கடற் கவிதை
Skomer வர்ணத்தீவின் பஞ்சவர்ணக் கதை!
Nivens Photos • ஆச. டு. ஆழாயயெசயத
கிட்டத்தட்ட 10 மீன்களை தனது சொண்டில் ஒன்றாகச்
சேர்த்த பின்னரே தனது பொந்திற்குத் திரும்பிவரும்.
ஒவ்வொரு பயணமும் அர்த்தமுள்ள ஆயிரம் கதைகளை நமக்குக் கற்பித்துவிடுகின்றது. அந்தவகையில் எனது இந்தப் பயணக் கதை கடல் கிளிகளின் புகைப்பட வேட்டை பற்றியது. இந்தக் கடல் கிளிகளை புகைப்பட மெடுப்பதற்காக வனவிலங்கு புகைப்படக்கலைஞரான எனது நண்பர் தினேஷின் உதவியோடு நான் சென்ற இடம்தான் ளுமழஅநச தீவு.
இங்கு தங்கியிருந்து புகைப்படம் எடுப்பதற்கான ஏற்பாடுகளை கிட்டத்தட்ட பயணப்படுவதற்கு முன் நான்கு மாதங்களுக்குள் நண்பரின் உதவியோடு தயார் செய்தாயிற்று. ஆனால் இங்கு போவதற்காக ஒருவருடம் முதலே பதிவு செய்தாக வேண்டும். ஏற்கனவே பதிந்தவர்களில் யாரோ ஒருவர் பதிவை இரத்துச் செய்தமையினால்தான் அந்த வாய்ப்பு எமக்குக் கிடைத்திருந்தது. ளுமழஅநச என்பது இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு தீவு. வேல்ஸ் என்கின்ற மாநிலத்துக்குக்குரியது. இந்தத் தீவானது 3.2கிலோமீட்டர் நீளமும் 2.4கிலோமீட்டர் அகலமும் கடல்மட்டத்திலிருந்து சராசரி உயரம் 60 மீட்டரையும் உடைய சிறிய தீவாகும். ளுமழஅநச தீவில் இரவுவேளைகளில் 15 அல்லது 16 பேர்வரைதான் தங்கிச்செல்ல அனுமதிக்கப்படுவார்கள். எமக்கான உணவுகளையும் நாம்தான் எடுத்துச்செல்ல வேண்டும். இனி எனது பயண அனுபவங்களுக்குள் நுழைவோம்.
ஜேர்மனியின் ஊழடழபநெ – டீழnn விமான நிலியத்திலிருந்து டுழனெழn ர்நயவாசழற விமான நிலையத்தையடைந்தேன். அங்கு என்னுடைய நண்பருடன் இணைந்து, நேரம் 11:30 மணியளவில் ளுமழஅநச தீவை நோக்கிய எமது 350கிலோமீட்டர் பயணத்தை ஆரம்பித்து 6:30 அளவில் கப்பல் ஏறும் இடத்தைச் சென்றடைந்தோம். 25நிமிட கப்பல் பயணத்தையடுத்து தீவினையடைந்தோம்.
எமது பொருட்களை எடுத்துக்கொண்டு அங்கு அமைக்கப்பட்டுள்ள படிகளில் ஏறி அனைவரும் சந்திப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள இடத்தைச் சென்றடைந்தோம். அங்கு எமக்கான வழிகாட்டுதல்களும் நடைமுறைகளும் விளக்கப்பட்டன. இங்கு தங்குமிடத்திற்கு வெளியில் தீமூட்டக்கூடாது. னுசழநெ பறக்கவிடுதல் தடை செய்யப்பட்டுள்ளது. இங்கிருக்கும் கற்களையோ அல்லது பறவைகளின் முட்டைகளையோ நாம் எடுத்துச் செல்ல முடியாது. இங்கு வலையமைப்பு இல்லாததால் தொலைபேசிகளையும் பயன்படுத்த இயலாது.
இந்தத் தீவில் ஒரே ஒரு பாழடைந்த கட்டடம் தான் உள்ளது. அதை பண்ணை வீடு என்பார்கள். இதுதான் அனைவருக்குமான தங்கும் இடம். இங்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் கழிப்பிட வசதிகளும் சமையலறை மற்றும் குளிர்ந்த நீர் வசதிகளும் மாத்திரமே உண்டு.
கிட்டத்தட்ட 30 நிமிட நடைபயணத்தில் தங்குமிடத்தையடைந்த பின்னர் 10:30 மணியளவில் கடல் கிளிகளை புகைப்படமெடுக்கச் செல்வதற்காகத் தயாரானோம். அந்தத் தீவின் மூன்று இடங்களில் மட்டுமே இந்தக் கடற்கிளிகளை புகைப்படமெடுக்க முடியும். முதலாவது இடத்திற்குச் சென்றால் கடற்கிளியையும் சூரிய உதயத்தையும் சேர்த்து எம்மால் பார்க்க முடியும். இரண்டாவது இடத்திற்குச் சென்றால் தாய்ப்பறவை தனது குஞ்சுகளுக்கு இரையூட்டுவதைக் காணக்கூடியதாக இருக்கும். மூன்றாவது இடத்தில் சூரியன் மறையும் காட்சியோடு இணைத்து கடற்கிளிகளைக் காணக்கூடியதாக இருக்கும்.
இந்த நேரம் இரண்டாவது இடத்தில் புகைப்படம் எடுப்பதற்கே பொருத்தமானது என்பதால் அந்த இடத்தை நோக்கிச் சென்றோம். அந்த இடத்தில் ஏராளம் பறவைகளைக் காணக்கூடியதாக இருந்தது. ஆரம்பத்தில் கடற்கிளிகளை ரசித்து அதன் நடத்தைகளை புரிந்துகொண்டபின் நான் கொண்டுசென்ற Nமைழn ண8 இ Nமைழn ண6ii மற்றும் Nஐமுமுழுசு ணு 400ஃ2.8 வுஊ ஏசு ளுஇ Nஐமுமுழுசு 70-200 அஅ 1:2இ8நு குடு நுனு ஏசு ஆகிய புகைப்படக்கருவி மற்றும் வில்லைகளை வைத்து இயக்கி புகைப்படங்களை எடுக்க ஆரம்பித்தேன்.
காற்று வழமையை விட அதிகமாக வீசிக்கொண்டிருந்தமையால் பறவைகளின் இயல்பான நடத்தைகளில் சிறிது மாற்றங்களிருக்கும். நண்பகல் வேளையை நெருங்கியதும் புகைப்படமெடுப்பதை நிறுத்திவிட்டு பண்ணைவீட்டை நோக்கித் திரும்பிவிட்டோம். மதிய உணவை முடித்து மீண்டும் அதே இடம் நோக்கி புகைப்படமெடுக்க 02:30 அளவில் புறப்பட்டோம்.
இந்த தீவிற்கு ஒரு நாளில் 3தடவைகள் கப்பற் போக்குவரத்து நடைபெறும். தினமும் 9:00, 10:00, 11:00 ஆகிய நேரங்களில் வருகைதரும் 50 பேரும் முறையே 3:00, 4:00, 5:00 மணி நேர அளவுகளில் வெளியேற வேண்டும். மதிய நேரத்தில் ஏறக்குறைய 175 நபர்களைக் கொண்டதாக இருக்கும்.
முதலாவது இடத்தில் சூரிய உதயத்தைக் காண முடியவில்லை. எனவே இரண்டாமிடத்திற்குச் சென்று புகைப்படங்களை எடுக்க முடிந்தது.
Pரககin எனப்படும் கடல் கிளியானது இந்தத் தீவினைச் சார்ந்திருப்பதற்கு அதன் நிலவமைப்பே சாதகமாயிருக்கிறது. கடல்மட்டத்திலிருந்து 60ஃ70 மீட்டர் உயரத்திலிருக்கும் இந்த தீவின் நிலம் மென்மையானதாயும், பொந்துகள் அமைப்பதற்கு ஏற்ற விளிம்புகள் காணப்படுவதாலும் கடற் கிளிகள் இதனை அடியொற்றிக் காணப்படுகின்றன.
இந்தப் பறவையானது நிலத்தின் விளிம்புகளில் பொந்து அமைத்து அதற்குள்ளே முட்டையிட்டு அடைகாக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. அலையில் நீந்தக்கூடியதும், கடல் மீன்களை இரையாக உட்கொள்ளக்கூடியதுமான இந்தக் கிளிகள் ஏனைய கடற் பறவைகளிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளவும் தமது குஞ்சுகள் பாதுகாப்பாக கடலை நோக்கி பறப்பதற்கு ஏற்றவகையிலும் இந்த பொந்துகளை பயன்படுத்துகின்றன. 2023ஆமாண்டின் கணக்கெடுப்பின் பிரகாரம் ஏறத்தாழ 42,500 கடற்கிளிகள் இனப்பெருக்கம் செய்து தீவைவிட்டு வெளியேறியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கடற்கிளிகள் தரையிலிருந்து கடலை நோக்கி 15கிலோமீட்டர் தூரம்வரை பறந்துசென்று கடலிலுள்ள மீன்களைப் பிடிக்கக்கூடியது. இதனால் 200 அடி ஆழம்வரை நீந்தக்கூடியதாக இருந்தாலும் நீரின் மேற்பரப்பில் வரும் மீன்களை 10-20 செக்கன்களில் பிடிக்கக்கூடியது. கிட்டத்தட்ட 10 மீன்களை தனது சொண்டில் ஒன்றாகச் சேர்த்த பின்னரே தனது பொந்திற்குத் திரும்பிவரும்.
இதன் வாழ்க்கை வட்டம் மிகவும் சுவாரசியமானது. இந்த பெண் பறவையானது ஒரே ஒரு முட்டையை மாத்திரமே பிரசவிக்கும். அதன்பின்னர் ஆண்பறவையும் பெண்பறவையும் இணைந்து 06கிழமைகள் அடைகாத்து, குஞ்சு பொரிக்கும். பிறந்த குஞ்சு மீண்டும் 06கிழமைகளில் 300 கிராம் நிறையை அடையும்வரை இந்த பொந்தினுள்ளேதான் தங்கியிருக்கும். இதற்கு ஒரு நாளில் 05இலிருந்து 08தடவைகள் இரண்டு பறவைகளும் இணைந்து உணவினையூட்டும்.
கிட்டத்தட்ட 06கிழமைகளின் பின்னர் அந்தக் குஞ்சு கடலை நோக்கிப் பறந்து செல்லும். கடலுக்குள் சென்ற இந்தக் குஞ்சுப்பறவை ஏறத்தாழ 2வருடங்களுக்கு கரையை நோக்கித் திரும்பாது கடலிலேயே வாழும். அதன்பின் தனக்கு ஏற்ற துணை அமைந்ததும் பொந்தினை தேடிக்கொள்ள நிலம் நோக்கித் திரும்பும். எனினும் 05 வயதின் பின்னரே இனப்பெருக்கத்திற்குத் தயாராகும். இவற்றின் ஆயுட்காலம் சராசரியாக 25வருடங்களெனக்கூறப்பட்ட போதிலும் அண்மைய தரவுகளின்படி சில கடற்கிளிகள் 38வருடங்கள் இந்தத் தீவில் வாழ்ந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த கடற்கிளிகளை புகைப்படமெடுக்கும்போது பல சுவாரசியமிக்க நிகழ்வுகள் நடந்தேறும். கிளிகள் மீனைக் கொண்டுவரும்போது கடற்காகங்கள் அவற்றை விரட்டும். மீனைக் காப்பாற்றிக்கொள்ள அவை விரைவாக பொந்துக்குள் நுழையும். இந்த சுவாரசியங்களை புகைப்படமாக எடுத்து வைத்துக்கொண்டேன். மறுநாள் காலை நாங்கள் தீவை விட்டு பயணப்படவேண்டும் என்பதால் சூரிய உதயத்தை மாத்திரம் புகைப்படமெடுக்கக்கூடிய சந்தர்ப்பம் இருந்தது. ஆனால் அதிகாலை வேளையில் மீண்டும் மேக மூட்டம் மிக அதிகமாக இருந்ததால் தங்குமிடத்திற்கே திரும்பிவிட்டோம். பயணப்படுதலுக்கான ஆயத்தம்க்களைச் செய்து தீவைவிட்டு வெளியேறினோம்.
சில வேளைகளில் இயற்கை எமது திட்டமிடல்களை மாற்றியமைத்தாலும், இந்தப் பயணம் எனக்கு நிறைவான மகிழ்ச்சியையே அளித்திருந்தது. இந்த இரண்டு நாட்களில் எனக்குத் தேவையான புகைப்படங்களை எடுத்துக்கொண்டாலும், இந்தப் பரந்த தனித்த தீவில் 25 பேருடன் மாத்திரம் தங்கி நின்ற அனுபவம் புதுமையானது. இந்த வெளிமுழுவதும் நட்சத்திரங்கள் நிறைந்த வானம், பறவைகளின் இன்னிசை என்று நிரம்பியிருந்தது. ஆனாலும் சூரிய அஸ்தமனத்தையும் சூரிய உதயத்தையும் புகைப்படம் எடுக்கமுடியவில்லை என்பது எனது சிறு கவலை. எனவே நான் 2024 ஆமாண்டில் மீண்டுமொரு ளுமழஅநச தீவு நோக்கிய இன்னொரு பயணத்திற்கான திட்டங்களை ஆரம்பித்துள்ளேன். ளுமழஅநச தீவே, கடற் கவிதைகளின் உதயத்தையும் அஸ்தமனத்தையும் காண்பதற்காய் இந்தப் புகைப்படக் கருவிகளோடு நான் மீண்டும் வருவேன்!
558 total views, 2 views today