படைப்புப் போய் “பண்ணுதலே” வந்துவிட்டது

பேராசிரியர்.சி.மௌனகுரு. இலங்கை.

சின்ன வயதிலேயே கல்கி ஆன ந்த விகடன் போன்ற. பத்திரி கைகள் தீபாவளி சிறப்பு மலர்களை வெளியிடு வதனைக் கண்டிருக்கிறேன்.. ஆவலோடு வாசித்தும் இருக்கிறேன். சின்ன வயதில். கண்ணைக் கவரும் படங்களோடு கவர்ச் சிகரமாக வெளி வரும் அந்த ஆண்டு மலர்களை எதிர்பார்த்து ஆவலோடு. காத்திருப் போம் வயது அப்படி.

மலர்களைப் புரட்டிப் புரட்டிப் பார்த்து மகிழ்வோம்

அதிலே சாதாரண எழுத்தா ளர்கள் பலர் முண்டி யடித்துக் கொண்டு தீபாவளிச் சிறுகதை கள் தீபா வளிக் கவிதைகள் எழுதியிருப்பார்க்ள். இது எழுதுவதற்கென்றே சில எழுத்தாளர்கள் இருப் பார்கள் காத்திரமான எழுத்தாளர்களும் விமர்சகர்களும் அவர்களைத் “தீபாவளிச் எழுத்தாளர்கள்” எனப். பகிடி பண்ணுவதும் உண்டு.
அப்படி எழுதும் கதைகள் ஒரு கலைப்படைப்பாக இல்லாமல் செயற்கையாக அமைவதுண்டு. இயல்பும் அதுவே காத்திரமான எழுத்தாளர்கள் செயற்கையாக ஒருபோதும் எழுதுவதில்லை காரணம் தீபாவளிக்கான கதை “பண்ண” அவர்களுக்கு தெரியாது’ அவர்களால் முடியாது காரணம் அவர்கள் கலைஞர்கள்

சிறந்த படைப்பு ஒன்றை உருவாக்குவது
ஒரு தவம்
ஒரு பெரு முயற்சி
ஒரு பெரும் உழைப்பு
பெரும் அர்ப்பணிப்பு
அது இடையறாது நடை பெற்றுக் கொண்டிருக்கும்
ஒரு செயல்பாடு

சில நாட்களுக்கு முன்னால் முகநூல் முழுவதையும் முற்றாக நிறைத்து கொண்டு இருந்த சிவ ராத்திரி நடன ஆயத் தங்களையும் தடல் புடல்களையும் காணுகின்ற பொழுது எனக்கு மிக அட்டகாசமாக ஆடம்பரமாக வெளிவரும் தீபாவளி மலர்களும், சித்திரை புத்தாண்டு மலர்களும், அதில் கதை பண்ணுகின்ற கதைஞர்களும் தான் ஞாபகம் வருகிறார்கள்

சாதாரண மனிதர்கள் மாத்திரமா? பெரியவர்கள் எனப் பேர் வாங்கியவர்களும் உயர் கல்வி நிறுவனங்களும் கூட.
இதைத் தானே செய்கின்றன.
எல்லாமே
விழாவாகவும்
வேடிக்கையாகவும்
விளம்பரமாகவும்
போட்டியாகவும்
ஆடம்பரமாகவும்
ஆகிவிட்டன

ஆத்மார்த்தம்
ஆழம்
கனதி
தரம்
எல்லாமே குறைந்து விட்டன
படைப்பு போய் “பண்ணுதலே” வந்துவிட்டது
விளம்பரமும்
தகதகப்பும்
ஆடம்பரமும்
பிர மிக்கவைக்கலாம்.

வெகுஜனங்களைக் கேளிக்கை மனமுடையோராய் உருவாக்கலாம் அவை சிறந்த சுவைஞர்களின்உள்ளத்தை தொடுமா?கலை அனுபவம் தருமா.? மனதைப் பரவசப்படுத்துமா? கலை ஒன்றிப்பை ஏற்படுத்துமா? ஒத்தோடுபவர்களே இன்று அதிகம்அதிகம். எதிர்த்த ஓடுபவருக்கு இது. சமர்ப்பணம்

595 total views, 2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *