ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளர்
– ஜூட் பிரகாஷ் – மெல்பேர்ண்
“துன் தெனெக் வாடிவென்ன சீட்டெக்கே, ஹதர தெனெக்ட வாடிவென புளுவன் நங், ஐ பஸ் தெனெகுட வாடி வென்ட பரி?” (“மூன்று பேர் இருக்க கூடிய ஆசனத்தில், நாலு பேர் இருக்கக் முடியும் என்றால், ஏன் ஜந்து பேர் இருக்க முடியாது”)
ஊஐஆயு படித்துக் கொண்டிருந்த காலங்களில், 1994 ஆம் ஆண்டு ஜூலை மாதம், கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கிப் புறப்படத் தயாரான இரவு ரயிலில், ஒரு சிங்கள மனிசியைப் பார்த்து நண்பர் தவத்தார் கேட்ட கேள்வியை எப்பவும் மறக்கேலாது.
வடக்கு கிழக்கில் நடந்து கொண்டிருந்த யுத்தத்தின் அதிர்வுகள், கொழும்பில் எதிரொலித்துக் கொண்டிருந்த பயங்கரமான அந்த நாட்களில், தவத்தார் தன்னுடைய வாழ்க்கையையும் எங்கள் வாழ்க்கைகளுயும், ஒரு ரயில் ஆசனத்துக்காக அந்தப் ரயில் பயணத்தில் பணயம் வைத்துக் கொண்டிருந்தார்.
பயணிகளால் நிரம்பி வழிந்து கொண்டிருந்த அந்த ரயிலில், மூவர் அமரக் கூடிய அந்த ஆசனத்தில், இரு ஆசனங்களில் ஒரு சிங்களத் தாயும் மகளும் அமர்ந்திருக்க, மூன்றாவது ஆசனத்தில் நண்பன் ராஜனை செருகி இருந்தோம். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு, அந்த சிங்களத் தாய், தனது இரண்டாவது மகளையும் அதே ஆசனத்தில் அமர வைக்க, இப்போ மூவர் இருக்கும் சீட்டில் நாலு பேர் அமர்ந்திருக்கிறார்கள்.
தமிழர் தாயகத்தில் நடக்கும் சிங்களக் குடியேற்றங்கள் போல், நாங்கள் பிடித்திருந்த ஓரு சீட்டும் பறி போய்க் கொண்டிருந்ததைப் பார்த்து துணுக்குற்ற தவத்தார், ராஜனை கொஞ்சம் தள்ளி இருக்கச் சொல்லி விட்டு, அதே ஆசனத்தில் ஐந்தாவதாக தானும் நெருக்கி அமர வெளிக்கிட, பிரச்சினை வெடித்து சிங்களச் சனம் குழம்பீட்டுது.
தவத்தாருக்கு எங்கிருந்தோ வந்த வீரத்தில், சற்றும் சளைத்துப் பின்வாங்காமல், “துன் தெனக் வாடிவென்ன சீட்டெக்கே, ஹதர தென்னக்ட வாடி வென்ட புளுவன் நங், ஐ பஸ் தெனக்குட்ட வாடி வென்ட பரி (மூன்று பேர் இருக்க கூடிய ஆசனத்தில் நாலு பேர் இருக்க முடியும் என்றால், ஏன் ஜந்து பேர் இருக்க முடியாது”) என்று தன்னுடைய யாழ்ப்பாணத்தான் சிங்களத்தில் அடித்துவிட, பெரிய களேபரமாகி, பக்கத்து உழஅpயசவஅநவெ இல் பயணித்த ஆமிக்காரன்கள் முன்னேறி வந்து தவத்தாரை பின்வாங்க வைத்தார்கள்.
வரப் போகும் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவதால் நாங்கள் என்னென்ன நன்மைகள் அடையலாம் என்ற நன்மைகளின் பட்டியலைப் பார்க்க, வாசிக்க, இந்த “துன்தெனக் வாடிவென சீட்டெக்கே..” கதை தான் ஞாபகம் வந்தது.
தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதால் பெற்றுக் கொள்ளக்கூடிய நன்மைகள் என்னவென்றாலாம்;
- தமிழ் மக்களின் பிரச்சினைகளை வெளிக் கொண்டுவருவார்.
- தமிழ் மக்களின் ஐக்கியத்தை நிலை நிறுத்துவார்.
- சிங்கள மக்களுடன் பேசி தமிழ் மக்களுக்கு எதிராக இருக்கும் மயக்கங்களை தீர்ப்பார்.
- வெளிநாட்டு அரசுகளிற்கு எங்களுடைய பிரச்சினைகளை எடுத்துக் கூறுவார்.
ஒரு ஜனாதிபதி வேட்பாளரின் ஆயுட்காலம், தேர்தலுக்கான பரப்புரை நடக்கும் மூன்றோ நாலு மாத காலம் மட்டுமே. தேர்தல் பரப்புரை முடிந்து அவர் தேர்தலில் தோற்றாப் பிறகு, அவரை யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். தேர்தல் பரப்புரைக் காலத்திலேயே வெற்றி பெற வாய்ப்புள்ள வேட்பாளர்களை விட மிச்ச வேட்பாளர்கள் எல்லாம் காமெடி பீஸ{கள் தான்.
சரி, அது எல்லாவற்றையும் விட்டாலும், அந்தக் குறுகிய காலத்தில், இந்த நான்கு விடயங்களையும் ஒரு தமிழ் வேட்பாளாரால் செய்ய முடியும் என்றால், நான்கு வருடங்களாக பா.உ ஆக இருக்கும் ஓருவரால், ஐந்து வருடங்களாக முதலமைச்சராக இருந்த ஒருவரால் ஏன் இவை எல்லாவற்றையும் செய்ய முடியாமல் போனது?
தவத்தார் கேட்ட மாதிரி..
“துன் தெனெக் வாடிவென்ன சீட்டெக்கே, ஹதர தெனெக்ட வாடிவென புளுவன் நங், ஐ பஸ் தெனெகுட வாடி வென்ட பரி?” (“மூன்று பேர் இருக்கக் கூடிய ஆசனத்தில் நாலு பேர் இருக்க முடியும் என்றால், ஏன் ஜந்து பேர் இருக்க முடியாது”) கேட்கிறவன் தமிழன் என்றால்.. யாரும் என்னத்தையும் அடித்து விடலாம் என்ற நிலைமையில் தான் எங்கட சீத்துவம் வந்து நிற்குது.
461 total views, 3 views today