துட்டுக்கு ரெண்டு கொட்டைப் பாக்கு

னுச. வு. கோபிசங்கர்- (யாழ்ப்பாணம்)

இப்பிடித்தான் London போய் ஆறு மாசத்தில, “டேய், கார் வாங்கீட்டாய் தானே,சனி ஞாயிறு வேலை இல்லாட்டி வீட்ட வா” எண்டு சஞ்சீவ் சொல்ல , சரி எண்டு சொல்லீட்டு காஞ்சு போன வாய்க்கு வீட்டுச் சாப்பாட்டு கிடைக்கிற அவாவில வெள்ளிக்கிழமை வெளிக்கிட்டு எப்பிடி வாறது எண்டு வழி கேட்டால், உப்பிடியே Gantshill roundabout ஆல நேர வந்து யு 406 எடுத்து அடுத்த roundabout இல மூண்டாவது நஒவை எடுத்து அப்பிடியே north circular ஆல வந்து பிறகு அடுத்த roundabout ஐஞ்சாவது exit ஆல வெளீல வந்து எண்டு சொல்ல, ஊரில இருக்கிற சந்தி மாதிரி இருக்கும் எண்டு நெச்சு இருக்கிற roundabout பேரை எல்லாம் பாடமாக்கீட்டு, வடிவா விளங்காட்டியும் ஆரையும் கேட்டாவதூ போகலாம் எண்டு நெச்சபடிக் காரை எடுத்துக் கொண்டு வெளிக்கிட்டன். முதலாவது roundabout இலயே exit எடுக்கத் தெரியாமல் சுத்துசுத்தெண்டு சுத்தீட்டு வழி கேக்க வழி ஒண்டுமில்லாமல் தட்டுத் தடுமாறித் திரும்ப, சந்தேகத்தில மறிச்ச பொலிஸ்காரனுக்கு விளக்கம் குடுத்திட்டு அவன்டையும் வழி கேட்டாப் பாவம் அவனுக்கும் சொல்லத் தெரியேல்லை, Mapஐப் பாத்துக்கொண்டு போகச் சொன்னான். திருப்பி வீட்டை வந்து காரை விட்டிட்டு வரடிந எடுத்து harrowக்குப் போனன்.

அப்ப தான் ஊரின்டை அருமை விளங்கிச்சுது ஒரு நாளும் போகாத ஊருக்கு கூட “அண்ணை அராலிக்கு எப்பிடிப் போறதெண்டு” townல கேட்டால் சந்திக்குச் சந்தி ஒருத்தன் எங்களுக்கெண்டே நிப்பான் வழி சொல்ல. “சத்திரத்துச் சந்தியால நேர போய் அப்பிடியே மனோகராச் சந்தியால திரும்பிப் போனா வாற ஐஞ்சு சந்தியால வலது பக்கம் திரும்பி ஓட்டுமடச்சந்தியால இடது பக்கம் திரும்பி நேர போங்கோ”எண்டு நயளலயாய் சொல்லுவாங்கள். இல்லாட் டியும் இதுக்கெண்டே ஒவ்வொரு சந்தி வழியவும் சாரத்தோட பேப்பர் வாசிச்சுக்கொண்டு ஆராவது இருப்பினம், வழி கேட்டுக் கேட்டுப் போக. அதோட ஊருக்க போய் ஆரின்டையும் பேரைச் சொல்லிக் கேட்டால் வீட்டடீல கூட்டிக்கொண்டு போய் விட்டிட்டு வீட்டுக்காரரை கூப்பிட்டும் விடுவினம். ஊருக்க போய் வீட்டைக் கண்டு பிடிச்சு வாசலில நிண்டு பேரைக் கூப்பிடவும் முறை இருக்கு.

பொதுவா ஆச்சி, அப்பு, ஐயா எண்டு கூப்பிடிறது, இல்லாட்டிச் சொந்தம் எண்டா முறையைச் சொல்லிக் கூப்பிடலாம். மனிசிமார் புருசன்டை பேரைச் சொல்லாத மாதிரித தான் வீடு வழிய போய் பேரை நேர சொல்லிக் கூப்பிடீறதோ இல்லாட்டி சபை சந்தீல கதைக்கேக்கயோ பேரைச் சொல்லுறதோ குறைவு. வீட்டுக்கும் , ரோட்டுக்கு ஒரு அடையாளம் மாதிரி ஊருக்க இருக்கிற ஆக்களுக்கும் பேரோட ஒரு அடைமொழி அடையாளமாய் இருக்கும்.

அப்ப பேருக்குப் பஞ்சம் எண்டதாலயோ இல்லாட்டி Numerology தெரியாததாலயோ ஊர் வழிய ஓரே பேரில கன பேர் இருப்பினம். அதோட வயசுக்கு மூத்த ஆக்களுக்குப் பேரைச்சொல்லிக் கூப்பிடிறது சரியில்லை எண்டு ஒரு மரியாதைக்கும் தான் இப்படி அடைமொழியோட கூப்பிடுறது எண்டு நெக்கிறன்.

அடைமொழிக்கு வைக்கிற பேர் அநேமா அவரின்டை வேலை சார்ந்ததா இருக்கும். புரோக்கர் பொன்னம்பலம், பரியாரி பரமசிவம், கிளாக்கர் கனகசபை, CTB சிவலிங்கண்ணை எண்டு தொழிலோட பேர் இருக்கும். பிசினஸ் செய்யிற எல்லாருக்கும் ஒரே வேலை எண்டதால வேலைக்குப் பதிலா அவை வேலை செய்யிற இடங்களைச் சேத்துச் சொல்லிறதும் இருந்தது. இது அநேமா சிங்கள ஊரா இருக்கும். காரைநகர் பக்கம் தான் சிங்கள ஊர் அடைமொழி கனக்கப்பேருக்கு இருந்தது. வெலிகம பொன்னம்பலம், தங்கொட்டுவ தணிகாசலம், களுத்துறை கனகலிங்கம் எண்டு ஒரு கேள்விப்படாத ஊரில போய் வியாபரம் தொடங்கி ,நளவயடிடiளா பண்ணி அந்த ஊர் பேரை ஒட்டிக் கொண்டு வந்து பேரையும் பிறந்த ஊரையும் பெருமைப்படுத்தின கன பேர் இருந்தவை.

என்டை மச்சான் ஒருத்தனைப் பள்ளிக்கூடத்தில அப்பப்பான்டை பேர் என்ன எண்டு கேக்க PM எண்டு சொல்லி இருக்கிறான், குழம்பிப்போன ரீச்சர் திருப்பி விசாரிக்க, “ ஓம் வீட்டை வாறவை எல்லாம் PM நிக்கிறாரோ எண்டு தான் கேக்கிறவை” எண்டு சொல்லத்தான் ரீச்சருக்கு விளங்கிச்சுது Post Master தான் PMஆனவர் எண்டு. ஓவசியர், Chairman Sm( station master ) எண்டு தொழிலே பேராகி பேர் மறக்கப்பட்ட ஆக்களும் இருந்தவை.

பெருமைக்கு ஊரைச்சேக்கிற ஆக்களும், ஊருக்கு பெருமை சேக்கிற ஆக்களும் எண்டு ரெண்டு பேரும் பேரோட ஊரைச் சேப்பினம்.

ஊரில தன்னைத் தானே பெருமையா நினைக்கிறது St Johns கொலிஜ் காரருக்கு மட்டும் இல்லை முழு யாழ்ப்பணத்தானுக்கும் இருந்தது.“ பருத்தித்துறை ஊராம் பவளக்ககொடி பேராம்” எண்டு பாடின கல்லடி வேலுப் பிள்ளையார்,ஆடிப்பிறப்பிக்கு பாடின நவாலியூர் சோமசுந்தரப்புலவர் எண்டு,கவிஞனும் சரி கவிதையும் சரி ஊர்ப் பேரோட தான் இருந்தது.

ரோடுகளுக்கு ஆக்களின்டே பேர் இருந்தாலும் ஊர் வழிய சந்திக்கு ஆக்களின்டை பேர் வைக்கிறேல்லை. பெரிய சந்திகள் ஊரின்டை பேரிலேம் மற்றச் சின்னன்களுக்கு மரத்தின்டை பேரோட புளியடி, இலுப்பையடி இல்லாட்டி ஒரு கட்டிடம் இருந்தா அந்தப் பேரோட மடத்தடி, கச்சேரியடி, மனோகராத் தியட்டரடி எண்டோ இல்லாட்டி குளத்தையோ, கோயிலையோஅதில இருக்கிற வைரவரையோ, பிள்ளையாரையோ, மாதா கோவிலையோ சேத்துத் தான் பேர் வைக்கிறது.

எங்கடை ஒரு ஊரில ஒரு சந்தி இல்லை ஒராயிரம் சந்தி. ஐஞ்சு சந்தி, நாச்சந்தி , முச்சந்தி, கெற்றப்போல் சந்தி எண்டு ஒவ்வொரு சந்திக்கெண்டு ஒரு காரணப் பேரும், இடுகுறிப் பேரும் அதுக்கெண்டு ஒரு சிறப்பும் இருக்கும். அதோட எங்கேயும் சண்டை நடக்கேக்கயும் சொல்லுவாங்கள் இது ஆரியகுளம் சந்தி குறூப் , கொட்டடிச் சந்தி குறூப், கொய்யாத்தோட்ட குறூப், ஐயனார் கோவிலடி குறூப், இது பிரவுண் ரோட் குறூப் எண்டு.

பஸ்ஸில போகேக்க பெரும்பாலும் சந்தீன்டை பேரைச் சொல்லித் தான் இறங்கிறது. ஊருக்குள்ள நிறையச் சந்தி இருந்தாலும் Main Bus route இல ஊரின்டை பேரோட ஒரு சந்தி இருக்கும். கொக்குவில், கோண்டாவில், இணுவில், உடுவில் எண்டு வாறது வழறnஇல இருந்து போகேக்க ஊர் தொடங்கிற சந்தியா இருக்கும்.

townக்கு போற பஸ் எல்லாம் KKS ரோட்டாலேம், பருத்தித்துறை ரோட்டாலேம் யு 9 ஆல வந்து ஆஸ்பத்திரீ ரோட்டாலேம் வர ஒரு பஸ் மட்டும் இந்த சந்தியால போறது, அது காரை நகரில இருந்து வாற 782 பஸ். ஸ்ரான்லி றோட்டால வந்து வெலிங்டன் சந்தீல திரும்பி Town க்கு போகும். அதே போல மணிக்கூட்டுக் கோபுரத்தில இருந்து வாற றோட் தான் மணிக்கூட்டு கோபுர வீதி. அது முந்தி ஆசுபத்திரிக்கு குறுக்கால வந்து , ஸ்ரான்லி ரோட், நாவலர் ரோட் எல்லாம் தாண்டி பிறவுண் ரோட் வரைக்கும் வந்ததாம் . முந்தி இருந்த GA Lionel Fernando தான் குறுக்கால ஆசுபத்திரி கட்ட விட்டவர் அதின்டை எச்சம் தான் இப்ப இருக்கிற மணிக்கூட்டு ஒழுங்கை. அதே போல சந்திக்கும் பழைய பேர் ஏதும் இருந்திச்சுதோ தெரியாது இப்ப அதுக்குப் பேர் வெலிங்டன் சந்தி.

Townமாதிரி பழைய வெலிங்டன் சந்தீன்டை நாலு மூலையிலும் கட்டடங்கள். வெலிங்டன் தியட்டர் ஒரு மூலை, முனீஸ்வரா கபேயும் கடைச்சல் பட்டறையும் மற்ற மூலை,லிங்கம் கிறீம் கவுஸ் தெற்கை பாத்த வாசலோட, பிளவுஸில மட்டும் விட்ட அம்பை பெடியளின்டை காச்சட்டை பொக்கற்றிலும் விட்ட விக்ரம் டெயிலேர்ஸ் அதுக்குப் பக்கத்தில,எதிர கண்ணாடி விக்கிற S.M.fernando , அதையும் தாண்டிப் போக வுழறநச கூல் பார் எண்டு இருந்தது.

85 ஃ86 கோட்டையில இருந்து செல்லுகளும் பொம்பரும் நியூ மாக்கட்டையே இல்லாமல் பண்ண, செல்லுக்கெட்டிய தூரம் தாண்டி சனங்கள் பிழங்கத்தொடங்கேக்க தான் இந்த மாற்றம் வந்தது. வருசம் பதினாறு குஸ்புவைப் பாக்க கள்ளமா ஒதுங்கின அதே வெலிங்டன் தியட்டர்ச் சந்தி. தொண்ணூறில CCA, science hall> science academy , new- master எண்டு கல்விச் சந்தியாகி மாறினதும் இதே சந்தி தான். மனிசிக்குப் பின்னால திரியேக்க வெலிங்டன் சந்தீல “அவள் வருவாளா” எண்டு பாத்து கொண்டிருந்தது லிங்கம் கடை மூலையில.தொண்ணூறுகளில யாழ்ப்பாணத்தின் tuition கொட்டில் எல்லாம் இருந்தது இந்த சந்தி தான். இதைப் போல ஒவ்வொரு சந்திக்கும் ஓராயிரம் கதை இருக்கும். அது ரோட் சந்திக்கிறதால மட்டுமில்லை ஆக்களும் சந்திக்கிறதால தான் சந்தி எண்டு எழுவாயும் பயனிலையும் சேந்ததா இருக்கு. இப்ப இருக்கிற ஊருக்கும் இருக்காத ரோடுக்கும் Boardஎல்லாம் போட்டிருந்தாலும் எங்கயாவது போறதெண்டால் ஒரு சந்தீல நிப்பாட்டிக் “வட்டுக் கோட்டைக்கு வழி என்ன” எண்டு கேக்கிறாக்களுக்கு விடை “ துட்டுக்கு ரெண்டு கொட்டைப் பாக்கு” எண்டு வழி சொல்லிறாக்களும் இருக்கினம் ஊரில.

283 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *