ஒரு கிராமத்தின் மேம்பாட்டில் ஓர் ஆசிரியரின் பங்கு.

  • ரூபன் சிவராஜா நோர்வே

வே. இராமர் எழுதிய ‘எமது கிராமத்தின் வரலாறு’ – கைதடி, நாவற்குழி தெற்கு!
இந்நூல் நோர்வேயில் வசிக்கின்ற சமூக செயற்பாட்டாளரும் யாழ் இணைய நிறுவனருமான மோகன் இராமர் அவர்களின் தந்தை, வே. இராமர் வாத்தியார் தனது கிராமம் பற்றி எழுதிய நெடுங்கட்டுரையையும் அவரது சமூகப்பணிகள் குறித்து அவரை அறிந்த ஆளுமைகள் எழுதிய பதிவுகளையும் உள்ளடக்கியுள்ளது. கடந்த ஆண்டு அவர் காலமானார். அவரது முதலாம் ஆண்டு நிறைவில் நூலினை அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர்.

இராமு வாத்தியார் ஆசிரியராக, அதிபராக கல்விப் பங்களிப்பினை மட்டுமல்லாது, கைதடி நாவற்குழி தெற்கு கிராமத்தினை சமூக, பொருளாதார, கலை, பண்பாடு, மனித வள அபிவிருத்தி எனவாகப் பல தளங்களில் கட்டமைக்கவும் வளர்த்தெடுக்கவும் முன்னின்று உழைத்திருக்கின்றார்.

தன்னனுபவ எழுத்தாக இந்நூல் இரண்டு அம்சங்களைப் பதிவுசெய்கின்றது. அடிப்படை வசதிகள் குன்றியிருந்த ஒரு கிராமம் எவ்வாறு படிப்படியாக மேம்பாட்டை நோக்கி நகர்ந்தது என்பது முதலாவது. அதன் கிராம மேம்பாட்டில் இராமர் வாத்தியாரின் பங்களிப்பு உட்பட்ட ஏனைய சமூக செயற்பாட்டாளர்களின் பங்களிப்பினையும் பதிவுசெய்கின்றது. அதனூடாக ஒரு கிராமத்தின் வரலாற்றினை ஆவணப்படுத்துகின்றது. கிராமத்தில் நிலவிய சாதிய வேறுபாடுகள், ஏற்றத் தாழ்வுகளைக் களைவதற்கும் சமூகநீதி சார்ந்த நல்லிணக்கத்திற்கும் இராமர் வாத்தியார் செயற்பட்டுள்ளார் என்பது அவர் மீது எனக்குப் பெருமதிப்பினை ஏற்படுத்துகின்றது. இந்த இணைப்பு நூலுக்குரிய இணையத்தளம். பதிவுகளைத் தனித்தனியாகவும், மின்நூலாக (pனக) தரவிறக்கம் செய்தும் வாசிக்கலாம்:

hவவிள:ஃஃசயயஅர.எயயவாலையயச.டிடழபஃ

மோகன் அவர்கள் யாழ்.கொம் (லுயசட. உழஅ இணையத்தளத்தின் நிறுவனர். புலம்பெயர் தமிழ்ச் சூழலின் இணையத் தளங்களில் முன்னோடியானது அது. இன்றைய சமூக ஊடகங்களின் வருகைக்கு முந்தைய நிலையென இணையத் தளங்களின் ஊடான உhயவவiபெ எனப்படுகின்ற நிகழ்நேர உரையாடல், தகவற்பகிர்வுகளையும் கருத்தாடல்களையும் குறிப்பிடலாம். இணையவெளியில் புலம்பெயர் ஃ உலகத் தமிழர்களுக்கான கருத்துப்பகிர்வுத் தளமாகவும் யாழ் இணையம் 1998 களின் ஆரம்பத்திலிருந்து இருந்துள்ளது. ஆர்வமுள்ள எவரும் எழுதலாம், கருத்துகளைப் பகிரலாம் என்ற நிலைக்கு வித்திட்ட தளங்களில் யாழ் இணையத்தின் இடம் தனித்துவமானது. செய்திகள், தகவல்கள், கட்டுரைகள் ஆய்வுகள், கதைகள், கவிதைகள், பகிர்வுகள், ஓவியங்கள் எனப் பல்வகையான ஆக்கங்களுக்கான தளமாக விளங்குகின்றது.

புலம்பெயர் சூழலில் எழுத்தாளர்களாக உள்ள பலரின் ஆரம்பக் களமும் தளமுமாகவும் யாழ் இணையம் திகழ்ந்திருக்கின்றது. இணையத் தளங்கள் புற்றீசல் போல் உருவாகுவதும் சில காலங்களில் முகவரியே இல்லாமற் போவதும்தான் தமிழ்ச்சூழலில் அதிகம். ஆனால் இத்தனை ஆண்டுகள் அதனைத் தொடர்ச்சியாகவும் நேர்த்தியாகவும், கால மாற்றத்திற்கேற்ற மறுசீரமைப்புகளோடும் இயக்கி வருவதென்பது சாதாரண விடயமல்ல. இந்த ஆண்டு யாழ் இணையம் இருப்பத்தைந்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

592 total views, 2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *