காதல் மொழிகள் ஐந்து!
வுhந குiஎந டுழஎந டுயபெரயபநள
“என்ன சொன்னாலும் என் பொண்டாட்டி புரிஞ்சுக்கவே மாட்டேங்கறா” என புலம்பாத கணவர்களையும் “அவருக்கு என்றைக்கு இதெல்லாம் புரியப் போவுது” என புலம்பாத மனைவியரையும் கண்டுபிடிப்பது என்பது தும்பிக்கையில்லாத யானையைக் கண்டுபிடிப்பது போல சிரமமானது.
எல்லா தம்பதியருக்குள்ளும் இருக்கும் ஒரு மிகப்பெரிய சவால் இது. புரிந்து கொள்ளக்கூடிய வாழ்க்கைத் துணை அமைந்தால் வாழ்க்கை அற்புதமாக இருக்கும். மனைவியைப் புரிந்து கொள்ளும் கணவனும்இ கணவனைப் புரிந்து கொள்ளும் மனைவியும் அமைவது இறைவன் கொடுத்த வரம் எனலாம். ஆனால் பெரும்பாலான குடும்பங்களில் இந்த புரிதல் இருப்பதில்லை. அதனால் நதிபோல நடக்க வேண்டிய குடும்ப வாழ்க்கை சுனாமி பொல சுருட்டி அடிக்கும். சண்டைகளும்இ சச்சரவுகளும்இ ஏக்கங்களும்இ எதிர்பார்ப்புகளும், நிராசைகளுமாய் தான் பொழுதுகள் கடந்து போகும்.
“குடும்ப வாழ்க்கைன்னாலே அப்படித் தான் பாஸ்.. நாம ஒண்ணும் பண்ண முடியாது. இது நம்மளோட விதி”. என புலம்பும் மக்களைப் பார்த்து கேரி சேப்மேன் சொல்கிறார், “விதியாவது மண்ணாவது, இந்த சிக்கலையெல்லாம் சரி பண்றது ரொம்ப ஈஸி”.
“சும்மா காமெடி பண்ணாதீங்க சார்”. என நம்பாமல் பார்க்கும் மக்களுக்காக அவர் எழுதிய புத்தகம் தான் The five Love languages
தமிழில் ஐந்து காதல் மொழிகள் என சொல்லலாம். ஒவ்வொரு மனிதனும் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு மொழியோ, சில மொழிகளோ இருக்கும். தமிழே தெரியாத ஸ்பெயின் நாட்டுக் காரனிடம் போய், “சௌக்கியமா இருக்கீங்களா” என்று கேட்டால் “டே கே ஸ்பெஸ் அவ்லான்டோ” என்று ஸ்பேனிஷ்வார்கள். “என்ன சொல்றேன்னு எனக்குப் புரியலே” என்பது தான் அதன் பொருள். எல்லோருக்கும் புரியக்கூடிய மொழியில் பேசினால் தான் அந்த பேச்சுக்கு ஒரு அர்த்தம் உண்டு. உரையாடலின் அடிப்படை இது தான். பேசுபவர் எளிமையாய் பேசவேண்டும், கேட்பவர் முழுமையாய் உள்வாங்க வேண்டும். அவ்வளவே.
“கரடியா கத்தறேன்.. கேக்குதா பாரு” என கத்தினாலும் புரியாத மொழியில் பேசினால் புரியாது தான் ? இந்த விஷயத்தைத் தான் அவர் தனது நூலில் எழுதியிருக்கிறார். அந்த நூல் சாதாரண நூல் இல்லை. ஒரு கோடி பிரதிகள் விற்றுத் தீர்ந்த நூல். அமெரிக்காவின் டாப் செல்லிங் லிஸ்டில் பல ஆண்டுகள் உச்சத்தில் அமர்ந்துகொண்ட நூல். உலகெங்கும் சுமார் ஐம்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு கொண்டாடப்பட்ட நூல்.
அதெப்படி சாத்தியம் ? அவ்வளவு பெரிய அப்பாடக்கரா அந்த ஆசிரியர் என தேடினால் கிடைக்கும் விஷயங்கள் சுவாரஸ்யமானது. உளவியலில் டாக்டர் பட்டம், கலையில் முதுகலைப்பட்டம், ஆன்மீக கற்பித்தல் பிரிவில் முதுகலைப்பட்டம் என வாங்கி அடுக்கியவர். சுமார் முப்பது ஆண்டுகள் குடும்ப கவுன்சிலிங் துறையில் முழுமையாக ஈடுபட்டவர், என கிடைக்கின்ற தகவல்கள் அவருடைய நூல் மீதான மரியாதை உயர்த்துகிறது.
அப்படி என்ன தான் சொல்கிறார் ?
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு காதல் மொழி உண்டு. ஒரு தாய்மொழியோடு கூட கொசுறாய் இன்னொரு மொழி இருப்பது போல இரண்டாவது காதல் மொழி ஒன்றும் இருக்கும். மூன்றாவது மொழி கூட சிலருக்கு இருக்கலாம். ஆனால் முதல் இரண்டு மொழிகளும் தான் மிக முக்கியமானவை.
உங்கள் வாழ்க்கைத் துணைக்கு எந்த காதல் மொழி புரியும் என்பதைக் கண்டு கொள்வதில் இருக்கிறது வாழ்க்கையின் வெற்றி. அப்படிக் கண்டு கொண்டால், அதன்பின்னர் நீங்கள் அந்த மொழியில் உங்கள் வாழ்க்கைத் துணையிடம் பேசலாம். உங்கள் குடும்ப உறவு நெருக்கமாய் வளரும்.
அப்படி என்னென்ன காதல் மொழிகள் ?
- பாராட்டு வார்த்தைகள்
- தரமான நேரம்
- பரிசு பெறுதல்
- ஒத்தாசை விரும்புதல்
- தொடுதல்
இந்த ஐந்தும் தான் அந்த காதல் மொழிகள். இந்த ஐந்து மொழிகளில் உங்கள் வாழ்க்கைத்துணைக்கு எந்த மொழி புரியும் ? எந்த மொழி பிடிக்கும் ?
- பாராட்டு.
சிலருக்கு வார்த்தைகள் மிக முக்கியம். காதலாகிக் கசிந்துருகும் மனம் கணவனுக்கு இருந்தாலும், “நீ ரொம்ப அழகா இருக்கே செல்லம்” என கணவன் ஒரு முறை செல்லமாய்ப் பேசுவதை மிகவும் விரும்புவார்கள். அவர்களுக்கு அடிக்கடி அவர்களுடைய செயல்களைப் பாராட்டுவதோஇ அவர்களுடைய குணாதிசயங்களைப் பாராட்டுவதோ, அல்லது உறவு நிலையை பாராட்டுவதோ, தோற்றத்தைப் பாராட்டுவதோ மிகவும் உற்சாகமளிக்கும்.
உங்களுடைய வாழ்க்கைத் துணையின் காதல் மொழி பாராட்டு எனில்இ உங்களுடைய வாழ்க்கை அதைச் சுற்றி இருக்க வேண்டும். மனைவி வைக்கும் மீன் குழம்பு சூப்பராக இருக்கிறதென ரெண்டு சட்டி குழம்பை காலி பண்ணுவதோடு நின்று விட வேண்டாம். “நீ மீன் குழம்பு வெச்சா மீனுக்கே நாக்குல எச்சில் ஊறும்” என்று இரண்டு பாராட்டு வாக்கியத்தையும் சேர்த்து சொல்லுங்க, வாழ்க்கை அமோகமா இருக்கும். - தரமான நேரம்.
தரமான நேரம் என்பது ஸ்பெஷலாய் உங்கள் வாழ்க்கைத் துணைக்கு மட்டுமாக நீங்கள் ஒதுக்கும் நேரம். அது டின்னர் முடிந்தபின் மொட்டை மாடியில் போய் அமர்ந்து பேசும் நேரமாய் இருக்கலாம். சாயங்காலம் காலார நடந்து போய் இயற்கையை ரசிக்கும் நேரமாய் இருக்கலாம். அல்லது ஒரு காபி ஷாப் போய் ஒற்றைத் தேனீரை ஒன்றரை மணி நேரம் குடிக்கும் சமயமாகவும் இருக்கலாம். செல்போனை மூர்ச்சையாக்கி, வேறெந்த கவனச் சிதறலுக்கும் இடக் கொடுக்காமல் இருப்பது தான் தரமான நேரம். நாலுமணி நேரம் கிரிக்கெட் பார்த்து விட்டு, “காலைல இருந்தே வீட்ல தானே இருக்கேன்” இதை விட வீட்டுக்கு என்ன நேரம் செலவிடணும் என கேட்பது இதில் சேராது.
இங்கே மனம் விட்டுப் பேசுவதும், மனம் திறந்துக் கேட்பதும் தான் பிரதானம். பெரும்பாலும் பெண்களுக்கு இந்த காதல் மொழி தான் தேவையாக இருக்கும். அத்தகைய வாழ்க்கைத் துணை உங்களுக்கு அமைந்தால் நீங்கள் அவர்களோடு அதிக நேரம் செலவிட வேண்டும். அதை விட்டு விட்டு வேறென்ன செய்தாலும் அவர்கள் திருப்தியடைவதில்லை.
- பரிசு
சிலருக்கு பரிசுகள் பெறுவது ஆனந்தமாய் இருக்கும். அந்தப் பரிசின் விலை முக்கியமல்ல, ஆனால் அது கணவனிடமிருந்து கிடைக்கிறது, அல்லது மனைவியிடமிருந்து கிடைக்கிறது எனும் சிந்தனை தான் பெரிது. ஒரு காட்பரீஸ் சாக்லேட்டாகவோஇ நாலுசவரன் சங்கிலியாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
எதிர்பாராத நேரத்தில் நீட்டும் ஒரு சின்னப் பரிசு அவர்களை திக்கு முக்காட வைத்து விடும். உறவில் இருக்கும் விரிசலிலெல்லாம் அது சட்டென காங்கிரீட் போட்டு அடைத்து விடும். பரிசு என்பது, “நான் உன்னை நேசிக்கிறேன், நான் உன்னை நினைக்கிறேன்’ என்பதன் வெளிப்பாடாய் அவர்கள் புரிந்து கொள்வார்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் காதல் மொழி பரிசு எனில்இ அதை அடிக்கடிஇ வித்தியாசம் வித்யாசமாய் கொடுங்கள். தப்பித் தவறி கூட அவர்களுடைய பிறந்த நாள்இ திருமண நாள் உட்பட எந்த ஸ்பெஷல் டேயையும் பரிசு இல்லாமல் செலவிடாதீர்கள். - ஒத்தாசை
சிலருடைய காதல் மொழி “ஒத்தாசை” எதிர்பார்ப்பது. வேலையில் கூட மாட ஹெல்ப் பண்ணினால் சந்தோசப்படுவார்கள். உங்கள் மனைவியின் காதல் மொழி இதுவானால்இ “காய்கறி வெட்டவா ?” என கேட்டால் அவர்கள் ரொம்ப சந்தோசப்படுவார்கள். அழுக்காய் கிடக்கும் துணிகளை அள்ளி வாஷிங் மெஷினில் போட்டால் சிலிர்த்து போவார்கள். காயப் போட்ட துணிகளையெல்லாம் எடுத்து அடுக்கி வைத்தால் மகிழ்ந்து போவார்கள்.
அன்புடன் உதவி செய்ய தயாராய் இருப்பதே முக்கியம். இதை சும்மா ஒரு கடமைக்காகச் செய்யக் கூடாது. ஆத்மார்த்தமான அன்புடன் செய்ய வேண்டும் என்பது மிகவும் முக்கியம். இந்தக் காதல் மொழி உடையவர்களிடம் போய்இ “நீ சூப்பரா காய்கறி வெட்டறே” என பாராட்டு மொழி சொன்னால் “ஆமா… வெட்டியா இருந்துட்டு கருத்து சொல்ல வந்துட்டாரு…” என வெடிப்பார்கள். - தொடுதல்
தொடுதல் என்பது தாம்பத்ய உறவு மட்டுமல்ல. வீட்டில் தினசரி நடக்கும் செயல்களில் கணவன் மனைவியிடையே இருக்கின்ற சின்னச் சின்ன அன்பின் தொடுதல்களைஇ பாராட்டின் தொடுதல்களை, சில்மிஷத் தொடுதல்களை எல்லாம் இதில் சேர்த்துக் கொள்ளலாம்.
காலை நேரம், குட்மார்னிங் சொல்லி கொடுக்கின்ற முத்தம்இ வாழ்க்கைத் துணைக்கு ஒருவேளை ஆடி கார் வாங்கிக் கொடுப்பதை விட ஆனந்தம் தரலாம். அப்படியெனில் அவருடைய காதல் மொழி என்ன என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும்.
இந்த ஐந்து காதல் மொழிகளும் தான் அதி முக்கியமானவை. உங்கள் வாழ்க்கைத் துணைக்கானது எந்த காதல் மொழி என்பதை நீங்கள் கண்டு பிடிக்க வேண்டும். அதற்குத் தக்கபடி நீங்கள் உங்களுடைய காதல் வாழ்க்கையை இயக்க வேண்டும்.
உங்கள் துணைவிக்கு பரிசு தான் காதல் மொழி எனில்இ “துணி காயப் போடவா ?” என கேட்டால் கடுப்பாவார்கள். “கிளம்புப்பா காத்து வரட்டும் ” என்பார்கள்.
உங்கள் வாழ்க்கைத் துணைவருக்கு பாராட்டு தான் காதல் மொழி எனில் அவரிடம் போய்இ “வாங்க கொஞ்ச நேரம் பார்க்ல் ல போய் உட்காரலாம்” என்று சொன்னால் பதறிப் போவார்கள். “பார்க்ல என்ன இருக்கு, இங்கே ஓரமா படில உக்காந்துக்கலாமே” என்பார்கள்.
எனவே உங்கள் காதல் பார்ட்னருக்கு எது முதன்மையான காதல் மொழி என்பதைக் கண்டு கொள்ளுங்கள். பாராட்டு ஒருவருடைய காதல் மொழி எனில் அவரை விமர்சிப்பதையோஇ கிண்டலடிப்பதையோ தவிருங்கள். பரிசு ஒருவருடைய காதல் மொழி எனில் அவர் தருகின்ற பரிசை உதாசீனம் செய்யாதீர்கள். தனிப்பட்ட நேரம் ஒருவருடைய காதல் மொழியெனில் அவருக்காய் நிறைய நேரம் ஒதுக்குங்கள்.
இந்த மையக் கருத்தைத் தான் அவர் அந்த 135 பக்க நூலில் சுவாரஸ்யமாய் எழுதியிருக்கிறார். “காதலின் அடிப்படை உங்களுக்குப் பிடித்தமானதை அடுத்தவர் செய்ய வேண்டுமென எதிர்பார்ப்பதல்லஇ அவருக்குப் பிடித்தமானதை நீங்கள் செய்வது” ! இதையே ஒவ்வொருவரும் செய்தால் குடும்பங்கள் அன்பில் செழிக்கும், உறவில் வளரும்.
இப்போது உங்கள் மனதில் ஓடுகின்ற ஒரே ஒரு கேள்வி இதுவாகத் தான் இருக்கும். என் துணையின் காதல் மொழியை நான் எப்படி கண்டுபிடிப்பது ?. அதற்கு ஒரு சின்ன சோதனை இருக்கிறது. கணவன் மனைவி இருவரும் தனித்தனியே இந்த கீழ்க்கண்ட குட்டித் தேர்வை எழுதுங்கள். ஒவ்வொரு கேள்விக்கும் உங்களுடைய பதிலை டிக் செய்யுங்கள், கடைசியில் அ,ஆ,இ,ஈ, எல்லாவற்றையும் தனித்தனியே கூட்டுங்கள். எது அதிக மதிப்பெண் பெறுகிறதோ, அது தான் உங்கள் காதல் மொழி. எது இரண்டாவது அதிக மதிப்பெண் பெறுகிறதோ அது இரண்டாவது காதல் மொழி.
இப்போது, உங்கள் பரீட்சை பேப்பரை உங்கள் வாழ்க்கைத் துணையிடம் கொடுங்கள். அவரிடம் இருப்பதை நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள். இப்போது உங்கள் துணையின் காதல் மொழி என்னவென உங்களுக்கே தெரியும்.
அப்புறமென்ன ? கேரி சேப்மேனுக்கு ஒரு பெரிய நன்றி சொல்லிவிட்டு ஆனந்தமான வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டியது தான்.
719 total views, 6 views today