காலையிலா மாலையிலா நாம் உயரம் அதிகமாக இருப்போம்?
Dr.நிரோஷன் தில்லைநாதன் – யேர்மனி
எனது பெயர் நிரோஷன்! காலையிலும் எனது பெயர் நிரோஷன் தான், சாயங்காலத்திலும் எனது பெயர் நிரோஷன் தான். ஆஹா என்னடா வழக்கம் போல் குழப்ப ஆரம்பித்து விட்டேனா? பொதுவாக சில விஷயங்கள் மாறாது. காலையில் எப்படி இருக்குமோ, அதே போல் தான் சாயங்காலத்திலும் இருக்கும். சரி சரி இதை விடுங்கள், உங்களிடம் நான் ஒரே ஒரு கேள்வியைக் கேட்கிறேன், அதற்குப் பதில் சொல்லுங்கள் பார்ப்போம். உங்கள் உடலின் உயரம் என்ன? இந்தக் கேள்விக்கு நீங்கள் ஒரே ஒரு பதிலைச் சொல்லிவிட்டு உங்கள் வேலையைப் பார்ப்பீர்கள். ஏனென்றால் இந்தக் கேள்வியில் அப்படி ஒரு விசேஷமும் கிடையாது, சரி தானே? நண்பர்களே, இதே கேள்வியை நீங்கள் என்னிடம் கேட்டால், அதற்கு நான் இரண்டு பதில்களைக் கூறுவேன். காலையில் நான் 175 சென்டிமீட்டர், சாயங்காலத்தில் 174 சென்டிமீட்டர் இருப்பேன் என்று கூறிவிட்டு உங்களைக் குழப்பிவிடுவேன். இது என்னடா முட்டாள் தனமான பதில் என்று நினைத்தால், தொடர்ந்து படியுங்கள், ஏனென்றால் இதற்குப் பின்னால் ஒரு அறிவியல் உண்மையே இருக்கிறது.
உங்களால் நம்ப முடியாத இந்த விஷயத்தை வேண்டும் என்றால் நீங்களே சோதித்துப் பாருங்கள். காலையிலும், சாயங்காலத்திலும் உங்கள் உயரத்தை ஒரு முறை அளந்து பாருங்கள். வாயைப் பிளந்துகொண்டு நிற்பீர்கள். நாம் சாயங்காலத்தில் விடக் காலையில் சில சென்டிமீட்டர்கள் உயரமாகத் தான் இருப்போம். அதற்குக் காரணம் என்னவென்றால், பொதுவாக நமது முள்ளந்தண்டு எலும்புகளால் மட்டும் அமைக்கப் படவில்லை. அதில் iவெநசஎநசவநடிசயட னளைஉள என்று அழைக்கப்படும் முள்ளெலும்பிடையான வட்டுகள் காணப்படுகின்றன. இந்த வட்டுகள் எலாஸ்டிக் (நடயளவiஉ) பஞ்சுகள் போன்று வளைந்து நெளிந்து நமது உடல் அசைவுக்கு மிக முக்கிய காரணமாக இருக்கின்றன. நாம் இரவில் தூங்கும் போது பஞ்சு போன்ற இந்த வட்டுகள், நமது உடலில் உள்ள நீர்மத்தை (டஙைரனை) உறிஞ்சி எடுத்து விடுகின்றன. பின்னர் காலையில் நாம் தூக்கம் கலைந்து எழுந்ததும், உதாரணத்திற்கு என்னை எடுத்துக் கொண்டால், நான் காலை எழுந்து நிற்கும் போது எனது உடலின் உயரம் 175 சென்டிமீட்டராக இருக்கும்.
காலையில் 175 சென்டிமீட்டர் இருக்கும் நான் எப்படி சாயங்காலத்தில் 174 சென்டிமீட்டருக்குக் குறைந்து விடுகின்றேன். இது புரிவதற்கு முதலில் நாம் காலையில் எழுந்த பின், நடைபெறும் இரண்டு விஷயங்களை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். முதலாவதாக நாம் நடந்து திரிந்து, விளையாடி, வேலை செய்யத் தொடங்கி விடுகின்றோம். இரண்டாவதாக நாம் நமது இரு கால்களிலும் நிற்கத் தொடங்கியதும், நமது முள்ளந்தண்டில் புவி ஈர்ப்பு விசை செலுத்தப் படுகிறது. இந்த இரு விஷயங்களாலும் அந்த வட்டுகளில் உறிஞ்சி எடுக்கப்பட்ட நீர்மம் நேரம் போகப் போக கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றப் படுகின்றது. அதன் விளைவாக நமது முள்ளந்தண்டின் உயரம் குறைந்து விடுகின்றது. அத்துடன், நமது உடலின் உயரமும் குறைந்து விடுகின்றது. எனவே காலையில் 175 சென்டிமீட்டர் இருக்கும் நான் நேரம் போகப் போக சாயங்காலத்தில் 174 சென்டிமீட்டருக்குக் குறைந்து விடுகின்றேன். இது தான் இந்த மர்மமான விஷயத்துக்குப் பின்னால் இருக்கும் அறிவியல் உண்மை ஆகும்.
497 total views, 2 views today