நேற்று, இன்று, நாளை — காலப் பயணம் செய்வோமா?
விண்வெளி வீரர்கள் உயர்ந்த வேகத்தில் பயணிக்கும் போது,
நிலத்தில் இருப்பவர்களை விட மெதுவாக வயதாகின்றனர்.
Dr.நிரோஷன் தில்லைநாதன் (யேர்மனி)
ஒரு நவீன இயந்திரத்தில் நீங்கள் நுழைந்து, சில பொத்தான்களை அழுத்துகிறீர்கள் என்று எண்ணுவோம். இதைத் தொடர்ந்து அடுத்த நொடியில் நீங்கள் இராஜராஜ சோழனை அல்லது ஆல்பர்ட் ஐன்ஸ்டீனைச் சந்தித்தால் எப்படி இருக்கும்? ஹாலிவுட் பெரும்பாலும் காலப் பயணத்தை உடனடித் திடீர் நிகழ்வாகவே காட்டினாலும், அதன் பின்னணியில் இருக்கும் இயற்பியல் அறிவியல் மிகவும் சிக்கலானது, ஆனால் அதே நேரத்தில் மிகவும் சுவாரசியமானதாகும். எனவே நம்மால் நேரத்தின் பயணிகள் ஆக முடியும் என்ற சாத்தியக்கூறுகளைப் பற்றி அறிவோமா?
உங்களுக்கு ஒன்று தெரியுமா? நீங்கள் ஏற்கனவே ஒரு காலப் பயணியாகத் தான் இருக்கிறீர்கள். ஒவ்வொரு விநாடியும் சரியாக ஒரு விநாடி எதிர்காலத்தை நோக்கிச் செல்கின்றீர்கள். அது கண்டிப்பாக மறுக்கமுடியாத ஒரு உண்மை ஆகும். இதை விட சில மெய்சிலிர்க்கவைக்கும் அறிவியல் கொள்கைகள், காலத்தின் ஓட்டம் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது என்பதையும், அது மாறலாம் என்பதையும் காட்டுகின்றன. உதாரணத்திற்கு இதைப் பாருங்கள்: ஒரு விண்வெளி வீரர் கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் தொலைவிலிருக்கும் ஒரு நட்சத்திரத்திற்குப் பயணித்து பூமிக்குத் திரும்புகிறார் என்று எடுத்துக்கொள்வோம். ஏறத்தாள ஒளியின் வேகத்தில் பயணித்த அந்த விண்வெளி வீரர் ஒரு சில ஆண்டுகள் மட்டுமே வயதானாலும், பூமியில் பல பத்தாண்டுகள் கடந்திருக்கலாம். இது அறிவியல் புனைகதை அல்ல, இது முற்றிலும் இயற்பியலாகும். உண்மையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில், பூமியைச் சுற்றி, விண்வெளி வீரர்கள் உயர்ந்த வேகத்தில் பயணிக்கும் போது, நிலத்தில் இருப்பவர்களை விட மெதுவாக வயதாகின்றனர்.
சரி எதிர்காலத்துக்குப் பயணிப்பதற்கு மிகவும் வேகமாகச் சென்றால் போதும், பயணித்துவிடலாம், இனி கடந்த காலத்தை எவ்வாறு அடையலாம் என்று ஆராய்வோம். என்ன தான் எதிர்கால பயணம் சாத்தியமாய் தெரிந்தாலும், கடந்த காலத்திற்குப் பயணிப்பது மிகவும் சிக்கலானது. இதற்கு நேரச் சுழற்சி (Time Loop) என்று கூறப்படும் ஒரு வழிமுறையை உபயோகிக்கவேண்டும். நேரச் சுழற்சியின் உதவியுடன் நீங்கள் காலத்தில் பின்னோக்கிச் செல்லலாம் என்று கூறப்படுகிறது. இந்த யோசனை கற்பனைக்கு அப்பாற்பட்டது. இவ்வாறான ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்குக் கூட நம்மிடம் தகுந்த கருவிகள் இல்லை.
இந்த நேரச் சுழற்சிகளை ஆராய்ந்த அறிவியலாளர்கள், நேரத்தின் பாதைகள் குறித்து சுவாரசியமான கேள்விகளை எழுப்பியுள்ளனர். உதாரணத்திற்கு நீங்கள் இறந்த காலத்திற்குச் சென்று உங்கள் பாட்டனார் உங்கள் பாட்டியைச் சந்திப்பதைத் தடை செய்துவிடுகின்றீர்கள் என்று எடுத்துக்கொள்வோம். அவ்வாறு நடந்தால், நீங்கள் பிறக்க முடியாது. நீங்கள் பிறக்கவில்லை என்றால், நீங்கள் எவ்வாறு இறந்தகாலத்திற்குச் சென்று உங்கள் பாட்டனார் உங்கள் பாட்டியைச் சந்திப்பதைத் தடை செய்ய முடியும்? இந்த சிக்கல்கள், கடந்த காலத்திற்குப் பயணிப்பது எவ்வளவு சிக்கலானது என்பதை விளக்குகின்றன.
இருந்தும் காலப் பயணத்தின் கோட்பாடுகள் சாத்தியமா என்பதை ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆராய்கின்றனர். சமீபத்திய வாதம் என்னவென்றால், காலப் பயணம் மேற்கூறிய சிக்கல்களை அடக்காமல், சாத்தியமானது என்பதே ஆகும். பயனுள்ளதாகக் காலப் பயணம் எட்டாத நிலையிலிருக்கும் போது, அறிவியல் கோட்பாடுகள் மற்றும் ஆராய்ச்சிகள் காலப் பயணத்தைப் பற்றிய மிகச் சுவாரசியமான கண்டுபிடிப்புகளை வெளிகொண்டுவரும் என்பதில் சந்தேகமில்லை. காலப் பயணத்தை எட்டுவதற்கான பயணம் சிக்கல்களாலும், அசாதாரண பொருள்களாலும், மைல் கடந்து வரும் தொழில்நுட்ப முன்னேற்றங்களாலும் நிறைந்துள்ளது. நாமே காலப் பயணிகள், ஒவ்வொரு விநாடியும் ஒரு விநாடி முன்னே சென்று, நூற்றாண்டுகளைக் கடந்து செல்கின்றோம்.
ஒரு நாள், யாராவது ஒரு கருவியிலிருந்து வெளியே வந்து எதிர்காலத்தை அல்லது கடந்த காலத்தைப் பற்றிக் கூறக்கூடும். ஆனால், அதுவரை, காலப் பயணம் பற்றி ஆராய்ந்தாலும், அது எங்கள் மனதைக் கவர்ந்துகொண்டு, அறிவியலும் கற்பனையும் தாண்டிய கணங்களைத் தருகிறது. நாம் காலப் பயணம் செய்யும் நாள், நமக்கு அருகில் தான் இருக்கிறதோ யாருக்குத் தெரியும்?
இலங்கையில் சிறப்பாக நடைபெற்ற
‘யாழ்பாடி யாழ்பாணம்’ இசை வெளியீட்டு விழா.
இசை,வரிகள், பாடியவர்: ஈழத்து மெல்லிசை மன்னர் ஆ.P.Pயசயஅநளா பின்னனி இசை ஒருங்கமைப்பு: பிரபாலினி பிரபாகரன்.இலங்கையில் 1968-களின் பிரபலமான பாடகர், கவிஞர், இசையமைப்பாளர் ஈழத்து மெல்லிசை மன்னர் எம்.பி.பரமேஷ் அவர்களின் முத்தான மூன்று பாடல்கள் இலங்கையின் பெருமை, வரலாற்று நிகழ்வு மற்றும் சரித்திர சாட்சிகளை கவிதையாக எழுதி, இசை வடிவம் கொடுத்து, பாடிய இனிய பாடல்கள்.
அந்த பாடல்களுக்கு இசை ஒருங்கிணைப்பு செய்த அவரது தவப்புல்வி ஈழத்து மெல்லிசை குயின் பிரபாலினி பிரபாகரன் இந்த பாடலை தயாரித்து இயக்கி உள்ளார். தனது தந்தையின் கனவை நிறைவேற்றும் விதமாக மே மாதம் 27ம் தேதி கொழும்பு வெள்ளவத்தை புளூ சபையர் அரங்கில் அரசியல் பிரமுகர்கள், அமைச்சர்கள், ஊடகவியளார்கள் மற்றும் சமகால பாடகர்கள் முன்னிலையில் இசை வெளியீட்டு விழா நடந்தது. அந்த பாடலை ஞருநுநுN ஊழுடீசுயு என்ற வலைதளத்தில் பார்த்து ரசிக்கலாம்.
யாழ்பாடி யாழ்பாணம்…பெயர் கொண்டது… என்ற பாடல் தழிழர்களின் அதிகம் வாழும் என்பதை நயமாக அங்கு அருள்பாலிக்கும் நல்லூர் கந்தசாமி கோவிலையும், யோகர் சுவாமிகளின் மகிமைகளையும், புலவர்கள் பெருமக்களைப் பற்றியும், ஆண்ட மன்னர்களைப் பற்றியும், கீரி மலை தீர்த்த கேணியும், பாரிவன சிவனையும், வள்ளிபுர ஆழ்வாரையும், மாவிட்டபுரம் செல்ல சன்னதி, வற்றா கிணறு நிலாவரை, திருநெல்வேலி விவசாயப் பண்ணை… இன்னும் யாழ்பணத்தின் சிறப்புகளை ஆழமாய் சொன்ன பாடல். மிஞ்சி இருக்கும் இலங்கை மக்களின் மனதுக்கு ஆறுதலாய், அற்புதமான பாடலை; கண்டு மகிழுங்கள்… இந்த பாடல்கள் தமிழ்நாடு மற்றும் இலங்கை தொழில்நுட்ப கலைஞர்களின் உதவியுடன் இலங்கையில் படமாக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
292 total views, 6 views today