கருபிக் கடலில் 14 நாட்கள் ஓரே மூச்சில் ஒன்பது தீவுகள்.

- மாதவி யேர்மனி
1980 களின் வாழ்வை வாழ்ந்து மகிழ்ந்தோம். கைதொலை பேசி கமராவானது. தொலைபேசி பேச மறுத்தது பேரின்பம் தந்தது. மீண்டும் மனிதரோடு நேருக்கு நேர் கதைக்கும் தருணம் ஆனந்தமானது. சூம் ணழழஅ களை சுட்டெரித்துவிட்டது வெய்யில்.(30 பாகை)
40 வருட நண்பர்களுடன் அமைந்த பயணம். அன்பு, அரவணைப்பு, விட்டுக்கொடுப்புகள், தேவை அறிந்து நடக்கும் பண்பு இப்படி பல ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுகொண்டு நடக்க, நட்பின் வலிமை மீள் உயிர்படைந்தது. எனக்கு பொதுவாக நேருக்கு நேர் பழகுவது பிடிக்கும், உலகை இணைக்கிறோம் என்று பக்கம் இருப்பவரை காணாது, கதைக்காது புறம் தள்ளுவதில் ஈடுபாடு குறைவு.
நாம் மட்டுமல்ல கப்பலில் வந்த பயணிகள் யாவரும் புத்தகம் படிப்பதும் கதைப்பதுமாகவே இருந்தார்கள். துறைமுகத்தில் கப்பல் நிற்கும்போது இலவச றுiகுi உள்ளது.இருந்தாலும் எவரும் பெரிதாக பாவித்தது கிடையாது. பிள்ளைகளை, பேரப்பிள்ளைகள், இவர்களை விட்டு வந்தாலும், அவர்களுடன் தொடர்பு மிக, மிக குறைவு. என்னை பொறுத்தவரை இல்லை என்றே கூறலாம். பிள்ளைகளை எமது றிமோட்டில் வைத்திருப்பது எவ்வளவு கொடுமை என உணர்ந்த தந்தை நான். (அம்மாமார் இதற்கு எப்பவும் விதிவிலக்கு உண்டு.) இந்த 14 நாட்களும் இன்ர நெற் இல்லாத ஒரு வகை விரதம் போல் இருந்தது. விரதம் பிடித்தால் சொர்க்ம் கிடைக்குமோ என்னமே! அந்த சொர்க்கத்தை நேரில் காணவைத்தது இந்த விரதம்.
அவர்களை அவர்களாக வாழ்விட, நாமும் பழக இந்த 14 நாட்கள் பேருதவி புரிந்தன. எமது பெற்றோர் எம்மைப்போல் பிள்ளைகளை ராச்சர் பண்ணியது கிடையாது. அப்போது எங்கு சென்றாலும் ஒரு pழளவ உயசன. தான் பதில்.நம்பிக்கையோடு வாழ்வை வாழ்ந்த காலம். இப்பொழுது அதே காலம் மீண்டும் தற்காலிகமாக என்றாலும், கிடைத்தது மகிழ்ச்சி.
கருபிக் கடலில் அமைந்துள்ள, ஒன்பது தீவுகளுக்கு Pரூழு ஊசுருஐளுநுளு டீசுஐவுயுNNஐயு. கப்பலில் 14 நாள் பயணத்தை மேற்கொண்டோம். இங்கிலாந்தில் இருந்து, பார்படோஸ் தீவுக்கு 9 மணிநேரத்தில் விமானம் மூலம் சென்றடைந்தோம். அங்கிருந்து துறைமுகம் சென்று கப்பல் ஏறினோம். 15 நாட்கள் இன்ரநேற் தொடர்பு இன்றி 1980 களின் வாழ்வை விருப்போடு. ஏற்படுத்திக்கொண்டோம்.
டீயசடியனழள. 27.01.2024
‘இது நல்ல விவசாய பூமி. தோட்டம் செய்ய இன்று இளையவல்களுக்கு அலுப்பு,’ இவ்வாறு எமது பயண வழிகாட்டியின் ஆதங்கத்துடன் ஆரம்பமானது எமது சுற்றுலா. இவ்வாறு முதல் தீவில் கால் பதித்தோம்.
பார்படோசு 15-ஆம் நூற்றாண்டின் பார்படோசு முதல் தடவையாக 1511 இல் எசுப்பானிய நிலவரை படத்தில் காட்டப்பட்டது.1532 முதல் 1536 வரை போர்த்துகல் பேரரசு இத்தீவுக்கு உரிமை கோரியது, ஆனாலும் 1620 இல் அதனைக் கைவிட்டது. ஒலிவ் புளொசம் என்ற ஆங்கிலேயக் கப்பல் இங்கு 1625 மே 14 இல் வந்திறங்கியது. அக்கப்பலில் வந்தவர்கள் இத்தீவை இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு மன்னருக்காக உரிமை கோரினர். 1627 இல், இங்கிலாந்தில் இருந்து முதலாவது நிரந்தரக் குடியேறிகள் இங்கு வந்தனர். அன்று முதல் இத்தீவு ஆங்கிலேயர் வசமானது. பின்னர் பிரித்தானியக் குடியேற்ற நாடானது. இக்காலகட்டத்தில், தீவின் தோட்டங்களில் பணிபுரிந்த ஆப்பிரிக்க அடிமைகளின் உழைப்பை நம்பி, இந்தக் குடியேற்ற நாடு ஒரு தோட்டப் பொருளாதாரத்தில் இயங்கியது. இத்தீவில் அடிமை வணிகம் 1807 இல் அடிமை வணிகச் சட்டத்தின் மூலம் தடைசெய்யப்படும் வரை தொடர்ந்தது. 1833 இல் அடிமை ஒழிப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அடுத்த ஐந்தாண்டு காலப்பகுதியில் பார்படோசில் அடிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு இறுதி விடுதலை கிடைத்தது.
எமது தாயகம் போன்று, ஈரப்பிலாக்காய், வாழைமரம்,வேப்பமரம், முருங்கை, தென்னை, கரும்பு,என நம்மூர் மரங்கள் பல உண்டு.கரும்பு ஏற்றுமதியாகிறது. விளையாட்டு, கிரிக்கெட், அவர்களுக்கு 2 வது சமயம் என்று டாக்ஸி சாரதி சொன்னது விளையாட்டுமீது அவர்கள் கொண்ட விருப்பக் காட்டியது. உல்லாச பயணிகள் வரவு, அவர்களுக்கு பெருவரவு. நட்புடன் பழகும் மக்கள் உலாசபயணிகளின் வரவை ஊக்கிவிக்கும்.
ஊருசுயுÇயுழு. துறைமுகம்,அடுக்கடுக்காக பல வீடுகள். வண்ண வண்ண வீடுகள்,ஒவ்வொரு வீட்டிற்கும் ஒவ்வொரு வண்ணம். அதுவும் அழகாகவே இருந்தது. கரீபியன் தீவுகளில் இங்குதான் அதி உயர் பாலம் ஒன்று உண்டு. சில வீடுகள் டச்சு பாணியில் அமைந்து இருந்தன. பிரதானமான பயிர்ச்செய்கையாக,வாசனை மசாலா, காணப்படுகின்றன. சந்தையில், பப்பாபழம், மாம்பழம், வாழைப்பழம் இவற்றைக்காண முடிந்தது.
30.01.2024 முசயடநனெதைம டீழயெசைந
அடிமைகள் இறங்கும் கடற்கரையில் கம்பனிகளின் நிறத்தில் வெள்ளை, நீலம், காவி என நிறங்களில் தூண்கள் இருக்கும். இங்கு உப்பு விழைகிறது. அடிமைகள் வாழ்ந்த வீடுகள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. ஒரு வீட்டில் 2 பேர்மட்டுமே இருக்கலாம். ஆனால் 7 பேர்வரை தங்கினார்கள். வீடுகளுக்கு கதவு மட்டுமே உண்டு யன்னல் ஏதும் இல்லை. இங்கு சகல மாணவர்களுக்கும், இலவசக்கல்வி. சீனாவின் ஆதிக்கம் பரவலாக எங்கும், உள்ளது. வருடம் 1000 குழந்தைகள் பிறக்கின்றன. பிறப்பு வீதம் அதிகரித்து உள்ளது.