அம்ஸ்ரடாமில் ஒரு குயில்
க.ஆதவன் – டென்மார்க்
அப்படித்தான் அது நடந்தது.
ஆயிரங்கால் மண்டபம் போல. அல்லது, ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி
அலிபாபாவும் நாற்பது திருடர்களும் போல. அல்லது அலாவுதீனும் அற்புதவிளக்கும்.
நெஞ்சமெனும் பெருங்கூட்டிற்குள், பொத்திவைத்த கிளியென பேச்சுச் சொல்லிக் கொடுத்த காலமொன்றிருந்தது.
காக்கை துரத்திய குயிலென, பாடித்திரிந்த பறவையென, பறந்து திரிந்தார் ஆரணி.
ஆரணியை அவன் கண்டு கொண்ட கதைதான் இது.
ஆரணி! கொழும்பில் இருந்து வந்தவள். தாய் தேப்பன் இடம் பெயரும் பொழுது, குஞ்சுகளும் இடம் பெயரும்.
அவனுடன் படித்த விக்னேஸ் சொன்னான். தான் 12 பள்ளிக்கூடத்தில் படித்ததாக. அவனுக்கும் அப்போ புரிந்திருக்கவில்லை. விக்னேஸ்சின் தகப்பன் ரயில்வேயில் ஒரு கிளார்க்காக இருந்திருக்கலாம். ஆரணியின் அப்பாவும், ஒரு அரசாங்க உத்தியோகத்தராய் இருந்திருக்கலாம்.
அவனுக்கு அது ஒன்றும் பொருட்டல்ல.
ஆரணி வெள்ளையாய் இருந்தாள், ஆரணியின் கண்கள் பளிச்சென்று இருந்தன. அவனுடைய தந்தை சேகரித்து வைத்திருந்த, சாண்டில்யன் புனைந்த ‘கடல் புறா ‘நாவலை, பல தடவைகள் வாசித்தேன். ஆரணியின் வர்ணங்கள், வடிவுகள், நெளிவு, சுழிவு, ஏற்ற இறக்கம், இவை எல்லாவற்றையும் கொண்டுபோய் கடல் புறாவில் பொருத்தினான்.
பொருத்தம் மிகப்பொருத்தம்.
அவனுள்ளே காலையும் மாலையும், கணப்பொழுதும் ஆரணி வீற்றிருந்தாள். பள்ளிக்கூடத்தில் ஆரணி பெரிய லெவல் என்றும், பெடியங்களுடன் திமிராய் நடக்கின்றாள் என்று பேச்சு… புயலாய் வீசியது.
அவனுக்கு அவளுடன் பேசவேண்டும் என்ற உந்தல் எழுந்தது. ஆச்சரியம் என்னவென்றால்… ! அன்றைக்கு என, அவள் பேனா கொண்டு வரவில்லை.
அன்றைக்கு என அப்பா அவனுக்கு இரு புதுப்பேனாக்கள் கொடுத்திருந்தார்.
ஆரணி முழுசிக்கொண்டு இருந்தாள். ஆசிரியர் வந்துவிட்டார். ‘எல்லோரும் இதை எழுதி உடனே கொண்டு வாருங்கோ’ இது ஆசிரியர்.
அவன் நைசாத் தன் பேனாவொன்றை மேசைக்கு கிழாகத் தள்ளிவிட்டான்.
வகுப்பு முடிந்து போகும் போது அவள் வுhயமௌ என்றாள்.
இது போதும் அவனுக்கு. ஆரணியை ஆதாரிக்கத் தொடங்கினன்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு.
அம்ஸ்சரடாம் விமான நிலையத்தில்..
‘என்னப்பா சும்மா அலையாமல் இந்தப் பிள்ளைக்கு பசிக்குது, அது அழுகுது, பிளேன் வர அஞ்சாறு மணித்தியாலம் ஆகுமாம். போய் ஏதாவது வாங்கிக்கொண்டு வாங்கோ’
அவனது மனைவி நச்சரித்தாள்.
சற்று நீண்ட கியூ. வரிசையில் நின்றுகொண்டு இருந்தான் அவன்.
‘ நீங்க தமிழா..?
எனக்கு ஒரு உதவி செய்வீங்களா? என்ரை பிள்ளைக்கு சரியான பசி அழுகிறாள். நான் கொஞ்சம் முன்னாலே போகவா?’
குரல் கேட்டுத் திரும்பினான்.
எங்கோ பார்த்த முகம். எங்கோ பார்த்த கண்கள். அவனது எல்லாவற்றையும் ஆக்கிரமித்த அதே ஆரணி.
நீங்கள் எந்த ஸ்கூலில் படிச்சனீங்கள்? அவன் கேட்டான்.
அவள் ஒன்றும் சொல்லவில்லை.
‘ நீங்க அந்த ஊர் தானே? ‘
அவள் ஒன்றும் சொல்லவில்லை.
‘ நீங்கள் கொழும்பில் இருந்து வந்து அந்தப் பள்ளிக்கூடத்தில், படிச்சு….’
அவள் ஒன்றும் சொல்லவில்லை.
‘மேசைக்கு கீழாலை நான் பேனாவைக் தள்ளிவிட்டு,…’
அவள் ஒன்றும் சொல்லவில்லை.
கோட் சூட் ரை கட்டிக்கொண்டு ஒருத்தர் வந்தார்.
‘ பிள்ளை அழுகுது பால் வாங்கிக்கொண்டு வாரும் என்று சொன்னால்… லுழர யசந வயடமiபெ வழ ளழஅந னசைவல pநழிடந’ என்றார். அவரை ஒரு தடவை முறைத்து விட்டு, ஆரணியை நோக்கி ஒரு பெரு மூச்சவிட்டு….
அவன் தன் மனையாளை நோக்கி நடக்கத் தொடங்கினான் .
516 total views, 6 views today