யேர்மனியில் கேர்லின் நகரில் பூத்துக்கிடக்கும் காதலர் பூட்டுக்கள்.
-மாதவி.யேர்மனி
யேர்மனியில் கேர்லின் நகரில் றைன்நதி பாலம் (ர்ழாநணெழடடநசnடிசரநஉமந டிசனைபந in ஊழடழபநெஇ புநசஅயலெ) புகையிரத நிலையத்தை அண்டிய பகுதி, பெரிய தேவாலத்திற்கும் அருகில் இந்த காதல் பூட்டுக்கள் (டுழஎந டுழஉமள) அமைந்துள்ளது.
காதலர்கள் தங்கள் காதல் நினைவாக செய்யும் லீலைகள் நாடு, மொழி, மதம், கடந்து நிற்கின்றது. காதலுக்கு கண்ணில்லை என்றானபோது நாடென்ன மதம் என்ன.
நமது தாய்மண்ணில் காதலுக்காக வரைந்த ஓவியங்கள் இன்றும் மரங்களில் இருக்கின்றது. மரத்தில் இதயம் வரைவதும், காதலன் காதலி பெயர் பொறிப்பதும், ஓர் அலாதியான இன்பக்கொண்டாட்டம். மரங்கள் மட்டுமா பாடசாலைச் சுவர்கள், போக்குவரத்து பஸ்களின் இருக்கைகள் என்று எங்கு பார்தாலும் ஓவியமாக பெயர்களை எழுதிவைப்பார்கள். இது ஒரு வகை காதல் ஓவியம்.
அது எமது நாட்டில். இந்த எழுத்து ஓவியங்கள் இங்கும் உண்டு. காதலன் காதலி கண்ணில் அடிக்கடி படும் இடங்களில் எல்லாம் இந்த காதல் ஓவியங்களும் பெயர்களும் இருக்கத்தான் செய்கின்றன. இந்தப் பெயர்களில் என்னதான் இருக்கு என்று கேட்டுவிடாதீர்கள். அது காதலர்களுக்கு வெறும் பெயர்கள் அல்ல அதுவே அவர்களுக்குப் பிடித்த கவிதையாகவும் இருக்கும். சிலசமயம் அதுதான் அவர்களது தேசியகீதமாகவும் இருக்கும். காதலை வெளிப்படுத்தவும் அது வழியாக இருக்கலாம்.
அங்கு அந்த பாலத்திற்கு (வாந ர்ழாநணெழடடநசn டீசனைபந ) வரும் காதலர்கள் தாங்கள் வாழ்வில் பிரிவது இல்லை என்ற மன உறுதியுடன் தங்கள் காதல் என்றும் நிலைத்திருக்க ஒரு பூட்டை அந்த கம்பிவலை வேலியில் ஒரு இடத்தில் பூட்டிவிடுவார்கள். பூட்டப்பட்ட இந்த இணைப்பு இனி விடுபட வேண்டியதே இல்லை. அந்தத்தேவையும் இல்லை. எனவே இதயப்பூட்டுள் காதலர்கள் தம்மை உள்வைத்து பூட்டிவிட்டு, இனிவாழ்வில் காதலைவிட்டு இருவரும் வெளியேறுவது இல்லை என்ற முடிவுடன் பூட்டிய சாவியையும் நதிக்குள் வீசிவிடுவார்கள்.
இப்படி ஆயிரம் ஆயிரம் கதாலர்கள் தினம்தோறும் தம்மைத்தாமே இதயச் சிறக்குள் பூட்டிவிட்டு, திறப்பை மகிழ்வாக எறிந்து விடுவார்கள். படத்தில் பாருங்கள் எத்தனை பூட்டுக்கள். இரு பக்கமும் அழகிய பல வண்ணப் பூட்டுக்களால் நிறைந்திருக்கும். பெரும்பாலான பூட்டுக்களில் எல்லாம் அவர்களது பெயரும் திகதியும் பொறித்திருக்கம்.
இந்த காதல் கலாச்சாரம் எத்தனையோ நூறுவருடங்களுக்க முன் இத்தாலி யில் இருந்து வந்திருக்கலாம் என்று அறிப்படுகின்றது. இந்தப் பூட்டுக்கள் பல வடிவில் இருக்கும் சில இதயம்போல், சில வர்ணத்தில் அமைந்ததாக மற்றும் சில சைக்கிள் பூட்டில் தொங்கும் பூட்டுக்காக என்று பல வடிவமாக இருக்கும். இவர்களது காதல் நிலைக்கிறதோ இல்லையோ பூட்டுவிற்பனையாளரது வாழ்வு நிலைக்கும் அது நிச்சயம்.
பாலத்தில் இருக்கும் பூட்டுக்களின் நிறை இரண்டு தொன்னையும் தாண்டிவிட்டது. இந்த காதல் பூட்டுக்கள் யேர்மனியில் கம்பேர்க் நகரிலும் மற்றும் கனடா (வன்கூவர்) பாரிஸிலும் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் பாரிசில் உள்ள பாலத்தின் ஒரு பகுதி பூட்டின் பாரம் தாங்க முடியாமல் இடிந்து விழுந்த சம்பவமும் நடைபெற்றது.
இப்பூட்டுக்களை பூட்டிய காதலர்கள் காதல் கனிந்து மகிழ்வில் இருப்பவர்கள், அந்த இடத்திற்கு வந்து தமது நினைவுகளை மீட்பார்கள்.
ஒரு காதலன் கூறுகையில் ‘ நாம் ஒருவேளை சேரமுடியாது பிரிந்து விட்டாலும், நாம் இவ்விடத்தை மீண்டும் ஒரு முறைவந்து பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டால் நீ நம்பு! ‘நான் உனக்காக இங்கு காத்து இருகின்றேன்” என்று!
சத்தியம் செய். நான் உன்னை மறக்க மாட்டேன் என்று. எனக்கு நூறு வயதானாலும்!
காதல் வெற்றிபெற்றால், அது மிக இனிமையானது. அதுவே தோற்றுப் போனால் மிகவும் வலியானது.
இப்படி பல காதல் வசனங்கள் காற்றாக அந்தக்காதல்; பூட்டுக்களை தினம் வருடியவண்ணம் வீசுகின்றது.
ஆசை வெட்கம் அறியாது. அங்கு காதலர்கள் ஆங்காங்கு அது உண்மை என்பதை காட்டியவண்ணம் இருப்பார்கள்.
நீங்களும் யேர்மனியில் இந்த நகரத்திற்கு போனால் பாருங்கள.; புகையிரதத்தில் அந்த பாலத்தைதாண்டிச் சென்றால் கவனியுங்கள், பூட்டுப்பூட்டாக பூத்திருக்கும் காதல் மொட்டுக்களை.
எமது அந்தக் காலத்தை எண்ணிப் பார்த்தால் காதல் என்றால் எதோ ஒரு குற்றச்செயல் போல! அன்று இருந்த பெரியவர்கள் எம்மைப் பார்த்தார்கள். இப்படிப் பார்த்தால் எத்தனையோ காதலர்கள் பூட்டையும்,திறப்பையும் தொலைத்தவர்களாகத்தான் இருப்பார்கள். ஒரு பார்வைக்காகத் தவம் இருந்த காலம். அது இன்றும் இனிக்கும்.
;.
811 total views, 4 views today