ஆண்களுக்கு ஷாப்பிங் மனநிலையானது குறைந்தது 25 நிமிடங்களுக்கு மாத்திரமே!


பிரியா.இராமநாதன். இலங்கை.

டிசம்பர் மாதம் வந்தாயிற்று என்றாலே ஒரு குதூகலம்தான் . ஏனெனில் இந்த டிசம்பர் மதங்களில்தான் “shopping” திருவிழாக்கள் “களை” கட்ட ஆரம்பிக்கும் என்றால் மிகையாகாது.தொலைகாட்சி,பத்திரிகைகள், வெப்சைட் என எந்தப் பக்கம் பார்த்தாலும் “ழககநச” மழைதான். இதை வாங்கினா அது இலவசம்.. அதை வாங்கினா இது இலவசம்.. எதுவுமே வாங்காம சும்மா வந்துட்டு போனாலே இதெல்லாம் இலவசம்.. என எக்கச்சக்க இலவசங்களும், அதிரடித் தள்ளுபடிகளும் நம்மை கையை பிடித்து இழுக்காத குறையாக ளாழிpiபெகிற்கு அழைக்கும் மாதமென்றால் அது டிசம்பர் மாதம்தான். “online shopping‘ அதிகரித்துவிட்டதால், நேரடியாக கடைக்கு வந்து வாங்குபவர்களின் எண்ணிக்கை பெருவாரியாக குறைவடைந்துவிட்டதாக என்னதான் கடைக்காரர்கள் ஒருபக்கம் குறைபட்டுக் கொண்டாலும், இந்த வருட இறுதி மற்றும் பண்டிகைக் காலங்களில் அலங்கரிக்கப்பட்டிருக்கும் கடை வீதிகளில் கடை கடையாக ஏறி இறங்கி ளாழிpiபெ செய்வதில் கிடைக்கும் இன்பம் வேறெதிலும் கிடைப்பதில்லை.

குறிப்பாக பெண்களுக்கு! shopping செல்வது என்றாலே பெண்கள் குஷியாகிவிடுவார்கள்.எவ்வளவு மணித்தியா லங்கள் ஆனாலும் சரி தாங்கள் விரும்பியதை வாங்கும் வரை மன திருப்தி அடையமாட்டார்கள். கடைகளில் இருக்கும் அத்தனை பொருட்களையும் அலசி ஆராய்ந்து பிடித்தமானதை தேர்வு செய்வதில் பலே கில்லாடிகள் பெண்கள்.
ஆனால் ஆண்கள் shopping விஷயத்தில் இதற்கு எதிர்மாறாக செயல்படும் சுபாவம் கொண்டவர்கள் என்பது ஊரறிந்த உலகறிந்த விடயம்தான் என்றாலும் ,இது பற்றிய அமெரிக்க ஆய்வு ஓன்று ஆண்கள் கடைக்குள் சென்ற சில நிமிடங்களுக்குள்ளாகவே தமக்கு பிடித்தமானவற்றை தேர்வு செய்து விடுவதாகவும்,இவர்களது ஷாப்பிங் மனநிலையானது குறைந்தது 25 நிமிடங்களுக்கு மாத்திரமே நீடிப்பதாகவும்,குறைந்த நேரத்திலேயே இவர்கள் ஷாப்பிங் என்கிற ஒன்றில் சலிப்படைந்து விடுவதாகவும் குறித்த அந்த ஆய்வானது கூறுகின்றது. ஷாப்பிங்கும் ஆண்களுக்கும் ஏழாம் பொருத்தம் என்றுகூட சொல்லலாம். நுகர் பொருட்களைத் தயாரிப்பவர்களும், விளம்பர நிறுவனங்களும், ஆண்களுக்கும் ஷாப்பிங்கில் ஆர்வத்தை அதிகரிக்க புதுவகை உத்திகளை கையாண்டு வருகின்றனர். விளம்பரங்களில் அழகான பெண் மாடல்களும், அநேக சினிமா பிரபலங்களும் பயன்படுத்தப்படுகின்றனர்.
இப்படியிருந்தும் கூட, சுமார் 75மூ ஆண்கள், விளம்பரங்கள் பர்ஸை சுரண்டுவதற்கேயென நினைப்பவர்கள்தான் என்றால் பாருங்களேன் !!!

ஒரு தேவை உருவாகி அதற்காக நாம் ஒரு பொருளை வாங்குவதுதான் வழக்கமான நடைமுறை. ஆனால் இப்போது ஷாப்பிங் தளங்கள் பொருளைக் காட்டி, உணர்வுகளைத் தூண்டி தேவையை வலிந்துத் திணிக்கின்றன. ஷாப்பிங் செய்தால் நன்றாக இருக்கும் எனும் நிலைமாறி ஷாப்பிங் செய்யாவிட்டால் மிகப்பெரிய மன அழுத்தமாக இருப்பதைப்போன்று உணர்த்துவதாக கூறும் பலரையும் நாம் கண்ணுற்றிருப்போம் இல்லையா ? வெறுமையாக உணரும்போது ஷாப்பிங் தளங்களை அலசி ஆராயும் வேலையை பலரும் செய்வதை காணமுடிகிறது. மொபைல் அடிமைத்தனத்தைப்போல ஷாப்பிங் அடிமைகள் (அடிக்ட்) பரவலாக உருவாகிறார்கள் என்பதே வருத்தத்துக்குறிய விடயம். ஸ்மார்ட் போன் வலையமைப்பு இந்த ஷாப்பிங் அடிமைத்தனத்திற்கு மேலும் மேலும் வழிகோலிக்கொண்டே இருக்கின்றதெனலாம்.
தேவையில்லாமல் ஷாப்பிங் செய்வதென்பது “Buying shopping Dis-order” எனப்படும் ஒருவிதமான மனநோய் என்கிறார்களாம் மன நல மருத்துவர்கள். உலகில் பலருக்கு இந்த அறிகுறிகள் இருப்பதாக தெரிய வந்தாலும், இதனை கண்டறிவதற்கான சரியான வழிமுறை தற்போது வரை வெளியிடப்படவில்லை. கிட்டத்தட்ட சூதாட்டத்திற்கு அடிமையாகி இருப்பவர்களைப்போலவே, இந்த ஷாப்பிங் டிசார்டரால் பாதிக்கப்பட்ட மக்களும் இருக்கிறார்கள். தங்களுக்குத் தேவையற்ற செலவுகள் ஏற்படும் என்பதை அறிந்தும், தேவையற்ற பொருளை வாங்குவதும் இணையதளங்களில் தேடித் தேடி பொருட்களை வாங்குவதில் ஆர்வமாக இருப்பதும் இந்த நோயின் அறிகுறிகளாம். இதில் தாங்கள் செய்வது தவறான செயல் என்றும் தனக்கு தேவையே இல்லாத பொருள் என்றும் இதை வாங்குவதால் எந்த பயனும் இல்லை என்றும் தெரிந்திருந்தும், அப்பொருளை வாங்கும் எண்ணத்தை அவர்களால் கட்டுப்படுத்தவே முடிவதில்லையாம். அதுமட்டுமன்றி இவர்கள் தினந்தோறும் சந்தையில் ஏதாவது புதிய பொருள் அறிமுகமாகியுள்ளதா என்பதை பார்ப்பதற்காகவே கைத்தொலைபேசியில் அதிக நேரத்தை செலவிடுவார்களாம்.

வண்ணமயமாக இருக்கும் ஆடை அணிகலன்களாகட்டும்,வீட்டு உபயோகப் பொருட்களாகட்டும் – எதுவாக இருந்தாலும் பார்க்கும் நமக்கு வாங்க வேண்டும் என்று தூண்டப்படுவது இயற்கை தான். இந்த பொருட்களை வாங்குவது தேவைக்காக என்றில்லாமல், ஆசைக்காக என்று மாறும் போது தான் பிரச்சனை தொடங்குகிறது.அளவுக்கு மிஞ்சிய எதுவுமே விஷமாகும் என்பதற்கு இந்த ஷாப்பிங் மோகமும் ஓர் உதாரணம்தான் . இதிலிருந்து மீள்வதும் அதற்குள்ளேயே மூழ்கி மாண்டுபோவதும் நம் கைகளில்தான் இருக்கின்றது.

உயிர்மிகும் ஓவியங்கள் – நடன நாடகம்
இரவிவர்மாவின் ஓவியங்கள் எப்படி பெண்களை இலட்சியப்படுத்தி காட்டுகின்றன என்பதையும் பாரதியினுடைய பாடல்களையும் சங்க இலக்கியங்களில் இருந்து சில பாடல்களையும் கலாசாதனா கலைக்கூடம் கடந்த ஆண்டு நோர்வே நாட்டில் நாட்டியம் செய்தது. (உயிர்மிகும் ஓவியங்கள் – நடன நாடகம்) அதில் விஸ்வாமித்திரர் மேனகாவாக Niஅயடயn ளுயவாயைமரஅயச இ னுiளாயவொi வுhயஎநனெசயn நடனக் காட்சி வெற்றிமணியின் அட்டைப்படமாக (தை.2024) அமைந்துள்ளது. Phழவழ:வுhயள.

622 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *