யேர்மனியில் பூப்பந்தாட்டத்தில் சாதனை படைக்கும் தமிழ்ச் சிறுவர்கள்!

யேர்மனியில் இந்த ஆண்டுக்கான 11 வயதின் கீழ் பூப்பந்தாட்டத்தில் சிறந்த வீரர்கள தெரிவுசெய்யப்பட்ட தமிழ் வீரர்கள். யேர்மனியில் ஆண்டு முழுவதும் மாகாணங்கள்,மாவட்டங்களுக்கு இடையிலான போட்டிகள் நடைபெற்றன.பல நூற்றுக்கணக்கானவர்கள் போட்டியில் பங்கு பெற்றபோதும், இந்த ஆண்டின் இறுதிப் போட்டிக்குபுள்ளிகளின் அடிப்படையில் ஆண், பெண் உட்பட 36 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர்.

பங்கு பற்றிய ஆட்டத்தில் 5 சிறந்த புள்ளிகள் எடுத்த போட்டியாளர்கள் யேர்மனி ரீதியில் தெரிவு செய்யப்பட்டனர்.
பெண்கள் பிரிவில் இரண்டு தமிழ் சிறுமிகள் தெரிவு செய்யப்பட்டனர்.

தமிழி மார்க்கண்டு ( வுசழளளiபெநnடியனநn றுüசவவநஅடிநசப) யேர்மனி; தழுவிய போட்டிகளில் இரண்டு போட்டிகளில் முதலிடம் பெற்றார். யேர்மனி; ரீதியிலான தரவரிசையில் இவர் மூன்றாம் இடத்தில் உள்ளார். அனிகா ஆனந் இவர் பல போட்டிகளில் முன்னிலை வகித்து யேர்மனி; ரீதியிலான தரவரிசையில் 17 வது இடத்தை பெற்றுள்ளார்.

ஹர்சத்குமார் கர்த்திக் (ர்யசளாயனமரஅயச மயசவாiஉம குசயமெகரசவ) இந்த ஆண்டின் சிறந்த விளையாட்டுத்திறனை வெளிப்படுத்தி யேர்மனி; தழுவிய போட்டிகளில் ஐந்து போட்டிகளில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார். யேர்மனி ரீதியிலான தரவரிசை பட்டியலில் இவர் இரண்டாம் இடத்தை பெற்று தகுதி நிலையை அடைந்ததுள்ளார். இதில் ஹர்சத்குமார் முதலிடத்தை பெற்று இந்த ஆண்டுக்கான ஒற்றையர் பிரிவில் முதலிடத்தை பெற்றார்.

இரட்டையர் ஆட்டத்தில் அரை இறுதிவரை முன்னேறி ஹர்சவத் குமார்; மூன்றாம் இடத்தையும், தமிழி இறுதிப் போட்டியில் இரண்டாம் இடத்தை வெற்றிகொண்டார். யேர்மனி; ரீதியில் இவர்கள் தங்களின் தடங்களை பதித்துள்ளனர். வரும் காலத்தில் இன்னும் பல தமிழ்ச் சிறார்கள் பல சாதனைகளைப் படைக்க இவர்கள் முன்னுதாரணமாக இருக்கட்டும்.

710 total views, 2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *