50 € போட்ட குட்டி 5 கோடியானதா!
Compounding Effect என்ற உலக அதிசயம்!
- சிந்தனை சிவவினோபன். யேர்மனி
90ஸ் கிட்ஸ்க்கு ( 90s Kids ) மட்டும் தான் தெரியும் புத்தகத்துக்குள் வைத்த மயிலிறகு, குட்டி போடும் என்று. இது ஒரு கற்பனை மகிழ்ச்சி ஆனால் அதே 90ஸ் காலகட்டத்தில் ஒருவரை உலகப் பணக்காறராக உருவாக்கிய நிஜமான அதிசயம் தான் இந்த Compounding Effect. கதை மிகவும் சுவாரசியமாக இருக்கும். விசில் அடிக்க தெரியாவிட்டால் விசில் அடிக்க கற்றுக் கொள்ளுங்கள். இந்தத் தொடர் முடியும் பொழுது உங்களை அறியாமல் நீங்களே ஆரவாரப்படுவீர்கள்.
1950இல் ஒரு இளைஞன், அவன் பக்கத்து வீட்டில் இருந்த ஒரு வசதியான நபரிடம் சொல்லுகின்றான், தான் ஒரு பங்குச்சந்தை என்கின்ற விடயத்தில் வேலை செய்கின்றேன். நீங்கள் என்னிடம் முதலிட்டால் அதில் வருகின்ற லாபத்தை உங்களுக்கு தருவேன். என்று ஒரு புதிய விடயத்தை அறிமுகப்படுத்தி பேசினான். அந்தப் பக்கத்து வீட்டு நபருக்குஇ நம்பிக்கை இல்லை என்றாலும் இந்த இளைஞனின் துடிப்பை பார்த்து ஒரு 50 டாலர் பணத்தை எடுத்து அவனிடம் கொடுத்துவிட்டு. “இதை என்னுடைய பரிசாக வைத்துக் கொள். நீ பெரிய ஆளாக வரவேண்டும்” என்று வாழ்த்தி விட்டு சென்றார். காலங்கள் இப்படியே உருண்டோடுகின்றது கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.
அந்த பணக்காரராக இருந்த நபர், வேறு ஒரு ஊருக்கு சென்றார். அங்கு பல முயற்சிகள் செய்து அவற்றில் எல்லாம் தோற்று மிகப்பெரிய கடன் நஷ்டம் என்று வாழ்க்கையில் தோல்வியுற்ற நபராக 60 வயதில் மீண்டும் திரும்பி தன் சொந்த ஊருக்கு வருகின்றார். வந்து என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் பொழுது எதேச்சையாக முப்பது வருடங்களுக்கு முன் சந்தித்த அந்த இளைஞன் இவரிடம் ஓடிவந்து, இவரை அழைத்துக் கொண்டு தன்னுடைய அலுவலகத்திற்குச் சென்று, ஒரு பைலை எடுத்து அவர் முன் வைத்தான்.
இதில் ஐந்து கோடி டாலர் பணம் இருக்கின்றது. இவை அனைத்தும் உங்களுக்கே சொந்தம் என்று சொன்ன அந்த வார்த்தையை கேட்ட அந்த 60 வயது நபர் அதிர்ந்து போனார். மேற்கொண்டு இளைஞன் சொன்னான், ஆம் நீங்கள் அன்று கொடுத்த 50 டாலர் பணம், முதலிட்ட இடங்களில் பணத்தை அள்ளிக் குவிக்க, நீங்கள் இந்த ஊரை விட்டு சென்று விட்டதனால், அந்த லாபத்தை நான் மீண்டும் மீண்டும் பங்குச்சந்தையிலேயே போட்டு, அதில் வருகின்ற லாபத்தை மீண்டும் மீண்டும் பங்குச்சந்தையில் போட்டு, இன்று உங்களுடைய பணம் ஐந்து கோடி ஆக பெருகி இருக்கின்றது என்று ஆச்சரியப்படுத்தினான். இது எப்படி சாத்தியம் என்பதை கணித ரீதியாக பார்த்தோம் என்றால்.
இதை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் கணிதத்தில் வட்டி கணக்கு என்கின்ற ஒரு பகுதி உங்களுக்குத் தெரிந்திருந்தால் மட்டும் தான் இந்த விடயத்தை புரிந்து கொள்ள முடியும். உதாரணத்திற்கு ஒரு நூறு டாலர் பணத்திற்கு பத்து விழுக்காடு (10மூ) வட்டி கிடைக்கும் என்று வைத்துக் கொண்டோம் என்றால், நூறு டாலர் பணம் ஒரு வருடத்தில் 313.84 டாலர் பணத்தை உருவாக்கியிருக்கும். இது ஒரு பெரிய பணம் கிடையாது. ஆனால் 10 வருடத்தில் எவ்வளவு பணம் சேர்ந்து இருக்கலாம் என்று நினைக்கின்றீர்கள்? இந்த கணக்கின்படி பார்த்தாலே நீங்கள் நினைப்பீர்கள் (313 ஒ 10ஸ்ரீ 3130 டாலர் ) ஏனென்றால் 10 வருடம் ஆகவே 3130 டாலர் கிடைக்கும் என்று நினைப்பீர்கள். இதுதான் சாதாரண கணிதம். ஆனால் ஊழஅpழரனெiபெ நுககநஉவ மூலமாக உண்மையிலேயே வெறும் பத்து வருடத்தில் 9 270 907 டாலர் பணம் சேர்ந்திருக்கும்.
–
வானத்தில் இருந்து நான் வரைந்த சித்திரம்.
-கண்ணா.யேர்மனி
வானத்தில் இருந்து நான் வரைந்த சில ஓவியங்கள். யேர்மனி விமானத்தில், செல்லும்போது, வானில் இருந்து முகில்கூட்டங்களுக்கு இடையாக,சில சித்திரங்கள் கண்ணில் பட்டன. மேலே நான் வரைந்த ஓவியம் என்று குறிப்பிட்டேன், அதனை வேண்டுமானால் நான் இனம் கண்ட ஓவியம் என்று வேண்டுமானால், மாற்றிக்கொள்ளலாம்.
யேர்மனியில் நிலக்கரிச்சுரங்கங்கள், உள்ள இடங்களை இங்குள்ள படங்களில் காணலாம்.
இந்த நிலக்கரி சுரங்கங்களினால் பல கிராமங்கள் இடம் பெயரவேண்டியும், வந்தது. ஆனால் இலங்கையில் நம் தாயகப் பகுதிகளில், இடம் பெயர்ந்தவர்களுக்கு, இராணுவம் அபகரித்த, அதாவது பாதுகாப்பு வலயங்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த கிராமங்களுக்கு பதிலாக எந்த நட்ட ஈடுதன்னும் வழங்கவில்லை. ஆனால் யேர்மனியில் அவர்கள் வாழ்ந்த கிராமங்களை, அதே பெயரில் வேறு இடத்தில், அவர்களுக்கான வீடுகள், வைத்திய சாலைகள், வங்கிகள், ஏன் தெருக்கள் கூட அதே பெயரில் அமைத்தும் கொடுத்துள்ளனர். சரி இனி சித்திரத்திற்கு வருகிறேன்.
நிலக்கரி தோண்டப்பட்ட இடமே மேல் இருத்து பார்க்கும் போது அழகான யடிளவசயஉவ யசவ அக தெரிகிறது. இயற்கையும், எமது செயல்களும், சில நேரங்களில் நாம் தீட்டமிட்டு, வரையும் சித்திரங்களை, விட சிறப்பாக வருவதும் உண்டு, அதற்கு இச்சித்திரங்கள் பெரும் உதாரணம்.
உங்கள் பார்வை. அதன் கோணங்கள் , கலைநயம் உள்ளதாக அமையும் போது. சித்திரக்கண்காட்சி என்று எங்கும் பார்க்கும் எமக்கு, இயற்கை தினம் தினம் பல புதிய சித்திரங்களை காட்சிப்படுத்திய வண்ணமே உள்ளன.
392 total views, 6 views today