கருபிக் கடலில் 14 நாட்கள் ஓரே மூச்சில் ஒன்பது தீவுகள்.

  • மாதவி யேர்மனி

1980 களின் வாழ்வை வாழ்ந்து மகிழ்ந்தோம். கைதொலை பேசி கமராவானது. தொலைபேசி பேச மறுத்தது பேரின்பம் தந்தது. மீண்டும் மனிதரோடு நேருக்கு நேர் கதைக்கும் தருணம் ஆனந்தமானது. சூம் ணழழஅ களை சுட்டெரித்துவிட்டது வெய்யில்.(30 பாகை) வெட்பம், நல்ல காற்று, தொலைபேசி அற்ற அற்புதமான 1980 களை நினைவூட்டின பலரது கைகளிலும் புத்தகங்கள் புத்துயிர் பெற்று இருந்தன. துறைமுகம் வரும் வரை காத்திருங்கள் அடுத்த இதழில் சந்திப்போம்.

01.02.2024. ளுவ. ஏinஉநவ
சும்மா நடந்து சுத்தினோம். முகுஊ பக்கத்தில் பல சேவல்களும், கோழிகழும் ஆர்ப்பாட்டம் செய்வதுபோல் கூவியவண்ணம் இருந்தது. தெருக்களில் பாட்டு கேட்டபடி மக்கள் நடமாட்டம். துறைமுகம் தாண்டி வெளியில் வந்தால் உல்லாச பயணிகளுக்கு வழிகாட்டி. தேவை இல்லை என்றால் நாகரிகமாக உங்கள் விடுமுறை இனிதாக அமையட்டும் என வாழ்த்தி அனுப்புவார்கள். இந்தப் பண்பு, எம்மைக் கவர்வதாக இருந்தது.

02.01.2024. புநுசுNயுனுயு
அழகான கடல் சுழ்ந்த தீவு. அன்பான உபசரிப்பு, வாசனைத் திரவியங்கள் சிறப்பாக உண்டு. 1974 ஆண்டு மாசி மாதம் 7ம் திகதி இங்கிலாந்திடம் இருத்து சுதந்திரம் பெற்றது. அதன் 50 வருட நிறைவை சிறப்பாக கொண்ட பல இடங்களிலும் கொடி பறக்கவிட்டு உள்ளனர். இளநீர் 2 டொலர். நல்ல வழுக்கை தேங்காய்.
அழகான வெள்ளை மணல் கடற்கரை. குளிக்க சிறப்பான இடம். ஒரு பழங்கால டச்சுக் கோட்டையும் உண்டு அங்கும் குறும்படம் எடுத்தோம்.கடல் டாக்ஸி இல் துறைமுகத்தில் இருந்து குளிக்கச் செல்லலாம். லுழரஉழடயவநசள எனப்படும் ஒரே ஒரு மரம் அந்த தீவில் காணப்பட்டது. இது நடப்பட்ட ஆண்டு. 1977.

ளுவு.டுருஊஐயு 03.02.2024.சனிக்கிழமை
இவர்களது பிரதான உணவு, வாழைப்பழம், வாழைக்காய், (ளழடவ களைஉh) மீன். 6 மாதம் சுற்றுலாப்பயணிகள், பின் தோட்டச்செய்கை. துறைமுகத்தில் இருந்து வெளிவரும் வழியில் முதலாவது ரவுண்டர் போட்டில் 4 பேர் வள்ளம் ஒன்றை வலிப்பது போல் ஒரு சிற்பம். வலிக்கும் சவள் நிலத்தில் தாங்கி நிற்க ஆட்கள் உயரத்தில் வள்ளம் செல்வது போல் அழகான சிற்பம். இது போன்ற சிற்பங்கள் ஏன் எமது தாயகத்தில், அந்த அந்த ஊர்களில், அல்லது பிரதேசங்களில், அங்கு வாழும் கலைகளை, தொழில்களை , முன்னிறுத்தி ஏன் இலைகள் அமைக்கப்படாது என்ற ஆதங்கம் மனதில் பிறந்தது.

வாகனச் சாரதிகள் வழிநெடுகிலும் காணும் தங்கள் நண்பர்களுக்கு, உரத்த குரலில் அவர்கள் பெயரைச் சொல்லி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி செல்வார்கள். சிறிய தீவு அதனால் மக்கள் எல்லோரும் ஒரு வரை ஒருவர் அறிந்தவர்களாக இருந்தார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் விலத்தும் போதும் மலர்ந்த முகத்தோடு முகம் காட்டுவார்கள். இது ஐரோப்பாவிலும் உண்டு, அங்கு பலர் அது ஓட்டமெற்றிக் புரோகிராம் போல் அச்செயலை நடக்கும். சரி ஐரோப்பாவை விடுங்கள். நம்மவர்கள் ஒருவரை ஒருவர் நேரில் கண்டால் யார், அவர் அந்தஸ்த்து என? பல பல விடயங்களை எமது ஓட்டமெற்றிக் புரோகிராம் ஆராய்ந்து அதன்பின்புதான் முகம் மலரும்.

இங்கு நாய்களுடன் செல்பவர்கள் அதிகம். மிருக வைத்தியசாலையும் அதிகம். ஏன் இப்போது எம்மவர் பலர் தங்கள் பிள்ளைகள் விருப்பத்திற்கு நல்ல உயர் சாதி நாய்களை வாங்கி வளர்க்கிறார்கள், பல பிள்ளைகள் பேரப்பிள்ளைகளை , பெற்றோருக்கு தராமல் நாய்களை கொடுத்தும் விடுகிறார்கள். அது கட்டில் சோபா என எங்கும் துள்ளிவிளையாடும். அதற்கு பிறந்தநாள் கொண்டாட்டம், மரணச் சடங்கு என பல அரங்கேறுகிறது. பிறந்த நாளின் போது தாய்மண்ணில் வாழும் மக்களுக்கு உதவுவதுபோல நாய்களின் பிறந்தநாளின் போது அங்கு வாழும் ஊர் நாய்களுக்கும் உதவலாம். சிவபூமி ஆறு.திருமுருகன் நாய்கள் சரனாலயத்தையும் நடத்துகிறார். நினைவில் வைத்திருக்க வேண்டிய ஒன்று.

ளுயiவெ. முவைவள. 05.02.2024
காட்டுக்குள் உள்ள ஒவ்வொரு மரமும் மருத்துவகுணம் உடையவை. பாடசாலை பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சி ததும்பும் முகங்கள். கரும்பு, மாமரம், முருக்கங்காய், பப்பாமரம் என நமக்கு பரீட்சையமான பல மரங்கள் காணக்கூடியதாக இருந்தது. 2023 ஆண்டு 50 வருட சுதந்திர தினம் கொண்டாடி இருந்தார்கள். கரீபியன் தீவுகளில் மிகச் சிறியது. சீனர்களின் வியாபாரம், ஓங்கி உள்ள தீவு. துறைமுகம் சூழலில் இந்திய வணிகம் நடைபெறுகிறது.

யுNவுஐஞருநு. 06.01.2024
வருடத்தில் 10 பேர்தான் சிறைக்கு செல்கிறார்கள், வழமையாக 6 பேர் வரைதான் செல்வார்கள். சிறையில் ரி.வி இல்லை, பொழுதுபோக்கு இல்லை, அதனால் சிறையை விரும்ப மாட்டார்கள். அங்கு செல்வதும் குறைவு. வேலை க்கு மணித்தியாலம், சராசரி 4 டொலர் ஊதியம் பெறுகிறார்கள். கரேபியன் டொலர் 100 என ஒரு பொருளுக்கு போட்டு இருந்தால் உல்லாசப் பயணிகள் அமெரிக்கன் டொலர் 100 கொடுத்து வேண்டுபவரும் உண்டு. பல வணிகர்கள் உடன் திருப்பி கொடுப்பவர்களும் உண்டு.

ளுவ. ஆயசவin 01.02.2024
142 நாட்டவர்கள் இந்த நாட்டில் வாழ்கிறார்கள். டொச், பிரஞ் என இரு பிரிவுகளாக ஆள்கிறார்கள். பிரான்ஸ் பகுதியில் வாழ்பவர்கள் பிரான்ஸ் நாட்டுக்கு உரிய சலுகைகள் யாவும் பெறுகின்றனர். டெச் பகுதியில் வாழ்பவர்களுக்கு அவர்களை விட குறைவான சலுகைகள் கிடைக்கின்றன. இதனால் தனி நாடக இருக்கவேண்டும் என இளைஞர்கள் விரும்புகிறார்கள்.

பிரான்ஸ் பக்கம் பூவரசு. மரங்கள் எமது தாயகத்தில் வேலியாக இருப்பதுபோல் உள்ளன. முருங்கை மரங்கள் அதிகம் உண்டு. அதன் காய்களை நாம் பாவிப்பதுபோல் அன்றி அவித்து குடிப்பதாகவும், அதன் விதையை அவித்து சலாட் போடுவதாகவும் கூறுகின்றனர். கடல் ஓரம் பிக்கினி பீச். இங்கு அரை நிர்வாண குளியல் இடம் பெறுகிறது. அங்கு செல்பவர்கள் படம் எடுக்கமுடிடியாது. அதுமட்டுமல்ல, கடற்கரைக்குள் செல்பவர்களும் அவர்கள் போல் நிர்வாண நிலையில் மட்டுமே செல்ல முடியும். அடிப்படை கொள்கை உடன்பாடு அதுவாக இருக்குமோ. இப்படியான கடற்கரைகள் ஐரோப்பாவிலும் உண்டு. சீpனர்கள் இங்கும் ஆழமாக வேர் ஊன்றி உள்ளனர்.சின்னச் தீவுகள் சுதந்திரம் பெற்ற நாடாக உள்ளன. மீன்பிடித்தொழிலும், விவசாயமும் மட்டுமே உண்டு. ஏன் எமது இலங்கை தீவு இப்படி உள்ளது என்ற கேள்வி எழாமல் இல்லை. இந்த ஒப்பீடு எப்போது எம்மோடு என்றும் உள்ளது அல்லவா.

470 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *