182 total views, 6 views today