யேர்மனியில் சர்வதேசப் பெண்கள் நாள் 2024

கடந்த மாதம் 08.03.2024 வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு, டோட்மூண்ட் தமிழர் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. டோட்மூண்ட் நகர தமிழ்ப் பெண்கள் மன்றம் இதனை முன்னெடுத்தது. அகவணக்கம்,அதனைதத் தொடர்ந்து,றாஜி அவர்களின் வரவேற்புரையுடன் விழா சிறப்பாக ஆரம்பமானது. நிகழ்ச்சிகளை மிதிலா சிறப்பாக தொகுத்து வழங்கினார்.மகளிர்தின வரலாற்றுக் குறிப்பினை அன்னலஷ்மி அவர்கள் எடுத்துரைத்தார். மேலும் சர்வதேச சாதனைப் பெண்கள் சிலரின் ஒளிப்படத்தினை நிறுத்தி அதன் முன்நின்று சாதனைப்பெண்களின் வரலாற்றை சுருக்கமாகச் சொன்னார்கள்.
மேடம் மேரி கியூரி பற்றி மிதிலா,றோசா பார்க்ஸ் – பற்றி, றாஜி,ஜெர்ட்ரூட் எலியன் பற்றி பிரியாகல்பனா சாவ்லா பற்றி தயா,முனிபா மசாரி – பற்றி பார்த்திமா பஸ்லீனா,நவநீதம்பிள்ளை பற்றி குமுதா,ஐரினா சென்ட்லர் பற்றி மல்லிகா அவர்களும் உரை நிகழ்த்தினார்.தொடர்ந்து பெண்கள் நாளில் கேள்வியும், பதிலும் என்ற நிகழ்ச்சியை சகானா அவர்கள் நடத்தினார்.
வெற்றிமணி பத்திரிகை பங்குனி மாதம் வெளியான பெண்கள் தினச் சிறப்பிதழ் பற்றிய சிறு ஆய்வு நிகழ்ச்சியும், இடம்பெற்றது. நகுலா. சிவநாதன்,வி.சபேசன்,மிதிலா,ஆகியோர் கலந்து உரையாற்றினர். நகுலா சிவநாதன் தனதுரையில், வெற்றிமணி பத்திரிகை ஓவ்வொரு வருடமும், பங்குனி மாதம், பெண்கள் நாளில் ஒரு சாதனைப் பெண் ஒருவரை, பங்குனி மாதம் கௌரவ ஆசிரியராக நியமித்து கௌரவம் வழங்கி வருகிறது. ஒவ்வொரு முறையும் தலைசிறந்த பெண்களை கௌரவிப்பது மகிழ்ச்சியானது. என்றார்.
அடுத்து வி.சபேசன் அவர்கள் வெற்றிமணி சிறப்பிதழில் கௌரவம் பெற்ற கவிதா லட்சுமி அவர்களை நன்கு அறிந்தவர், அவரது மாணவர்களது நிகழ்ச்சிகளையும், நேரில் பார்த்தவர். எனவே அனுபபூர்வமான தன்கருத்தை முன்வைத்தார். கவிதாவின் ஆற்றலை அறியும் வண்ணம் அவரது உரை அமைந்து இருந்தது. அத்துடன் வெற்றிமணி பத்திரிகை அன்று முதல் பெண்களை ஆற்றல் மிக்கவர்களா உருவாக்கிவருவதில் சிறப்பாகப் பணியாற்றுகிறது என்றார். மிதிலா தனது உரையில் கடைகளுக்குச் சென்றால் வெற்றிமணி பத்திரிகை எடுக்காமல் நகரமுடியாதபடி ஒருவித ஈர்ப்பு வெற்றிமணிக்கு உள்ளதை உணரமுடிந்தது. ஆரோக்கியமான பல ஆக்கங்கள் உள்ள பத்திரிகை வெற்றிமணி என்றார். வெற்றிமணி ஆசிரியர் மு.க.சு.சிவகுமாரன் அவர்கள் தன் பதிலுரையில், கௌரவ ஆசிரியராக கௌரவம் பெற்ற கவிதா லட்சுமி அவர்களின் படைப்புகளின் சிறப்பையும், அவரது தன்னடக்கம் பற்றியும், எடுத்துரைத்தார்.
அதனைத் தொடர்ந்த உரை நிகழ்வில், ஏலையா முருகதாசன், இந்து தெய்வேந்திரன், கரிணி கண்ணன் ஆகியோர் உரையாற்றினார். அடுத்து பெண்கள் தின நிகழ்ச்சியில்; விளையாட்டுக்கள்,நேரமிது நேரமிது -றாஜி,கண்டுபிடி கண்டுபிடி -பாத்திமா பஸ்லீனா,புதிர்கணக்கு – அன்னலஷ்மி, ஒரு சொல் ஒரு பாடல் – பிரியா, இசையால் வசமாகா இதயமெது – குமுதா, பாடும் பந்து – தயா, என இவர்கள் நிகழ்ச்சிகளை தந்தார்கள். சிற்றுண்டி, இராப்போசனம் என நிகழ்ச்சி ஒரு வித குடும்ப உணர்வை தந்த நிகழ்வாக அமைந்தது.
234 total views, 6 views today