உலகில் புலம் பெயர்ந்த மக்களை வைத்து ஒரு நாட்டை உருவாக்கினால்! உலகின் ஐந்தாவது மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடாக அது இருக்கும்!! சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம்
– பிரியா இராமநாதன் இலங்கை.
மனித சமூக வரலாற்றில் மிக நீண்ட காலமாக இருந்து வரும் ஒரு நிகழ்வு என்றால் அது புலம்பெயர்வுதான் !
ஆம் , உணவிற்காக இடம்பெயர்ந்து வாழவேண்டிய கட்டாயத்தில் இருந்த கற்கால மனிதன், என்று நதி நீரைப் பயன்படுத்தி தனக்கான உணவினை தானே பயிரிட்டு உணவைத்தேடி அலையாமல் உண்ண ஆரம்பித்தானோ அன்றிலிருந்து நாடோடியாக இருந்த அவனது வாழ்க்கை ஒரே இடத்தில் குடும்பமாக, ஓர் சமூகமாக மாறியதெனலாம் . ஆனாலும் , நாளுக்குநாள் அதிகரித்த மனிதனின் தேவைகளும் தேடல்களும் அவனை தொடர்ந்தும் ஒரே இடத்தில் தேங்கி நிற்கவிடவில்லை என்றே கூறவேண்டும். ‘திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு’ எனும் ஒளவையின் வாக்கிற்கேற்ப மனித மனம் கடலை தாண்டி சிந்திக்கத்தொடங்கியபோதே மனித வரலாற்றின் மிகப்பெரிய புலம்பெயர்வுகள் இடம்பெறத் தொங்கின என்றாலும் மிகியில்லை.
முதன் முதலாக யூதர்கள் ஜெருசலேத்திலிருந்து விரட்டப்பட்ட நிகழ்வே உலகின் முதல் புலம் பெயர்தல் நிகழ்வு என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். பல்வேறு நாடுகளிலும் அகதிகளாக வாழ்ந்த யூதர்களின் வாழ்வைக் குறிப்பதற்காகத்தான் புலம்பெயர்வு எனும் கருத்து நிலை தோன்றியது. இன்றைய நிலவரப்படி பூர்வகுடிகளை மட்டுமே கொண்ட நாடு என எந்த நாடுமே தனியாக இருக்க வாய்ப்பில்லை எனும் அளவிற்கு நாடுகள் தோறும் புலம்பெயர்வுகள் இடம்பெற்றவண்ணமே உள்ளன. இப்படி இயற்கை பேரிடர்கள், பஞ்சம், வேலையில்லாத் திண்டாட்டம், உள்நாட்டு போர், இனவெறி போராட்டங்கள், சமுதாய வேறுபாடுகள், கல்வி, சிறந்த வாழ்க்கைத்தரம் என பற்பல காரணங்களுக்காக ஒரு நாட்டைவிட்டு இன்னொரு நாட்டிற்குள் சென்று வாழ தொடங்கிய மக்களுக்கான நாளாக அவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கத்தில் டிசம்பர் 18-ம் தேதியை “புலம் பெயர்ந்தவர்களுக்கான தினம்” என ஐ.நா.சபை கடந்த 2000 ஆம் ஆண்டு டிசம்பர் 4 -இல் அறிவிக்கப்பட்டு தொடர்ந்தும் கடைபிடிக்கப்படுகின்றது.
அந்த வகையில் புலம்பெயர்ந்து புதிய நாடுகளில் தங்கள் வேர்களைப் பதிப்பவர்கள், புதிய நாட்டின் காலநிலை பண்பாடு, சட்டதிட்டங்களுடன் மிகப்பெரிய போராட்டங்களை நடத்த வேண்டி இருக்கிறது. போரினால் புலம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த நாட்டைப் பிரிந்து வந்த மனஉளைச்சலோடு புதிய சூழலுக்கு தங்களைப் பழக்க வேண்டிய அழுத்தமும் இருக்கிறது. இந்நிலையில் அவர்கள் பண்பாட்டு உளவியல் சார்பான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. புகலிடம் கோருவோர் எதிர்கொள்ளக் கூடிய மற்றுமோர் உளவியல் பிரச்சினைகளில் ஒன்றுதன அந்நியமாதல் எனும் நிலைப்பாடாகும்.
இலங்கையிலும்கூட யுத்தகாலத்தினைவிட மிக அதிகமானோர் கடந்த வருடம் (2022) வெளிநாடுகளில் பாதுகாப்பான வேலைகளுடன் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இது இலங்கை வரலாற்றில் மிக உயர்ந்த மனித வள வெளியேற்றமாகும். மேலும் கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதற்காகக் வரிசையில் நின்று மரணித்த சம்பவங்கள், குழந்தை பிரசவிப்புகள் என்பன சர்வதேச கவனத்தினை ஈர்த்த நிகழ்வுகளாகும். கடந்த ஜுன் மாதத்தில் மாத்திரம் முப்பதாயிரம் கடவுச் சீட்டு விண்ணப்பங்கள் நேரலைமூலம் கிடைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், பாதுகாப்பற்ற, முறைசாராத புலம் பெயர்வினால் புலம்பெயர்வோர் அனுபவிக்கின்ற சிரமங்களும் ஊடகங்களின் பேசுபொருளா கியுள்ளன. Pநற சுநளநயசஉh ஊநவெநச என்கிற சமூக பிரச்சினைகளை ஆராயும் அமேரிக்க ஆராய்ச்சி நிறுவனம் ஓன்று , புலம்பெயர்ந்த மக்கள் தொடர்பாக வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையின்பிரகாரம், சுமார் 24 கோடிக்கு மேல் புலம்பெயர்ந்த மக்கள் வெவ்வேறு நாடுகளில் வாழ்ந்து வருவதாகவும், இது உலக மக்கள் தொகையில் 3 சதவிகிதத்துக்கும் அதிகமான எண்ணிக்கை என்கிற ரீதியில், உலகத்தில் உள்ள அனைத்து புலம் பெயர்ந்த மக்களையும் வைத்து ஒரு நாட்டை உருவாக்கினால், அந்த நாடு உலகின் ஐந்தாவது மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
837 total views, 6 views today